சிட்னியில் நீரில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்பு

சிட்னி மேற்கு பகுதியில் உள்ள Parramatta ஏரியில் மூழ்கி காணாமல்போயிருந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இரவு 7.55 மணியளவில் எரியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Carlton பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து நீராடும்போது அவர் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மரணத்தில் சந்தேகம் இல்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *