“இராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துக” – ஆஸி. நீதிபதி வலியுறுத்து

காசாவில் இஸ்ரேல்முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியான Hilary Charlesworth வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரேயொரு ஆஸ்திரேலிய பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் பேரழிவு இடம்பெறுகின்றது எனவும், அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, காசாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு தொடுத்தது. இதற்கமைய இனப்படுகொலை நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *