‘ஆஸி. பிரஜை பலி’ – இஸ்ரேலிடம் விளக்கம்கோர ஆஸி. முடிவு!

காசாவில் நடந்த வான்வழி தாக்குதலில் ஆஸ்திரேலிய மனிதாபிமான செயற்பாட்டாளர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிடம் ஆஸ்திரேலியா விளக்கம் கோரியுள்ளது.

கன்பராவில் உள்ள இஸ்ரேல் தூதுவர் வரவழைக்கப்பட்டு இது தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் இன்று அறிவித்தார்.

“ ஆஸ்திரேலிய தொண்டு சேவையாளர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஏற்கமுடியாதது. இது தொடர்பில் முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம்.” – எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

காசாவில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் உட்பட நான்கு மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *