சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

குயின்ஸ்லாந்து Gold Coast பகுதியில் நண்பர்களுடன் இணைந்து தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பெண்ணே, ‘Drug cocktail’ சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Danielle Whittaker என்ற குறித்த பெண் தனது ஆறு நண்பிகளுடன் இணைந்து தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாட தயாராகியுள்ளார். இதற்காக ‘பார்ட்டி’யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ‘Drug cocktail’ அருந்திய பெண்கள் சுவாசிக்க சிரமப்பட்டுள்ளனர். இதனையடுத்து சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.

எழுவரில் மூவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட 43 வயது பெண் தற்போது குணமடைந்துள்ளார். மற்றைய பெண்ணும் நிலையான நிலையில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *