கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலை: சந்தேக நபருக்கு பிணை மறுப்பு!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர் அறுவரை கொலை செய்த 19 வயது இ​ளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் நால்வர் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரால் தாக்கப்பட்ட, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வழக்கினை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் சுட்டுக்கொலை! கனடாவில் பயங்கரம்!!

நான்கு குழந்தைகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த அறுவர் கடனாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுவர் உயிரிழந்துள்ளனர் என்று ஒட்டாவா பகுதியின் மேயர் உறுதிப்படுத்தியுள்ளார் . “மிகவும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவா புறநகர்ப் பகுதி யான பார்ஹேவனில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் மற் றும் அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் என அறுவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை படுகாயங்களுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குடும் பத்தினர் அண்மையில்தான் இலங்கை யிலிருந்து கனடாவுக்கு வந்துள்ளனர் என்றும் ஒட்டாவா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

35 வயதான தர்ஷனி பண்டார நாயக்க கம வல்வே அவரது பிள்ளைகளான இனுகா விக்கிரமசிங்க (வயது 07), அஷ்வினி விக்கிரமசிங்க (வயது 04), றின்யான விக்ரமசிங்க (வயது 02) மற்றும் இரண்டு மாதங்களேயான கெல்லி விக் கிரமசிங்க ஆகியோரும், 40 வயதான அமரக்கோன் முதியான்சேலா ஜீ காமினி அமரக்கோன் என்பவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அமரக்கோன் என்பவர் அந்தக் குடும்பத்தின் உறவினர் என்றும், வீட் டில் வசித்து வந்ததார் எனவும் கூறப்பட் டது. பெண்ணின் கணவர் பலத்த காயங் களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 19 வயதான வெப்பிரியோ டீ சொய்ஸா என்பவரே மேற்படி சம்பவம் தொடர் பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் இலங்கைப் பிரஜை என்றும், அவர் கனடாவில் மாணவனாக இருந்தார் என்றும் ஒட்டாவா பொலி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.

மகாராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கி.மீ, வரிசையில் மக்கள் காத்திருப்பு

எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீட்டரளவில் நீண்டு காணப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப் போலவே குழந்தைகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இரவு பகல் பாராது மகா ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

மகாராணியின் உடல் லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்ட பின்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர். இதில் பலர் கண்ணீர் சிந்தியபடி மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

13 இடங்களில் கத்திக்குத்து – 10 பேர் பலி! கனடாவில் பயங்கரம்!!

கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

13 இடங்களில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5:40 மணிக்கு (1140 GMT) மணிக்கு முதல் கத்திக் குத்து சம்பவம் பதிவானது. பின்னர் தொடர்ந்து 13 இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிஸார் 10 பேரை சடலங்களாக மீட்டனர்.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனின் (James Smith Cree Nation) பழங்குடி சமூகம் மற்றும் சஸ்காட்சுவான் மாகாணத்தில் அருகிலுள்ள வெல்டன் நகரத்தில் 10 பேர் இறந்து கிடந்தனர் என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும். சிறிய காயங்களுக்கு உள்ளான மேலும் சிலர் தாங்களாகவே மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இது பயங்கரமான மற்றும் இதயத்தை நொருக்கும் தாக்குதல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என தெரிவித்து, அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

சுமார் 30 வயதை நெருங்கும் இவர்கள் இருவரும் கடைசியாக கறுப்பு நிற நிசான் ரோக் காரில் பயணித்ததாகவும், தாக்குதல்கள் நடந்த இடத்திலிருந்து தெற்கே 320 கி.மீ. தொலைவில் உள்ள சஸ்காட்சுவான் மாகாண தலைநகரான ரெஜினாவில் கடைசியாக காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நபர்கள் மேலும் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபாவிலும் இவ்வாறான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. பின்னர் சஸ்காட்சுவான் மாகாணம் முழுவதும் இந்த எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்களை அடுத்து 2,500 மக்கள் தொகை கொண்ட ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பழங்குடி தலைவர்கள் உள்ளூர் அவசர கால நிலையை அறிவித்துள்ளனர்.

கனடா இந்து வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம்

கனடாவில்  இந்து வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம் (Canadian Hindu Chamber of Gommerce) செய்யப்பட்டுள்ளது. இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,நேபாளம்,கரிபியன் தீவுகள், மற்றும் தென் கிழக்காசிய நாடுக ளிலிருந்து குடியேறிய  பிரதிநிதிகள் இந்த சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

கனடா இந்து வர்த்தக சங்கத்தின் தலைவராக ஒன்ராறியோவில் வசிக்கும் நரேஷ் சௌடா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொவிட் அச்சம் காரணமாக இந்த அங்குரார்ப்பண  கூட்டம் நிகழ்நிலை ஊடாகவே நடைபெற்றது.

கனடாவிலுள்ள இந்து வர்த்தகர்களின் நலன்களை மேம்படுத்துவதே இந்த சங்கத்தின் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சங்கத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூல், ஒன்ராறியோ மாநில பிரீமியர் டௌக் போர்ட் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச்செய்தியில், கனடாவிலுள்ள இந்து சமூகம் கனேடிய வர்த்தகத்தில் கணிசமான பங்கை ஆற்றியுள்ளது, கனடா இந்து வர்த்தக சங்கம் கனடாவி ன் அபிவிருத்தியில் இன்றியமையாத ஒரு அங்கமாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் வாழ்த்துச்செய்தியை லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா வாசித்தார்.

வெள்ளை மாளிகையை மிரட்டும் கும்பல்

அமெரிக்காவை தளமாக கொண்ட கிறிஸ்தவ மனித நேய அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் ஹெய்ட்டி நாட்டு கொள்ளை கூட்டத்தால்  பணய கைதிகளாக பிடிக்கப்பட்ட்டு உள்ளனர்.
இவர்களில் 16 பேர் அமெரிக்கர்கள். ஒருவர் கனேடியன். பணய கைதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தர வேண்டும் என்று கோரி உள்ளனர்.
தன்னார்வ தொண்டர்கள் அநாதைகளுக்கு இல்லம் கட்டுகின்ற பணியில் ஈடுபட்டு இருந்தபோது கடத்தல் இடம்பெற்று உள்ளது.
இவர்களின் விடுதலைக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று வெள்ளை மாளிகையின் ஊடக பிரதானி தெரிவித்து உள்ளார். 
கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தை அமெரிக்க தூதரம் தொடர்பு கொண்டு உள்ளது. 

தேர்தலில் வைரஸின் செல்வாக்கு – கனடாப் பிரதமரது பிரசாரம் ரத்து

உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவே கனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று தடுப்பூசி, மாஸ்க், பொது முடக்கங்கள்
போன்றவற்றை எதிர்த்து வருகின்ற பலர் ஒன்று கூடிக் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்ததை அடுத்துப் பாதுகாப்புக்
காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

ரொரன்ரோக்கு வடமேற்கே போல்ரன் (Bolton) என்ற இடத்தில் வெள்ளியன்று மாலை லிபரல் தலைவர் ஜஸ்டின் ரூடோ
தனது கட்சி ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் முன் உரையாற்றவிருந்தார்.

அச்சமயத்திலேயே தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் அவ்விடத்தில் கூடி அவரது கொரோனாக் கட்டுப்பாட்டு நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

கை நடுவிரல்களை உயர்த்தியவாறு சிறிய ஒலிபரபப்பிகளில் நாஸிக்களது ( Nazis) சுலோகங்களையும் எழுப்பினர்.
தங்கள் குழந்தை குட்டிகளுடன் காணப் பட்ட சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ரூடோவுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பொலீஸார் அவர்களைத் தடுக்க முயன்றதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாகக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. தனது உரையைச் செவிமடுக்க வந்திருந்தவர் களது சுகாதாரப் பாதுகாப்புக் கருதியே கூட்டத்தை நிறுத்தியதாகப் பிரதமர்ரூடோ பின்னர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் இந்தளவு தீவிரமான கோபத்தின் வெளிப்பட்டை இதற்கு முன்னர் எப்போ தும் கண்டதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உட்பட – நம் எல்லோரையுமே கொரோனா மிக மோசமாகப் பாதித்துள்ளது. மக்கள்
தொகையில் ஒரு பிரிவினரின் தற்போதைய இந்த ஆத்திரத்தை நாங்கள் இரக்கத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் வைரஸ் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி தான் ஒரே வழி என்று அறிவியல் கூறுகிறது.

அந்த உண்மைக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கவேண் டிய வேளை இது “-இவ்வாறு அங்கு அவர்
மேலும் தெரிவித்தார்.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது பெரும்பான்மையை உறுதி செய்கின்ற இலக்குடன் குறித்த தவணைக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவேதேர்தலை அறிவித்துள்ளார். செப்ரெம்பர்20 திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்
காக அரசியல் கட்சிகள் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில தினங்களாக ரூடோவின் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் அவருக்கு எதிர்ப்புத் தெரி விக்கும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளன.

தொற்று நோய்க்கு மத்தியில் பொதுத்தேர்தலை அறிவித்து ஐந்து வார காலம்பிரசாரங்களையும் நடத்த எடுத்துள்ள முடிவுக்காக எதிர்க் கட்சிகள் அவரது லிபரல் அரசு மீது கடும் விமர்சனங்களைமுன்வைத்து வருகின்றன.

தீவிரமான தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்ற திட்டங்களோடு பொதுத் தேர்தலை
சந்திக்கின்ற ஜஸ்டின் ரூடோவின் உத்திவிசப் பரீட்சை போன்றது என்று சிலர்கருதுகின்றனர். பிரான்ஸின் மக்ரோன்
அரசைப் போன்று அவரும் அரசுப் பணியாளர்களுக்கும் ரயில், விமானம், கப்பல்பயணங்களுக்கும் கனடியர்களுக்குத்
தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்ற திட்டங்களுடன் தேர்தலை எதிர்கொள்கிறார்.

போதிய மருத்துவக் காரணங்கள் இன்றி தடுப்பூசியைத் தவிர்ப்போருக்கு எதிராகநடவடிக்கைகளை எடுப்பதற்கு அவரதுகட்சி தயாராகிறது.

பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராகியபழமைவாத கட்சியின் (Conservative)தலைவர் எரின் ஓரூல் (Erin O’Toole) தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதை “ஆபத்தான, பொறுப்பற்ற” நடவடிக்கைஎன்று விமர்சிக்கிறார்.

அரசுப்பணி யாளர்களுக்கும், பயணங்களுக்கும் அன்றாட வைரஸ் பரிசோதனைகளே போதும் என்ற கொள்கையையே அவர்வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் கனடா மக்கள் மத்தியில் தடுப்பூசிக்கு வரவேற்பு உள்ளது. தடுப்பூசி ஏற்றத் தகுதி உள்ளோரில் 80 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள் ளனர். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய கருத்துக் கணிப்பில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு எதிராக 78 வீதமான கனடா மக்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

          - பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

சிலிண்டர்களில் மனிதனை சிறைவைத்த கிருமி; காற்றின்றி திணறி சாகும் உலகின் இதயம்!

மரங்களில் இருந்துதான் இந்த ஒக்சிஜன் கிடைக்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஒக்சிஜனை விட, மருத்துவத்திற்குப் பயன்படும் ஒக்சிஜனின் செறிவு மிக அதிகமாகும்.  

தண்ணீரைப் புட்டிகளில் அடைத்து மற்றவர்களுடன் பகிரும் பழக்கம் 1621ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது என்று சரித்திரம் சொல்கிறது.  புனித நீர் என்கிற பெயரில், சில குறிப்பிட்ட நீரூற்றுகளிலிருந்து 17ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்க குடியேற்றவாசிகள் புட்டிகளில் எடுத்துச் சென்றார்கள்.

இப்படியான இயற்கை நீரூற்றுகள் செல்வந்தர்கள் மற்றும் உயர் வர்க்கத்தினரிடையே ஒரு நாகரீகமாக மாறியது.  அமெரிக்காவில் இப்படி தண்ணீரை புட்டிகளில் அடைத்து விற்பது ஒரு தொழிலாக 1844ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இவை எல்லாவற்றிற்கும் முன்னரே, அகத்திய முனிவர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நீரை காகம் போல் உருமாறிய பிள்ளையார் சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறாக ஓடியது என்று புராணக் கதையை சிலர் ஆதாரம் காட்டலாம்.  

நான் இன்னமும் தலைப்பிற்கே வரவில்லை.  அதற்கு முன் சில அடிப்படை விடயங்கள் சொல்லப்பட வேண்டும்.

அமெரிக்காவில் Poland pring ஃப்ரான்ஸ்சில் Evian மற்றும் Perrier போன்ற நிறுவனங்கள் கனிம நீரூற்றுகளிலிருந்து வரும் நீரை புட்டிகளில் அடைத்து, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து விற்றார்கள்.

  DuPont என்ற இரசாயன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய Nathanielyeth  என்ற பொறியாளர் 1973ஆம் ஆண்டு polyethylene terephthalate (PET)) என்ற நெகிழி (plastic) உருவாக்கி, அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

 மருந்தகங்களில் விற்கப்பட்டுவந்த புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீரை, மளிகைக் கடைகளுக்கு எடுத்து வந்தது PET நெகிழியிலிருந்து தயாரிக்கப்பட்ட புட்டிகள்.

ஒரு மனிதன் உயிர்வாழ, சுத்தமான நீர் மிக அவசியம்.  அதனால்தான், அடிப்படை மனித உரிமைகளில் அதுவும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டிருக்கிறது.  புட்டிகளில் நீரை அடைத்து விற்றால், அடுத்தது என்ன?  மனிதனுக்கு மிக அவசியமான இன்னொரு பொருளான காற்றிற்கும் விலை சொல்லப் போகிறார்கள் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னரே குரல்கள் எழுந்தன.  ஆனால், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்று நினைத்து, யாரும் அதனைப் பெரிதாக எடுக்கவில்லை.

சுத்தமான காற்று என்று பொதுவாக நாம் சொல்லும் போது, மாசுக்கள் அற்ற காற்று என்பது ஒன்று.  இருந்தாலும், அதில் ஐந்தில் ஒரு பகுதி ஒக்சிஜன் – என்ற பிராணவாயு – இடம்பெற்றிருக்க வேண்டுமென்பது எல்லோரதும் விருப்பம். இந்த ஒக்சிஜன் எமக்குத் தாவரங்களிலிருந்து கிடைக்கிறது என்பது தெரியும். ஆனால், மரங்களில் இருந்துதான் இந்த ஒக்சிஜன் கிடைக்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

உலகில் உற்பத்தியாகும் 70 சதவீதமான ஒக்சிஜன் நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்து தோன்றுகிறது.  இதன் தோற்றத்திற்கு, கடல் சார் மிதவை வாழிகள் (Planktonn) மிக முக்கிய பங்காற்றுகின்றன.  அதற்காக மரங்கள் தேவையில்லை என்று நாம் சொல்ல வரவில்லை.  மரங்களை விட இந்த நுண்ணுயிர்கள்தான் ஒக்சிஜன் உருவாகுவதற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன.  

நாம் சுவாசிக்கும் காற்றின் மிகப்பெரும் பகுதி நைட்ரஜன் (அல்லது நைதரசன்) வாயுவாகும்.  ஐதரசன் மற்றும் ஹீலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகளவில் காணப்படும் வேதியியல் தனிமமான ஒக்சிஜன் எங்கும் பரந்திருக்கிறது.  வாயுவாக அல்லாமல் உலோகங்களுடனும் மற்றைய பதார்த்தங்களுடனும் இரண்டறக்கலந்து, ஒக்சைட் வடிவில் காணப்படுகிறது. எமது உடலில் அதிகப்படியாக இருக்கும் உலோகம் (பலரும் நினைப்பது போல் இரும்பு அல்ல) கல்சியம், ஒக்சிஜனுடன் கலந்துதான் காணப்படுகிறது.

