ஈஸ்டர் வார இறுதியில் விக்டோரியாவில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள்…..!

ஈஸ்டர் வார இறுதியில் விக்டோரியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘ ‘Nexus’ ஒப்பரேஷனின்கீழ், 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அனுமதி பத்திரமின்றி வாகனம் ஓட்டியமை , சீட் பெல்ட் அணியாமை, தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் ஓட்டுதல் தொடர்பிலேயே அதிகளவாக போக்குவரத்து விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டிய 4 ஆயிரம் சாரதிகள் பிடிபட்டுள்ளனர். உரிமம் இல்லாத, பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டிய குற்றச்சாட்டின்கீழ் 1,200 பேர் பிடிபட்டனர்.

வார இறுதி விடுமுறையில் விபத்துகளில் மூவர் பலியாகியுள்ளனர். அத்துடன் விக்டோரியாவில் பாதசாரிகளின் இறப்பு விகிதமும் இரட்டிப்பாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *