‘சுதந்திர காசா’ – அமெரிக்க தூதரகம்மீது நூதன முறையில் தாக்குதல்!

சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘பெயின்ட்’களை பயன்படுத்தியே நூதன முறையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீதியில் உள்ள கட்டடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது

கண்ணாடிகளில் “சுதந்திர காசா” என எழுதப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதனை தடுப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *