“உலகின் மிக வேகமான பெண்ணாக அமெரிக்கர்”

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Sha’Carri Richardson, உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார்.

ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள உலக சாம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

போட்டியை அவர் 10.65 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

இது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும்.

கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் ஷெலீ-ஆன் ப்ரேஸர் – ப்ரைஸ் இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்தார்.

அவர் போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் Shelly-Ann Fraser-Pryce இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்தார். அவர் போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

நீலக்குருவிக்கு விடை கொடுத்தது டுவிட்டர்…!

Twitter ஐ ரீ பிராண்ட் செய்யும் வகையில் அதன் உரிமையானரான Elon Musk லோகோவை ‘X’ என மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

Elon Musk கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்Twitter நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்.

வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்ததாக Elon Musk விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அடுத்த அதிரடியாக டுவிட்டரின் நீல நிற குருவி லோகோவை மாற்ற இருப்பதாக நேற்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே புதிய லோகோ வெளியாகியுள்ளது. டுவிட்டரை ரீ பிராண்ட் செய்யும் வகையில் Elon Musk அதன் லோகோவை ‘X’ என மாற்றுவதாக அறிவித்து இந்த லோகோவை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் டுவிட்டரின் தனித்துவமான லோகோவான நீல குருவிக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.

இறந்த மகளைச் சந்தித்த தாய்; நெகிழ வைத்த சம்பவம்! (வீடியோ இணைப்பு)

நம்முடன் கூட இருந்து அன்புடன் பழகியவர்கள் இறந்துவிட்டால் அதனால் நாம் படும் வேதனைகள் அளவிடமாடியாதவை.

இவ்வாறு நம்மை விட்டுப் பிரிந்த அன்புக்குரியவரை கனவிலோ, நிழல் உலகிலோ சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால், நம்மில் எத்தனை பேர் அதைத் தவறவிடுவோம்?

கண்டறியப்படாத ஒரு நோயானால் பாதிக்கப்பட்டு 2016ஆம் இறந்த தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாகச் சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரிய ”Meeting You” திரைக்குழு.

கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி. என்ற நிறுவனம், குறித்த சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமானதாக வடிவமைத்துள்ளது.

சிறப்புக் கையுறை அணிந்து, தனது மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவம் குறித்துத் தெரிவித்த ஜாங்,

“இது எனது கனவு. அந்தக் கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்றார்.

நெகிழ்ச்சியான இந்தச் சம்பவத்துக்குப் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல், இதை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.