‘தடை நீக்கம்’ – சீன அணுகுமுறைக்கு பிரதமர் வரவேற்பு

ஆஸ்திரேலிய மாட்டிறைச்சிமீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி தடைகளை சீனா நீக்கியுள்ளமை விவசாயிகளுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும் – என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

சீன பிரதமர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா வரவுள்ள நிலையிலேயே தடை நீக்கம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியானது.

சீனாவின் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலிய பிரதமர் வரவேற்றுள்ளார்.

அதேவேளை நண்டுகள்மீதான தடையை நீக்கிக்கொள்வதற்கான முயற்சியும் தொடரும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆஸி. மாட்டிறைச்சிமீதான தடையை நீக்கியது சீனா

ஆஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இந்த தகவலை விவசாய அமைச்சர் Murray Watt  இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஐந்து ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பீஜிங் இவ்வாறு தளர்த்தியுள்ளது.

தவறான லேபிளிங், சான்றிதழ் குறுயீடு உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதி உரிமத்தை மேற்படி நிறுவனங்கள் இழந்தன.

இந்நிலையில் கொரோனாவின் தோற்றம் தொடர்பில் சீனாவிடம் ஸ்கொட் மொரிசன் அரசு விசாரணைiயை வலியுறுத்தியதால் பீஜிங்கிற்கும், கன்பராவிற்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய பொருட்கள்மீதான தடையை சீனா அமுல்படுத்தியது.

லேபர் ஆட்சியின்கீழ் சீனாவுடனான உறவு மேம்பட்டுவந்த நிலையிலேயே தடை நீக்கப்பட்டுள்ளது.

சீன பிரதமர் விரைவில் ஆஸ்திரேலியா வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஜனாதிபதிக்கு ஐ.நாவில் அஞ்சலி: அமெரிக்கா புறக்கணிப்பு: ஆஸி. நழுவல்!

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஐ.நா. பொதுச்சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்படவுள்ள நிலையில் குறித்த நிகழ்வை அமெரிக்கா புறக்கணிக்கவுள்ளது. ஆஸ்திரேலியா நிகழ்வில் பங்கேற்காமல் இருக்கும்.

உலக தலைவரொருவர் உயிரிழந்தால் அதற்கு ஐ.நா. பொதுச்சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டும்.
அந்தவகையிலேயே இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், நிகழ்வை புறக்கணிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.

அஞ்சலி நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்பதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கலைப்பு

பிரிட்டன் நாடாளுமன்றம் இன்று(30) கலைக்கப்பட்டது.

எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

குடியேற்றக் கைதிகளை கண்காணிக்க ட்ரோன்கள்!

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் காலவரையற்ற தடுப்புகாவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 153 குடியேற்றக் கைதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றது என்று குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்தார்.

இரு கைதிகளுக்கு மின்னணு கணுக்கால் அணிய தேவையில்லை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மேலதிக கண்காணிப்பு பொறிமுறை பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

குடியேற்றக் கைதிகள் விவகாரம் தொடர்பில் குடிவரவு அமைச்சர் தற்போது கடும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

ரஷ்ய ஆக்கிரமிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி – ஆஸி. பிரதமர் பேச்சு

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியும், ஆஸ்திரேலிய பிரதமரும் நேற்றிரிவு தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர்.

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பில் சுவிட்ஷர்லாந்தில் அமைதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டுக்கு அமைச்சர்கள் மட்டத்திலான தூதுக்குழுவை அனுப்புமாறு பிரதமரிடம், உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த மாநாட்டில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என்பதை பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுன் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பங்கேற்பாரா என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பிரதமருக்கும் உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அமைதி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பங்கேற்பதை எதிரணி ஆதரிக்கும் என்று லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிராகரிப்பு

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறுகோரி கிறீன்ஸ் கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தார்மீகப் பொறுப்பு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது என சுட்டிக்காட்டியே கிறீன்ஸ் தலைவர் மேற்படி யோசனையை முன்வைத்தார்.

நோர்வே, ஸ்பெயின் மற்றும் அயல்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையிலேயே, அந்த வழியை ஆஸ்திரேலியாவும் பின்பற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
80 இற்கு ஐந்து வாக்குகள் என்ற அடிப்படையில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகள் தீர்வு முன்மொழிவையே ஆஸ்திரேலியா ஆதரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.05.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எந்த அளவுக்கு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். நிறைய பேருக்கு நல்லது செய்யக்கூடிய வகையில் சிந்தித்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். அதாவது எதிரிகள் முன்பு வெற்றி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன விஷயத்தை கூட நுணுக்கமாக யோசித்து சிந்தித்து செயல்படுத்துவீர்கள். அதனால் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலையில் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உடல் அசதி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளோடு கருத்து வேறுபாடு இருக்கும். குழந்தைகளோடு அதிகமாக வாக்குவாதம் செய்யாதீர்கள். பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்களை தொடங்க இன்றைய நாள் சாதகமாக அமையும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிரிகளோடு நேரடியாக சண்டை போட வேண்டாம். வாக்குவாதம் செய்யவும் கூடாது.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கடைசி நிமிடத்தில் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். பெரிய பிரச்சனை வரக்கூடிய சூழ்நிலை நிலவும். ஆனால் அந்த பிரச்சனையின் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. நிறைய அனுபவ பாடம் கிடைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க கூடாது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் கோர்ட்டு கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்து போகும். பெரிய பாதிப்புகள் இருக்காது. வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தவும்.

‌விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அசதி நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு இரட்டிப்பாக இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் சேர்த்து உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். இன்று மாலை வீட்டிற்கு நேரத்திற்கு செல்வது சந்தேகம்தான். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை இருக்காது. உங்களுடைய நல்ல மனதை எல்லோரும் புரிந்து கொண்டு நடப்பார்கள். இரவு நல்ல தூக்கம் வரும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைப்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு நட்பு ஒன்று சேரும். சுப செலவு உண்டாகும். கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். எல்லா இடத்திலும் தேவையில்லாமல் நீங்களே சண்டைக்கு போவீர்கள். இதனால் உங்களுக்கு சின்ன சின்ன கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ கொடுக்கவும் கூடாது ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று பிக்கல் படங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு இருக்கும். டார்கெட் பிரஷர் மூலம் சில பேர் ரொம்பவும் மனவழுத்தத்திற்கு ஆளாகலாம். ரொம்ப கவலை படாதீங்க. மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். குடும்பத்தோடு மிச்சம் இருக்கும் நேரத்தை செலவு செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தானாக முடிவு கிடைக்கும்.

 

தேடுதல் வேட்டையில் சிக்கிய தொலைபேசி?

Samantha Murphy கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக தெற்கு உள்ள அணையில் இன்று தேடுதல் இடம்பெறுகையில், தொலைபேசி என சந்தேகிக்கப்படும் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தேடுதலின்போது சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பொருட்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. பெடரல் பொலிஸாரும் இன்றைய தேடுதலில் பங்கேற்றிருந்தனர்.

தேடுதல் நடக்கும் பகுதிக்கு வரவேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

வட கொரியா ஏவிய உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்துச் சிதறியது

வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது.

உளவு செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

வட கொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரவ ஒக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வட கொரியா ஏவிய ஏவுகணை கடலில் வீழ்ந்ததாக தென் கொரியாவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன.

கடந்த நவம்பரில் வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

விரைவில் இரண்டாவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என வட கொரியா அறிவித்திருந்தது.

Samantha Murphy இன் உடலை தேடும் பணி இன்றும் முன்னெடுப்பு

கடந்த பெப்ரவரி மாதம் காணாமல்போன மூன்று பிள்ளைகளின் தாயான Samantha Murphy இன் உடலை தேடும் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.