இதை முதலில் தனிமைப்படுத்தி அறிந்து கொண்டவர் என்ற பெருமை, 1775 ஆம் ஆண்டு இதைப்பற்றி “An Account of Further Discoveries in Air” என்ற கட்டுரை எழுதிய துழளநிh Pசநைளவடநல அவர்களுக்குச் சென்றாலும்,  1772ஆம் ஆண்டே சுவீடன் நாட்டு விஞ்ஞானி Carl Wilhelm Scheele சில பரிசோதனைகள் மூலம் காட்டியிருந்தார்.  இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரை 1777ஆம் ஆண்டுதான் வெளியாகியது.

இந்த இரண்டு விஞ்ஞானிகளைக் காட்டிலும், Antoine Lavoisier என்ற ஃப்ரெஞ்ச் விஞ்ஞானிதான் ஒக்சிஜன் என்பதன் இரசாயனப் பாவனையை முதன் முதலில் இலகுவாக விளக்கியவர்.  நாம் பயன்படுத்தும் மெட்ரிக் அளவு முறைக்கு வழி சமைத்தவர்களில் இவரது முக்கிய பங்கும் இருக்கிறது. இதற்கெல்லாம் அவருக்குக் கிடைத்த பரிசு, அவரது 50ஆவது வயதில் – 1794ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி – ஃப்ரெஞ்ச் புரட்சிவாதிகளால் அவரது தலை துண்டிக்கப்பட்டது.

நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியமான விடயங்களில் ஒக்சிஜன் மிக முக்கியமானது என்பதைக் கண்டறிந்த ஆரம்ப விஞ்ஞானிகளில் ஒருவரான Antoine Lavoisier  இறப்பதற்கு ஒக்சிஜன் காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், கடந்த ஒன்றரை வருடங்களாக மனித குலத்தில் பலர் உயிரிழக்க ஒக்சிஜன் ஒரு காரணமாக இருக்கிறது.  

ஒரு நுண்ணுயிர், இல்லை அதற்கு உயிரே இல்லை,  இருந்தாலும் மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல்லி வருகிறது.

மனிதன் உயிர் வாழ, ஒக்சிஜன் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.  சமீபத்திய வாரங்களில், COVID-19  தொற்று மிக வேகமாக இந்தியாவில் பரவியதைத் தொடர்ந்து, அதன் முக்கியத்துவம் இன்னும் பன்மடங்கு பெரிதாக வெளிப்படுத்தப்படுகிறது.  இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு சிறப்பு புகையிரதங்கள் ஒக்சிஜனை எடுத்துச் செல்கின்றன.  2019ஆம் ஆண்டு மட்டும் 5 மில்லியன் கன மீட்டர் (cubic meter) தொகை ஒக்சிஜனை ஏற்றுமதி செய்த இந்தியா, தனது மக்களின் சுவாசத் தேவைக்கு ஒக்சிஜன் கிடைக்காமல் திண்டாடுகிறது.

இந்தியா மட்டுமல்ல,  COVID-19 தொற்றுநோய் காரணமாக, பிரேசில், பெரு, நைஜீரியா, ஜோர்டன், இத்தாலி போன்ற வளர்ந்துவரும் நாடுகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளன.

இந்தப் பற்றாக்குறைகள் எதிர்பாராத ஒன்றல்ல.  ஆனால், மருத்துவமனைகளில் எவ்வளவு ஒக்சிஜன் தேவைப்படும், அந்தத் தேவையை எப்படி நாம் கையாளலாம் என்பதை சரியாகக் கணிக்க முடியாமல்தான் பல மருத்துவமனைகள் திண்டாடுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஒக்சிஜனை விட,  மருத்துவத்திற்குப் பயன்படும் ஒக்சிஜனின் செறிவு மிக அதிகமாகும்.  

எமது வளி மண்டலம் பெரும்பாலும் நைதரசன் வாயுவால் நிரம்பியுள்ளது.  சுமார் 21 சதவிகிதம் மட்டுமே ஒக்சிஜன் வாயுவாகும்.  மருத்துவ ஒக்சிஜன் குறைந்தபட்சம் 82 சதவிகிதம் தூய ஒக்சிஜன் ஆகும்.  மருத்துவ ஒக்சிஜன் – பொதுவாக – ஒரு வேதியியல் செயல்முறை மூலம் பெறப்படுகிறது.  அதன் நவீன பயன்பாடு, முதலாம் உலகப் போருடன் ஆரம்பமாகியது என்பது வரலாறு.

Mustard Gas  என்று பொதுவாக அழைக்கப்படும் Sulfur mustard  என்ற வேதிப் பொருளை, ஜேர்மனியர்கள் ஐரோப்பாவில் பயன்படுத்தினார்கள்.  ஒக்சிஜன் செறிந்த காற்றை நேரடியாக சுவாசிக்க வைப்பதன் மூலம், இந்த வேதிப் பொருளை சுவாசித்த படைவீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.  

அதேபோல, COVID-19  தொற்று ஏற்பட்டவர்கள் சுவாசிக்க சிரமப்படும்போது மருத்துவ ஒக்சிஜன் அவர்களது உயிர்காப்பு நண்பனாகிறது.  COVID-19  தொற்று ஏற்பட்டு Pneumonia போன்ற நுரையீரல் அழற்சி அல்லது அது போன்ற சுவாச நோய்களுக்கு ஒக்சிஜன் சிகிச்சை மிகவும் முக்கியமானது.  ஒருவரின் இரத்தத்தில் உள்ள ஒக்சிஜனின் அளவு குறைந்துவிட்டால், உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்துவிடும். இதுவே  COVID-19  தொற்று ஏற்பட்டவர் மரணிக்கவும் காரணமாகிறது.

ஒக்சிஜன் ஒருவருக்குத் தேவைப்பட்டபோது கிடைக்குமா, இல்லையா என்பது பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது.  இருப்பிடத்தைப் பொறுத்து ஒக்சிஜன் விநியோக அமைப்புகள் வித்தியாசப்படுகின்றன. மருத்துவ நிலையம் சிறியதா – பெரியதா, நகர்ப்புறத்தில் உள்ளதா அல்லது கிராமப்புற சூழலில் அமைந்துள்ளதா மற்றும் அதிக வருமானம் கொண்ட சமூகமா – இல்லையா என்பதைப் பொறுத்து இது மாறுபடுகிறது.

உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார வசதிகள், பாரிய ஒக்சிஜன் தாங்கிகளை நம்பியுள்ளன.  இந்த அமைப்பில்,  மருத்துவமனைகளிலுள்ள ஏராளமான தொட்டிகளில் ஒக்சிஜன் திரவ நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.  தேவைக்கேற்ப, ஒக்சிஜன் குழாய்கள் மூலம் மருத்துவமனையின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்த வசதி செய்யப்பட்டிருக்கும்.

இந்த அமைப்பை உருவாக்க அதிக செலவாகும் என்பதால்  சிறிய மருத்துவ நிலையங்களில் இவற்றை நாம் பார்ப்பது அரிது.  அத்துடன், ஒக்சிஜன் தொட்டிகளை நிரப்புவதற்கு சந்தையில் ஒப்பீட்டளவில் ஏகபோக உரிமையைக் கொண்ட எரிவாயு நிறுவனங்களுடன் உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற காரணத்தால், வளர்ந்துவரும் நாடுகளில் இப்படியான வசதி மிகக் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக,  கிராமப்புற அல்லது வருமானம் குறைந்தவர்கள் வாழுகின்ற சமூகங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பொதுவாக சிலிண்டர்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.  இவற்றையும் எரிவாயு நிறுவனங்கள்தான் பொதுவாக நிரப்புகின்றன.  இந்த சிலிண்டர்களில் ஒக்சிஜன் அதிக அழுத்தத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சிலிண்டர்கள் கனமானவை என்ற காரணத்தால், மிகவும் ஆபத்தானவை. பல இடங்களில் சிலிண்டர்களால் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.  அது தவிர, ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் மூலம் ஒரு வயதுவந்த நோயாளிக்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் போதுமான ஒக்சிஜனை மட்டுமே வழங்க முடியும்.

இவற்றிற்கும் மேலாக, எமது காற்றிலிருக்கும் ஒக்சிஜனை செறிவூட்டுவதன் மூலமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும்.  Oxygen concentrator எனப்படும் ஒக்சிஜன் செறிவூட்டிகள் 1970ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளன.  இந்த இயந்திரங்களில் zeolite  எனப்படும் படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  காற்றிலிருந்து நைதரசன் வாயுவை இந்தப் படிகங்கள் உறிஞ்சி, செறிவூட்டப்பட்ட ஒக்சிஜனை நாசி முனைகளுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் வழியாக நோயாளிக்கு வழங்குகின்றன.  பொதுவாக இந்தக் கருவி மூலம் இரண்டு நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்க முடியும். ஆனால் அவை இயங்குவதற்குத் தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படுகிறது.  இப்போது அவற்றின் சிறிய கருவிகள் தனி ஒருவர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய வகையில் மின் கலம் மூலமோ,சூரிய ஒளியினாலோ இயக்கப்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.

COVID-19  தொற்றுநோய் அதி வேகமாகப் பரவ பரவ, அதனைக் கட்டுப்படுத்த சில நாட்டு அரசுகள் கவனக்குறைவுடன் செயல்படுவதால் அல்லது மூட நம்பிக்கையுடன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனைகள் போல இருப்பதால்,ட இந்த ஒக்சிஜன் கருவிகளைத் தாமே பெற்று வீட்டிலேயே மருத்துவம் பார்க்கலாம் என்று பலர் தயாராகிவிட்டார்கள்.  

தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்றார்கள்…. நாங்கள் வாங்கினோம்.  நல்ல காற்றை சுவாசிக்க ஒரு கருவியை விற்கிறார்கள்இ நாங்கள் இப்போது வாங்குகிறோம்….. அடுத்தது சூரிய ஒளிக்கும் அந்த நிலை தோன்றுமா?

கனடாவாழ் யாழ். இளைஞர்களால் மட்டக்களப்பில் செய்யப்பட்ட உதவி!

கனடா கராஜ் போய்ஸ் சமூக மேம்பாட்டுக் கழகத்தினரால் வாழைச்சேனை – வாகனேரிப் பகுதியில் வாழ்வாதரத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு கடை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட குறித்த கடையானது, சமூக சேவகர் கிருஷ்ண பிள்ளையால் பெயர் பலகை திரை நீக்கம்செய்யப்பட்டும், பிரதேசசபை உறுப்பினர் சேகரால் நாடா வெட்டியும் திறந்து வைக்கப்பட்டு
உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது .

கனடாவில் வசிக்கும் யாழ். மட்டுவில் – கைதடி பிரதேச தமிழ் இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிதி மூலம் இந்த உதவி மட்டக்களப்பு மண்ணில் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் திருமணமானவர் உட்படஇரு தமிழர்கள் கனடா விபத்தில் பலி!

கனடாவில் நேற்றிரவு (04) – கனடா நேரப்படி 03ஆம் திதிகதி இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் அண்மையில் திருமணமானவர் என அறியமுடிகின்றது.

ஓடி சீடான் காரொன்றில் மூவர் சென்றுகொண்டிருந்தபோது, கார் வீதியை விட்டு விலகிச் சென்று அருகே நின்ற மரத்துடன் மோதியுள்ளது. இவ்விபத்து கனடாவின் ஒன்டாரியா – புளூ மௌண்டைன் நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில்,இதில் இருவர் பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் 29 வயதுடையவர்கள் எனவும், ஒருவர் ஒஸாவா நகரையும் மற்றையவர் விச்சூரிச் ஸ்ரௌவிலே நகரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

வாகன சாரதியான 24 வயதுடையவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி திருமணமான தனபாலசிங்கம் ஹரிகிருஷ்ணா (கஜன்) என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசங்களுக்கு பின்னால் நடைபெறும் முசுப்பாத்திகளும் கனடா நிலவரங்களும்!


கனடாவிலிருந்து மூர்த்தி


கனடாவின் தமிழ்ப் பத்திரிகை உலகத்தையும் கோவிட்-19 வைரஸ் பதம் பார்த்துவிட்டது. ரொறன்ரோவிலிருந்து வெளியான சில தமிழ்ப் பத்திரிகைகள் கொரோனா கோரத்தால்  உயிரைவிட்டுவிட்டன. உயிரோடிருக்கும் ஒரு சில தமிழ்ப்  பத்திரிகைகள் 16 பக்கங்கள், 32 பக்கங்கள் என மெலிந்துபோய் உயிரைக் கையில் பிடித்தவாறே வெளிவருகின்றன.  இன்னும் சில தமிழ்ப் பத்திரிகைகள் ஆவியாகி பி.டி.எப். வடிவில் வருகின்றன.

இன்று தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமல்ல, கனடாவின் ஒட்டுமொத்த அச்சுப் பத்திரிகை உலகமே ஆட்டம் கண்டிருக்கிறது.  “ஏற்கனவே இணையத்தின் தாக்கத்தால்  ஏற்பட்டுவந்த விளம்பர வருவாயின் வீழ்ச்சியை கோவிட்19  மேலும் அதிகரித்துள்ளது” – என்று பத்திரிகை வெளியீட்டாளர்கள் ஒப்பாரி வைக்காத குறையாகக் கூறுகின்றனர்.

Torontostar உட்பட பல செய்தித் தாள்களை வெளியிட்டுவரும் Torstar நிறுவனம் சமீபத்தில் 85 பேரைவேலையைவிட்டுத் தூக்கிவிட்டது. SaltWire Network அதன் ஊழியர்களில் 40 சதவீதத்தை தற்காலிகமாக பணிநீக்கம் செய்திருக்கிறது. கியூபெக்கில் ஒரு செய்தித்தாள் நிறுவனம் 143 தொழிலாளர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது மட்டுமல்லாது, தான் அச்சிடும் சில பத்திரிகைகளை நிறுத்தியும் விட்டது.

ஆக,கனடாவின்  பல மாகாணங்களிலும் பலகாலமாக வெளிவந்த பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் நின்றுபோய் அச்சு ஊடக உலகில் தொழில்புரிவோர் பணி நீக்கங்களை எதிர்கொள்கிறார்கள்.

அச்சுப் பத்திரிகைளை வீட்டுக்குவீடு, கடைக்குக் கடை விநியோகிப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல் அச்சு பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு விளம்பர வருவாய் குறைந்தமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

சமூகவலைத்தளங்களின் போட்டியால் விளம்பர வருவாயில் தொடர்ச்சியான சரிவு முதலில் நடந்தது. தற்போது பல நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்வதை அறவே நிறுத்தியும்விட்டன. ஊடக உலகேவிக்கித்துப்போய் நிற்கின்றது.  (நிலைமை இங்கு இப்படியிருக்க, ஆஸ்திரேலியாவில் ‘எதிரொலி’ பத்திரிகை வெற்றிகரமாக 4 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.)

கோவிட் நெருக்கடி எவ்வளவுகாலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் எத்தனை ஊடக வணிகங்கள் தப்பிக்கும் என்பது தெரியவரும்.

அதுபோக –

கனடாவின் பல வணிக அங்காடி நிலையங்கள் வருமானக்குறைவினால் தாம் தள்ளாடுவதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன. 350 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கிவரும் கனடாவின் ஆகப் பழைய வியாபர அங்காடி நிறுவனமான Hudson’s Bay கொரோனாவை காரணம் காட்டி, தனது பல வர்த்தக அங்காடிகளை நிரந்தரமாக மூடவிருக்கிறது.  1670 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் அது. அதற்கே இப்படிநிலைமை என்றால்,அதன்பின் வந்த நிறுவனங்களைக் கேட்கவேண்டுமா? மக்கள் வருகை குறைந்திருக்கும் காரணத்தால் தாம் நட்டமடைவதை பல வர்த்தக அங்காடிகள் உரத்துச் சொல்லத் தொடங்கிவிட்டன. தாம் எதிர்கொள்ளும் நட்டத்தைசமாளிக்க,பொருட்களின் விலைகளைபலஅங்காடிகள் மெதுவாக ஏற்றியுமிருக்கின்றன. Walmart, Costcoபோன்ற பிரபல மலிவு விலைப் பேரங்காடிகளிலும் கூட பலபொருட்கள் மலிவுவிலை என்று சொல்லிடவே முடியாத விலைகளில் தற்போது விற்கப்படுகின்றன.

பல தமிழ்க்  கடைகளில் அடிக்கடிபொருட்களின் விலைகள் இரவோடு இரவாக திடீரென ஏறுகின்றன. ‘அதுஏன்?’ என்பது மில்லியன் டொலர் கேள்வி.  ஒரு கடையில் கையிருப்பு தீர்ந்துபோய் ‘அவுட் ஒப் ஸ்ரொக்’ வெளிப்படையாகச் சொல்லப்படும் முன்னரே – அதாவது கையிருப்பு இருக்கையிலேயே – விலைகளில் மாற்றங்கள் இரவோடிரவாக அறிவிக்கப்படுமாயின் அதற்குக் காரணம் என்ன?

“பெற்றோல் விலைகள் போல மிளகாய்த் தூளுக்கும், மஞ்சளுக்கும், மல்லிக்கும் உலகளாவிய கொள்முதல்விலை அதிகரித்துவிட்டதா?” அல்லது“ மக்கள் அதிக அளவில் வாங்கி அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற எதிர்காலக் கவனத்தின் பாற்பட்டு விலை ஏற்றங்கள் அறிவிக்கப்படுகின்றனவா?

” இப்பேர்ப்பட்டவிசர்க் கேள்விகள் எதுவுமின்றிநம் தமிழ்மக்கள் தமிழ்கடைகளைதொடர்ந்தும் ஆதரித்துவருகிறார்கள். இந்தஆதரவுதொடர்ந்து இருப்பதால், “கோவிட்19தாக்கத்தினால் தமிழ்க் கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டன” என்றுசொல்லமுடியாதுள்ளது.

கனடாவிலுள்ள தமிழ்க்கடைகளை வெறுமனே வியாபார நிலையங்களாக தமிழர்கள் கருதுவதில்லை. தனியாரால் தமது இலாபத்திற்காக நடத்தப்பட்டுவருவதாக அவை இருந்தாலும்கூட, கனடாவின் தமிழ்கடைகள்  சமூகமையங்கள் போலத்தான் தொழிற்பட்டுவருகின்றன. கனடாவில் தமிழ்ப் பண்பாட்டின் இருத்தலுக்கு இங்குள்ள தமிழ் கடைகளின் பங்குஅளப்பரியதுஎன்பதை இவ்விடத்தில் குறிப்பிடத்தான் வேண்டும்.

இதுபுரிந்திருந்தாலும்,சிலஅடிப்படைவியாபாரநெறிமுறைகளைத் தாண்டிசிலதமிழ்க்கடைகள் நடந்துகொள்ளும்போது, அதை மௌனமாகபலரும் தாண்டிப்போவதில்லை.

உதாரணத்திற்கு,கோவிட்-19 பாதிப்புக்கள் எகிறித் திகிலூட்டிக் கொண்டிருந்தமார்ச் மாதத்தில்  ஒருநாள்,ஒரு தமிழ்க்கடையில் தான் வாங்கிய சில பொருட்களின் ரசீதுகளை ஒருவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார்.  மார்ச் 2ஆம் திகதியும், மார்ச் 19 ஆம் திகதியும் பெறப்பட்ட ரசீதுகளிலிருந்த விலைகள் அவரால் ஒப்பிட்டப்பட்டிருந்தன.  அதன்படிக்கும், 8 இறாத்தல் இந்திய பிரியாணி அரிசியின் விலை 4.99 டொலர்களிலிருந்து 9.99 டொலர்களாக மாறியிருந்தது.  கறித்தூள் 6.99 இலிருந்து 7.99 ஆகியிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் இப்படி ஒருதிடீர் விலையேற்றமா? பரபரப்பு பற்றிக்கொண்டது. தொடர்ந்து, வாரக்கணக்காக,மாதக் கணக்காக தமிழ்க்கடைகளுக்கு எதிரான புகார்கள்,எச்சரிக்கைகள் வாட்ஸ்அப்பில் வளையவந்து கொண்டிருந்தன.

இதனால், சம்பந்தப்பட்ட கடைஅந்தப் புகாருக்கு மறுப்புத் தெரிவித்து “புகாரில் குறிப்பிடப்பட்ட பிரியாணி அரிசியும், பாஸ்மதி அரிசியும் வேறு வேறு தரம், ரகம் மட்டுமல்ல,வேறுவேறு விலைகளும் கொண்டவை” – என்று விளக்கியது. கறித்தூளின் விலை அதிகரிப்பானது தமது கொள்முதலாளர்களின்  மாற்றத்தாலும் அமெரிக்க – கனடாடொலர்  நாணய மாற்று விகிதத்தின் மாற்றத்தாலும் நிகழ்ந்தாம். ‘விதியே டஎன்செய் நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை… கடவுளே.. கடவுளே…’

கோயில்கள் மீளத் திறக்கப்பட்டுவிட்டன. குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்களுக்கே கோயிலுக்குள் இருப்பதற்கு அனுமதிதரப்பட்டிருக்கிறது என்பதால் பக்தர்கள் குழாம் குழாமாகத்தான் உள்ளே அனுப்பப்படுகிறார்கள். (தீர்த்தம் தருவதுபோல சானிடைஸர்கள் தரப்படுவதில்லை.) அர்ச்சனைகள்,  ஆராதனைகள் அனைத்தும் இணையம் வழியாக ஒளிபரப்பாகின்றன.

கோயில்கள்போல,உணவகங்களும் மீளத்திறக்கப்படுகின்றனஎ ன்றாலும் உட்காருவதற்கான ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு,அவை 2 மீட்டர் தள்ளித்தள்ளிப் போடப்பட்டிருக்கவேண்டும் என்பது கடுமையான விதிமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போதாக்குறைக்கு சுகாதாரவிதிகளும்  கடுமையாக்கப்பட்டுவிட்டன. அதனாலோ என்னவோ, பல தமிழ் சாப்பாட்டுக்கடைகள் நாமெல்லாம் உட்கார்ந்து ‘வெட்டும்” வகையில் திறக்கப்படவில்லை. ஆனால்,தமிழ் சலூன்காரர்கள் திறந்துவிட்டார்கள். ஆனால்,முடி வெட்டுபவரும்,வெட்டப்படுபவரும் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும்! இந்தக்களேபரத்திற்குள் அண்மையில் சலூனுக்குசென்றுமுடி வெட்டிக்கொண்டேன். ஆனால் மாஸ்க்குக்குள் இருந்தஎனதுதாடியைட்ரிம் பண்ணசிகைஅலங்கரிப்பாளர் மறுத்துவிட்டார். சட்டவிதிமீறலாம்.

இத்தகையபல்வேறு ‘முகமூடி” நிகழ்வுகளுக்கும் நடுவேகனடாவின் தமிழ் பேசும் நல்லுலத்தினர் “கொரானாவாசுமந்திரனாபென்னாம்பெரியவைரஸ்?” என்று யுத்தம் செய்தபடிதானிருக்கிறார்கள்.

முழங்காலிட்டு வணங்கிய கனடியப் பிரதமர்; இனவெறிக்கு எதிரான பேரணியில்!

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் பொலிஸ் பிடியில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அவர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கறுப்பினத்தவர்கள் அடக்குமுறையைச் சந்தித்து வருவதால் இந்தப் போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது. அமெரிக்கா தவிர பல்வேறு நாடுகளிலும் இந்தப் போராட்டம் விரிவடைந்துள்ளது.

இந்நிலையில், கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜஸ்டின் ட்ரூடோ பேரணியில் இணைந்து நடந்து வந்தார். இது அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது. அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பேரணியில் பங்கேற்றார்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூடவேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டொக்டர் தெரசா டாம் எச்சரித்திருந்த நிலையில், பேரணியில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் டொரன்டோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற பேரணி நடைபெற்றன.

இன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்!

ராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

இந்நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உட்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அறிவித்துள்ளது.

இதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என். 5 என பெயரிடப்பட்ட விண்கல் 62 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற ராட்சத விண்கல் சுமார் 50.9 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது என நாசா அறிவித்துள்ளது.

கனடாவில் கொரோனாவால் இறந்த தமிழர்கள்; மறைப்பதால் தொடரும் மர்மம்!

கனடாவிலிருந்து எதிரொலிக்காக மூர்த்தி

உலகமெங்கும் கொரோனா ஆட்கொல்லி நோய் ஆயிரக்கணக்கில் மக்களைக்காவு கொண்டுடிருக்கின்ற இவ்வேளையில், கனடாவின் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அருகிலுள்ள அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் கனடாவில் பாதித்திருக்கிறது என்று மெல்லிதாக திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

ஆனால், குடியேறிகள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களான பிரிட்டிஷ் கொலம்பியா (பெருநகர்: வான்கூவர்), அல்பேர்ட்டா (பெருநகர்: கல்கரி), ஒன்ராறியோ (பெருநகர்: ரொறன்ரோ), கியூபெக் (பெருநகர்: மொன்ரியால்) ஆகிய இடங்களில் கொரோனா தனது உக்கிரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஏனைய மாகாணங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

சுருங்கச் சொன்னால், இந்த மே மாத ஆரம்பம்வரை கனடாவின் நிலைமை கவலைக்கிடமாகத்தானிருக்கிறது.

சாவுகள் – பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா போலவே கனடாவிலும் சில மாகாணங்கள் இம்மாதம் வியாபார நடவடிக்கைகளை மெதுவாக திறக்க ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை காலமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததால் பெற்றுச் சேகரித்த இலாபம் முழுவதையும், சீன இறக்குமதியான ‘கோவிட்-19’க்கு எதிராக கனடா செலவு செய்யவேண்டிய நிலைவந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் 252 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை நிலைமைக்குப் போய்விட்டது. வேலை வாய்ப்புக்கள் அதலபாதாளத்தில் விழுந்து,கனடா பொருளாதர சுருக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சேர்த்து சீனா இங்குள்ள வீடுகளில் ஒரு ‘பேசுபொருள்’ ஆகிவிட்டிருக்கிறது.

இந்த கொரோனா வருவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே கனடா சீனாவுடன் பெரும் பிணக்குப்பட்டுக் கொண்டிருந்தது. 2018 டிசம்பரில் HUAWEI நிறுவன தலைமை அதிகாரியான மெங் வான்சூ கனடாவில் தடுத்து வைக்கப்பட்டது முதல், சீனா – கனடா உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. அந்த கைதுக்குப் பழிக்குப் பழி வாங்குவதுபோல கனடிய ராஜதந்திரிகளை சீன அரசு கைது செய்ய, இரு நாட்டினதும் உறவு கொதிநிலையில் போய் நின்றுகொண்டது. இவ்வாறான சீன எதிர்ப்பலை இருந்ததால்தானோ என்னவோ ‘கோவிட்-19’ சீனாவில் பற்றிக்கொண்ட ஆரம்ப நாட்களில் கனடிய மக்கள் அதுகுறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதன்பின் வூஹானில் வேகமாக நோய்ப்பரவல் ஏற்பட்டது. வெளிச்சத்திற்கு வந்தபோதும்கூட “அது சீனாவின் பிரச்சனை” – என்ற நினைப்புத்தான் இங்கு பலருக்கும் இருந்தது. பிறகு, வூஹாங் நகரில் மாட்டிக்கொண்ட கனடியக் குடிமக்களை கனடிய விமானங்கள் திருப்பி எடுத்துவந்த காலகட்டத்தில்கூட மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ‘ரொய்லெட் பேப்பருக்காக நடந்த பொதுஜன மோதல்” வீடியோக்கள் சமூக வலைத்தளங்களினூடாக பரவியபோதுதான் கனடியர்கள் பலருக்கும் “ஏதோ ஒன்று பயங்கரமாக நடக்கப்போகிறது” – என்ற பயம் உருவாகத் தொடங்கியது. இருந்தாலும் ரொய்லெட் பேப்பருக்கு தட்டுப்பாடு வரமுன்னர் தாங்களும் அதை வாங்கி வைத்துவிடவேண்டும் என்ற ரீதியில்தான் ஆரம்பகால தற்காப்புச் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் –

இந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கோவிட்-19’ கனடாவிலும் வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்ததிலிருந்து சகலதும் மாறிவிட்டது. சாவு எண்ணிக்கை அதிகரிக்க , அதிகரிக்க மக்கள் மிரண்டுபோய் நிற்கிறார்கள். சமூக தள்ளியிருப்பு, வீடடங்கு நிலை, அவசர நிலை என பல்வேறு நடவடிக்கைகள் மத்திய – மாகாண அரசுகளால் அறிவிக்கப்பட்டன. 

வீட்டிலிருப்போருக்கு “கனடா அவசரகால கொடுப்பனவு –  Canada Emergency Response Benefit     – என்ற உதவித் திட்டம் தனி நபர்களுக்கு மாதாந்தம் 2,000 கனடிய டொலர்கள் என பண உதவியை தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு வழங்கத் தொடங்கியிருக்கிறது. 

அதைவிடவும்,சமூக தள்ளியிருப்பு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்கள், சிறுவர்த்தக நிறுவனங்கள், இலாபநோக்கற்ற அமைப்புக்கள் என பல்வேறு பகுதியினருக்கும் வெவ்வேறு வகையிலான நிவாரணங்கள் தரப்படுகின்றன.உதவிகளுக்காக கனடாவின் இராணுவமும் களத்தில் இறக்கப்பட்டது.

நம் தமிழ்க் கனடியர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் கொரோனா பரவல் குறித்து – கனடா அரசாங்கம்போல் – பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “நாங்க மிளகு ரசம் குடிக்கிறனாங்கள், தூள் சாப்பிடுறனாங்கள், கறிக்கு மஞ்சள் போடுறனாங்கள். எங்களுக்கு கொரோனா வராது” – என்றெல்லாம் சொல்லி நமது ஆண்ட பரம்பரையின் வீரக்கதைகளை எடுத்து வட்ஸ் அப்பில் ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தது. பிறகுதான் கதை மாறிக் கொண்டது.

இன்று கனடாவில் கொரோனா பலியெடுத்துவரும் பட்டியலில் ஈழத்தமிழ் மக்களும் அடங்குகிறார்கள். முதியோர் காப்பக இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ் முதியோரும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். கோவிட்-19க்கு தமிழ் மருத்துவர் ஒருவரும் பலியாகியிருக்கிறார்.

இதில் தற்போது கவனிக்கப்படும் மேலதிக சோகம் என்னவென்றால், கொரொனா வந்து தமிழர்களில் பலர் இறந்தபோதும், மாண்டவர் ‘கொரோனா வந்துதான் இறந்துபோனார்” என்பதை மற்றவர்களுக்கு வெளியே சொல்வதற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்தப்போக்கினால்,தமிழர்களில் “கோவிட்-19”காரணமாக இறந்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளிவிவரங்களை சேகரிப்பதில் ஒரு பின்னடைவு இருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களின் கணிப்பின்படி ரொறன்ரோ பெரும்பாகத்தில் 85க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அவர்களைவிடவும் பல தமிழ்க் கனடியர்கள் மொன்ரியாலிலும் பலியாகிவிட்டார்கள்.

இந்த “கோவிட்-19”அவசரநிலை காரணமாக பல தமிழ் உணவு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஒரிரு ‘ரேக் அவுட்’ உணவு நிலையங்கள் திறந்திருந்தாலும், அவற்றில் பலவும் தமது ஊழியரின் நலன் காரணமாக கதவை அடைத்துவிட்டன. தமிழ் பலசரக்குக் கடைகளும் கடை திறக்கும் நேரத்தை குறைத்திருக்கின்றன. சில கடைகள் மூடப்பட்டும்விட்டன. பல தமிழ்க் கடைகள் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனையில் ஈடுபட்டு தங்கள் திருகுதாளங்களை காண்பிக்கத்தொடங்கியதால்,தமிழ் சமூக ஊடகத் தாக்குதல்கள் அவற்றை நோக்கி தொடுக்கப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடவேண்டிதாகிறது.

விலைப் பிரச்சனைகள் மட்டுமல்ல, ரொறன்ரோவில் பிரசுரமாகும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் குறிப்பிட்டதொரு நகருக்கான வாராந்த விநியோகஸ்தரும் அவரது மனைவியும் கொரோனா காரணமாக சாவைத் தழுவியதும் தமிழ் சமூக ஊடகங்களை அலைக்கழித்தன. குறிப்பிட்ட பத்திரிகையின் விநியோகஸ்தர் கொரோனா தொற்றுக்குள்ளானபடியால் அந்த தமிழ்ப் பத்திரிகை நிறுவனம் அது விநியோகிக்கப்பட்ட தமிழ்க்கடைகளுக்கு “கொரோனா தொற்று ஆபத்துக் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கவேண்டும்” – என்ற குற்றச்சாட்டும், கூடவே பல்வேறு ஊடக விவாதங்களும் ஒரு சுனாமிபோல எழுந்தன. ஒரு கட்டத்தில் இந்த விவாதங்கள் கொரோனா விழிப்புணர்வையும் தாண்டி, அந்த பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் எதிரானவகையில் சென்ற துயரமும் நடந்தன..

இப்படியாக பலவும், கொரோனா சாவுகள் உட்பட நிகழ்ந்த அதே காலப்பகுதியில் தமிழர்கள் தமிழர்களை கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

மரண பீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு “மரவள்ளிக்கிழங்கு” காலம்தான் இனி ஒரே வழி!

முருகபூபதி

கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

சின்னஞ் சிறிய நாடாக கரிபியன் கடலை அண்மித்திருக்கும் கியூபாவை முன்னுதாரணமாகக்கொண்டுதான் இன்று உலக நாடுகள் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் எடைபோடவேண்டியிருக்கிறது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்று விதந்துரைக்கப்படும் சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000) பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அல்ல. அவரது கல்வித்தரம் ஒன்பதாம் வகுப்பிற்கும் கீழ்தான்.

அவரது கணவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவர் 1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது அமைச்சரவையிலிருந்த கலாநிதி தகநாயக்கா காபந்து அரசின் பிரதமரானார்.


எனினும்,அவரால் உருவாக்கப்பட்ட கட்சி அடுத்துவந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தனது கணவருக்குப்பின்னர் பாதுகாத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தேர்தலில் வென்று பிரதமரானார்.

அதற்குப்பிறகு,மூன்று தடவைகள் பிரதமர் பதவியை அலங்கரித்துவிட்டு, 2000 ஆம் ஆண்டில் மறைந்தார். இவரது மகள் ஜனாதிபதியானபோது, அவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசியலில் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

சிறிமாவோ பதவியிலிருந்த காலத்திலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது என்னவோ உண்மைதான். தமிழ்மொழி இரண்டாம் பட்சமாகிய புதிய அரசியல் அமைப்பு, பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்பனவும் நிகழ்ந்தன. மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆனால், அவரது காலப்பகுதியில் இனக்கலவரங்கள் நடைபெறவில்லை.

அனைத்து கலவரங்களும் அவரது கணவர் பிரதமராக பதவியிலிருந்த (1958) காலத்திலும் 1977 இற்குப்பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் யூ.என்.பி. கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்தவைதான். 1977 – 1981 – 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த கலவர காலங்களில் ஜே.ஆர்.தான் தேசத்தின் அதிபராக இருந்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கா, பலாங்கொடையிலிருந்து ரத்வத்தை குடும்பத்தின் பரம்பரையில் வந்தவர். இலங்கை தேசியத்தில் தனது கணவருக்குப்பின்னர் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். லண்டனில் படித்து பரிஸ்டரான பண்டாரநாயக்கா,  சிங்கள தேசிய உடையணிந்தவாறுதான் இலங்கை அரசியல் அரங்கில் ஏறினார். தூய வெள்ளை வேட்டி, நெஷனல்தான் அவரது உடை. முதலில் அவர் யூ.என். பி. யில்தான் இருந்தார். அதன் தலைவர் டி. எஸ். சேனாநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சேர். ஜோன். கொத்தலாவலைக்கு அது கிடைத்தது. அவரும், டி.எஸ். சேனாநாயக்காவும் இவரது மகன் டட்லி சேனாநாயக்காவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு துதிபாடியவர்கள். அத்துடன்,ஆங்கிலேயர் பாணியில் கோர்ட் சூட் அணிந்துதான் மக்கள் மத்தியில் தோன்றினர்.

பௌத்த சிங்கள தேசியத்தை முன்னெடுக்கவேண்டுமானால் – அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டுமானால் – அந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடையைதான் முதலில் அணிந்து பெரும்பான்மையினத்தவரின் நாடித்துடிப்பினை காணவேண்டும் என்ற தீர்க்கதரிசனம் பண்டாரநாயக்காவுக்கு வந்தது.

அதனால் குறிப்பிட் சிங்கள தேசிய உடையை அணிந்தவாறு ஐம்பெரும் சக்திகளை (சிங்களத்தில்  பஞ்சமா பலவேகய ) திரட்டிக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றிபெற்றார்.

அந்த சக்திகள்: விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் – பௌத்த பிக்குகள் – வைத்தியர்கள்.

இத்தனைக்கும் அவர் பிறப்பால், அங்கிலிக்கன் கிறிஸ்தவர். அவரது மூதாதையர்கள் கண்டியை ஆட்சிபுரிந்த தெலுங்கு நாயக்கர்கள் ஆவர்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியம் தேவையானவர்கள் விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் –வைத்தியர்கள்.

ஆனால், பௌத்த பிக்குகளையும் அவர் இணைத்துக்கொண்டமைக்கு அன்றிருந்த காரணம், பௌத்த மக்களின் வாக்கு வங்கியையும் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்வதற்குத்தான். அவரது அந்தக்கணிப்பு,பெருந்தவறு என்பது ஒரு பௌத்த பிக்குவால் (சோமராம தேரோ) அவர் சுடப்பட்டபோதுதான் அவருக்குத்  தெரியவந்தது. முதல்நாள் சுடப்பட்டு மறுநாள் அவர் இறந்தார்.

எனினும், கணவர் பண்டாரநாயக்காவிற்குப்பின்னர் பதவிக்கு வந்த சிறிமாவோ, 1961 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும்புகழுடன் பதவி ஏற்கச்செல்லவிருந்தவேளையில்,இவருக்கு வந்த ஆசை விசித்திரமாக அக்காலப்பகுதியில் பேசப்பட்டது.

இந்தியா – தமிழ்நாட்டிலிருந்தெல்லாம் காஞ்சிபுரம் சேலைகள் இலங்கையில் கோலோச்சிக்கொண்டிருந்த அக்காலத்திலேயே அவர், உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்துதான் நாடாளுமன்றம் செல்ல விரும்பினார்.

