பொலிஸ் விசாரணைக்கு அஞ்சி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் பலி!

சிட்னியில் பொலிஸ் சோதனைக்கு அஞ்சி, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய 20 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.

இன்று மதியம் 2.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டாலும், நிறுத்தாமல் குறித்த இளைஞன் வேகமாக பயணித்துள்ளார்.

இந்நிலையில் காரொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இளைஞன் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விசாரணை இடம்பெறுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *