இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (05.03.2023)

மேஷம் – மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருக்கிறது, பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவாலான வேலைகள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் நல்ல அனுபவமாக அமையும்.

ரிஷபம் – ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ரகசியங்களை வெளியில் சொல்வதில் எச்சரிக்கை தேவை. மூன்றாம் நபர்களிடமிருந்து கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கற்பனைகளை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம் – மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.

கடகம் – கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது குடும்பத்தில் உணர்ச்சி பெருக்கெடுக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே காதல் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்ய திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியம் காலதாமதம் ஆகும்.

சிம்மம் – சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள முயற்சி செய்வது உத்தமம். அலட்சியம் ஆபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வு எடுப்பீர்கள்.

கன்னி – கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பகைவர்களும் நண்பர்களாக கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய பேச்சில் இனிமை காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலைச்சலை சந்திக்கலாம்.

துலாம் -துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயல் சிறப்பாக அமையக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வராத பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர விரயம் உண்டாகும்.

விருச்சிகம் – விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். சுப காரிய பேச்சு இழுபறி ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எவரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் பணப்புழக்கம் காணப்படும்.

தனுசு – தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கருத்துக்களை தைரியமாக முன் வைப்பது நல்லது. எவரையும் எதிர்த்து குரல் கொடுக்கும் துணிச்சல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யும் செயலை திட்டமிட்டு செய்யுங்கள்.

மகரம் – மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உணர்ச்சி மிகுந்த நல்ல நாளாக இருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவைவிட செலவுகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வீர்கள்.

கும்பம் – கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மீனம் – மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் இருந்து நற்செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபத்தை இரட்டிப்பாக காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.

குளிரினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடு குளத்தின் 101 ஆண்டு நிறைவில் 101 பானைகளில் பொங்கல்

கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16) 101 பானைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் வருடந்தோறும் இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் , மாவட்ட நீர்ப்பாசன பிரதம எந்திரி இராஜகோபு, பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதசந்திரன் , விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர், கமக்கார அமைப்புகளின் பிரநிதிகள், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.