உலகளவில் மரணமாஸ் காட்டிய தமிழ்! (வீடியோ இணைப்பு)

எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்று சொல்லுமளவுக்கு தமிழும் தமிழர்களும் உலகெங்கும் வியாபித்துள்ளனர்.

அதன்படி, அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் பாடலுக்கு நடனமாடிய இளைஞர்கள் உலக அரங்கில் தடம்பதித்துள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான America’s got talent என்ற நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு சாதனையாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதில், நடனமாடுவது, பாடுவது, மாயா ஜாலம் செய்வது எனப் பல்வேறு வியக்க வைக்கும் திறமைகளை இந்த மேடையில் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த we unbeatable என்ற நடனக் குழு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ பாடலுக்கு அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அரங்கில் இருந்தவர்கள் மாத்திரமல்லாது, தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களும் we unbeatable நடன குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இந்நிகழ்ச்சியில் we unbeatable பங்கேற்ற காட்சிகளையும் இணையதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குளிர்கால உடல் பராமரிப்பு!

காலநிலைக்கேற்ப உடல் நிலைகளும் மாறும். அதற்கேற்றாற்போல் உடல் பராமரிப்பின் தன்மைகளையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட சில வகைகளில் பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.

*சருமத்துக்குப் பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.

*குளிர்ந்த காற்று முகத்தில் படும்போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக்கூடும்.

*குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் கிறீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

  • பேசியலைத் தவிர வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும்.
  • அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.
  • நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.

பொடுகு நீங்க….!

பொடுகு தலையில் வந்து சேர்ந்துவிட்டாலே அது தொல்லைதான். அந்தத் தொல்லையை நீக்க பல வழிகள் உள்ளன. அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

மிளகுத்தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி தலைச் சருமத்துக்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊறவிட்டு, காலையில் எழுந்ததும் தலையை ஷம்பு கொண்டு அலசவேண்டும்.

சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் தலையை நன்றாகக் கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சைச் சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும். அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பளபளக்கும்.

முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.