விக்டோரியா பொலிஸார், காணாமல்போனோரை தேடும் படையினர், புலனாய்வாளர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

Samantha Murphy காணாமல்போன Ballarat  பகுதியிலேயே தேடுதல் இடம்பெற்றது.

51 வயதான Samantha Murphy கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி உடற்பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல்போனார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த பொலிஸார், கொலையாளி ஒருவரை கைது செய்தனர்.

அமைதி மாநாட்டில் பங்கேற்க ஆஸிக்கு அழைப்பு!

ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்பான அமைதி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க சுவிட்சர்லாந்தில் அமைதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இம்மாநாட்டில் பங்கேற்குமாறு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் நடுப்பகுதியில் நடைபெறும் இம்மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் சார்பில் யார் பங்கேற்பார் என்பது குறித்தும் இன்னும் தெரியவரவில்லை. பிரதமர் பங்கேற்பாரா என்பது பற்றியும் தகவல் வெளியாகவில்லை.

நாடு கடத்தல் சட்டத்தால் ‘பிரிவை’ சந்திக்கபோகும் குடும்பம்

எனது பெயர் வஷினி ஜெயக்குமார், நான் ஒரு தாய், குழந்தை பராமரிப்பு பணியாளராக பணியாற்றிவருகின்றேன். ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளேன். புதிய நாடு கடத்தல் சட்டத்தால் எனது குடும்பமும் சிதைந்துபோகும் அபாயம் உள்ளது.

இச்சட்டம் நிறைவேறும் பட்சத்தில், எனது கணவரான ரிஸ்வான் நாடு கடத்தப்படலாம். அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறவில்லையெனில், என்னையும், குழந்தைகளையும் விட்டுச்செல்ல மறுத்தால் அவர் சிறையில் அடைக்கப்படலாம்.
இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல, மனிதாபிமானமற்றது.

ஏற்கனவே 10 ஆண்டுகளாக வலி சுமந்த வாழ்க்கையை வாழ்ந்துவரும் எமக்கு இந்த புதிய சட்டம் பேரிடியாக அமைந்துள்ளது.

நான் 2012 இல் பெற்றோருடன் படகில் ஆஸ்திரேலியா வந்தேன். 2017 இல் விசா வழங்கப்பட்டது. விரைவில் குடியுரிமை கிடைக்கப்பெறும்.

2020 இல் நிஸ்வானை கரம்பிடித்தேன். அவரும் இலங்கையை சேர்ந்தவர். எங்களைபோலவே அவரும் 2012 இல் இலங்கையில் இருந்து தப்பி வந்துள்ளார். ஆனால் அவருக்கு அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டது. மேன்முறையீடு செய்தும் வெற்றிகிட்டவில்லை. இப்போது பிரிட்ஜிங் ஈ விசாவில் உள்ளார், எந்நேரத்திலும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார்.

எமக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், அனைவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். எமது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

4, 614 பாலஸ்தீனவர்களுக்கு விசா மறுப்பு

4 ஆயிரத்து 614 பாலஸ்தீனவர்களுக்கு ஆஸ்திரேலியா வருவதற்குரிய விசா மறுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் இதுவாகும் என்று பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், காசாவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்கப்படுகின்றது என்று உள்துறை அமைச்சின் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29.05.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. அதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அனுபவ சாலிகளிடம் கலந்தாலோசித்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிம்மதி பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கும் இன்று நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். இதனால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பெரிசாக பிரச்சனை இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். எதையோ இழந்தது போலவே இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கின்றான். அதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வரா கடன் வசூலாகும். சேமிப்பு அதிகரிக்கும். மனைவிக்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பரிசை கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளுக்கு தேவையான படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெற்றவர்கள் அக்கறை காண்பிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் துயரம் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அடுத்தவர்கள் உங்களுடைய மனதை புரிந்து கொள்ளாமல் பேசி விடுவார்கள். உங்களுடைய நல்ல மனது உங்களுக்கு தெரியும். ஆகவே அனாவசியமாக அடுத்தவர்களை நினைத்து இன்று கவலைப்பட்டு நேரத்தை செலவு செய்யாதீர்கள். உங்களுடைய வேலையில் அக்கறை காட்டுங்கள் நல்லதே நடக்கும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைக்காத நல்லது எல்லாம் நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடங்குவது சீட்டு கட்டுவது போன்ற நல்ல விஷயங்களை இன்று தொடங்கலாம்.

விருச்சிகம் – விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் 10 ரூபாய் முதலீடு செய்தாலும் அதில் 100 ரூபாய் லாபத்தை எடுப்பீர்கள். அந்த அளவுக்கு உங்களுக்கு இன்று அதிர்ஷ்ட காற்று வீசும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட தூர பயணம் மன சந்தோஷத்தை கொடுக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைக்கூடி வரும். பிள்ளைகளுக்கு ஸ்கூல் அட்மிஷன் போடுவது புது வேலைக்கு போவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யலாம். பெரியவர்களின் ஆசிர்வாதமும், அந்த கடவுளின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் வரும். இதனாலேயே நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும். நல்ல நண்பர்களும் கூட உங்களை விட்டு பிரிய வாய்ப்புகள் இருக்கிறது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, மாமியார் வழி உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசுங்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பகைவர்கள் கூட உங்களோடு வந்து நட்புறவு பழகுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய தகுதியும் தராதரமும் உயர்ந்திருக்கும். உங்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று யாருமே நினைக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு இன்றைக்கான நாள் கை கொடுக்கும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். நடக்கவே நடக்காது என்று இருந்த நல்ல காரியங்கள் கூட இன்று நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசவும். முன் பின் தெரியாத நட்போடு பழகுவது பிரச்சனைகளை கொடுக்கும். ஜாக்கிரதையாக இருங்கள்.

 

தாக்குதலை உடன் கைவிடவும்: இஸ்ரேலிடம் ஆஸி. இடித்துரைப்பு

ரபாமீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்துவரும் நிலையில், ரபாமீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

“ மனிதாபிமான போர் நிறுத்தம் அவசியம், அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான – ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை முன்னெடுக்க கூடாது எனவும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, ஹமாஸ் பணயக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், ஆயுதங்களை கைவிடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல்மீது பொருளாதார தடை விதிக்குமாறு ஆஸிக்கு அழுத்தம்!

காசாவில் கொடூர தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல்மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதிக்காமை தொடர்பில் எல்லைகளற்ற வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் Christos Christou கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இணங்க மறுக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதுபோல இஸ்ரேல்மீதும் நடவடிக்கை அவசியம் என வைத்தியர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் தாக்குதலில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும் Christos Christou சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

விமானத்துக்குள் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு

விமானத்துக்குள் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு

பேர்த்தில் இருந்து மெல்பேர்ணுக்கு சென்ற விமானத்தில் நிர்வாணமாக ஓடினார் எனக் கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பேர்த் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்த பின்னர், பெடரல் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
“ பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. அந்தவகையிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடையூறுக்காக பயணிகளிடம் மன்னிப்பு கோருகின்றோம்.” – என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த நபரின் செயலால் பாதிக்கப்பட்ட நபரொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

ஆஸியில் யூத எதிர்ப்பு அதிகரிப்பு

“ ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு உணர்வு தற்போது மோசமாக உள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ணில் யூத பாடசாலையொன்று தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்புலத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த பாடசாலையின் முன்பகுதியில் யூத எதிர்ப்பு வாசகங்களை இனந்தெரியாத நபர்கள் எழுதிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர், பாடசாலையின் சுவரில் எழுதப்பட்ட வாசகங்களிற்கு எங்கள் சமூகத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் இவ்வாறான உணர்வுகளிற்கு எதிராக ஆஸ்திரேலியா குரல்கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு லேபர் கட்சி எம்.பி. கோரிக்கை!

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் Fatima Payman வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலுடனான வர்த்தக உறவை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரபாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள Fatima Payman, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் இலக்கு வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.