அதற்கான ஓவிய வடிவமைப்பினை செய்து தருமாறு சிறிமா கேட்டதையடுத்து, அச்சமயத்தில் சிறுகைத்தொழில் அமைச்சில் பணியாற்றியவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியரும் ஒளிப்படக்கலைஞருமான (அமரர்) கே.ரீ. செல்வத்துரை அவர்கள் சிறிமாவின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்தார்.

தேசத்தின் தலைவியே உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்து பதவிப்பிரமாணம் எடுத்ததைப்பார்த்த இலங்கையின் கிராமப்புற மற்றும் நகரப்புற சிங்கள பெண்களுக்கும் அத்தகைய கைத்தறிச்சேலைகளை விரும்பும் ஆர்வம் அதிகரித்தது. அதனால் உள்நாட்டில் பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் பெருகின.

சிறிமாவோ முதல் முதலில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தபோது, உலகில் எந்தவொரு நாட்டிலும் அவ்வாறு ஒரு பெண்,பிரதமராகும் அதிசயம் நிகழவில்லை.
பல வளர்முக நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமைகூட இல்லாதிருந்த பின்னணியில்,அவர் அந்தப்பதவிக்கு வந்ததை ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்தவர்களினால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது.
அதனால், அவரை மிகவும் தரக்குறைவாகவும் மேடைகளில் அன்றைய எதிரணியினர் பேசினர்.

சிறிமா முதலில் பதவியிலிருந்த (1961 – 1965) காலப்பகுதியில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கினார். உள்நாட்டில் புடவைக்கைத்தொழிலை வளர்ப்பதற்காக தனி அமைச்சும் உருவானது.

1970 இற்குப்பின்னர் இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டரசாங்கம் அமைத்தவேளையில், பல முற்போக்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதுவரையில் “மகாதேசாதிபதி”முறையிருந்த இலங்கை, சோஷலிஸ ஜனநாய குடியரசாக மாறியது. அணிசேரா நாடுகளின் உச்சிமகா நாட்டையும் நடத்தி, அந்த அமைப்பின் தலைவியாகவும் சிறிமாவோ தெரிவுசெய்யப்பட்டார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகரம் வரையில்  கட்டுநாயக்கா – கொழும்பு வீதி அகலமாக்கப்பட்டது. அதற்காக முன்னைய  ஒடுக்கமான வீதிக்கு அருகிலிருந்த வீடுகள் – கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது கடும் விமர்சனங்களையும் அவரது அரசு சந்தித்தது.அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்,  இராஜதந்திரிகள் ஆகியோரின் போக்குவரத்து வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவ்வாறு அந்த வீதி அகலப்படுத்தப்பட்டது.

இச்செயலும் சிறிமாவின் தீர்க்கதரிசனம் மிக்க செயல். பின்னாளில்தான்  அதன் தேவை உணரப்பட்டது. அந்த மாநாட்டுக்கு இந்திராகாந்தி, கியூபா பிடல் கஸ்ட்ரோ, லிபியா கேர்ணல் கடாபி, யூகோஸ்லாவியா டிட்டோ உட்பட பல உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவ்வேளையிலும் யூ. என்.பி. யின் பச்சைக்கட்சியினர், அந்த மாநாட்டை சிறிமாவின்  “அணிசேரா கலியாணம்” என்று கேலிசெய்தனர். ஆனால்,இந்நாடுகளின் ஆதரவுடன் இலங்கையில் பல முற்போக்கான வேலைத்திட்டங்களை சிறிமா முன்னெடுத்தார்.

1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்காவும் இலங்கையில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நெற்செய்கையில் ஈடுபட்ட ஏழை விவசாயிகளுக்கு “விவசாய மன்னர்”பட்டம் வழங்கியும் பாராட்டி கௌரவித்தார். இத்தனைக்கும் அவர் அரிசிச்சோறு உண்ணாதவர். அவரைப்போன்று மற்றும் ஒருவர் அரிசி உணவு உண்ணாதவர். அவர்தான் சிறிமாவின் மருமகன் பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா.

1970 இல் மீண்டும் சிறிமா இடது சாரிகளுடன்  இணைந்து பதவிக்கு வந்தபோது,  அரசின் திறைசேரியில் நிதிவளம் முற்றாக குறைந்திருந்தது. எதற்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்து கையேந்தாமலிருப்பதற்கு உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கியே தீரவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டார்.

அரிசி, சீனி, மற்றும் அமெரிக்க கோதுமை மாவு முதலானவற்றுக்கு நேர்ந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, இலங்கை மக்களுக்கு சீனியில்லாமல் தேநீர் அருந்தும் கலசாரத்தை அறிமுகப்படுத்தினார். அக்காலப்பகுதியில்,ஏழை முதல் செல்வந்தர்கள் வரையில் அவர்களின் வீடுகளில் அதுவரையில் இருந்த சீனி போத்தல்களில் பனங்கருப்பட்டியும் கித்துல் கருப்பட்டியும் இடம்பெறத்தொடங்கின.
பனங்கருப்பட்டி வடக்கிலிருந்தும் கித்துல் கருப்பட்டி தெற்கிலிருந்தும் உற்பத்தியாகின.

அத்துடன் சீனியை குறைவாகப்பாவிப்பதற்காக, உள்ளங்கையில் சொற்ப அளவில் சீனியை எடுத்து அதனை நக்கியவாறும் மக்கள் தேநீர் அருந்தினார்கள். 


அதனையும் அன்றைய  யூ.என்.பி. எதிரணியினர் எள்ளி நகையாடினர். உள்ளங்கையை நக்கி நக்கி கைரேகைகள் அழிந்துவிட்டதாகவும், முதல் பெண்பிரதமரின் படம் தாங்கிய அஞ்சல் முத்திரைகளின் பின்புறத்தை நாவால் நக்கித்தான் ஒட்டவேண்டியிருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள்.

கோதுமை மாவின் தட்டுப்பாட்டினால், மக்கள் தத்தம் வீட்டுக்காணிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபட்டனர். அந்தச்செய்கையை வீட்டு முற்றத்திலும் மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள். ஆகவே,அரிசியை பதுக்கும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட்டனர். ஒரு குடும்பத்தின்  தேவைக்கு அதிகமாக அரிசி எடுத்துச்செல்லப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாண் பேக்கரிகளுக்கும் கோதுமை மாவு கொள்வனவு செய்யும் வீதத்திலும் கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், அதிகாலையே பொதுமக்கள் பேக்கரிகளின் வாசல்களில் பாண் வாங்குவதற்கு வரிசையில் நிற்கநேர்ந்தது.

அதேசமயத்தில்,வடக்கில் கிளிநொச்சி, விசுவமடு, முல்லத்தீவு முதலான விவசாய பிரதேசங்களில் வெங்காயம், மிளகாய் பயிர்ச்செய்கை அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. வவுனியா முதலான பிரதேசங்களில் உழுந்து பயிர்ச்செய்கை வளம் கண்டது.

சிறிமாவோவின் அன்றைய தீர்க்கதரிசனம் மக்களுக்கு சில அசௌகரியங்களை தந்தபோதிலும் வடக்கினதும் தெற்கினதும் விவசாயிகளின் பொற்காலமாக கருதப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து தோன்றி இன்று உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலகமும் படிப்படியாக நீங்கினாலும்,பொருளாதார ரீதியில் சந்தித்துக்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் செல்லும்.

முக்கியமாக,இலங்கை போன்ற வளர்முக நாடுகள், மீண்டும் அரிசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்,கருப்பட்டி  முதலானவற்றின் உற்பத்தியை நோக்கி தனது பொருளாதார அபிவிருத்தியை  திசைதிருப்பவேண்டியும் வரலாம்.

தற்போது,கொழும்பு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் உருளைக்கிழங்கு – வெங்காயம் சகிதம் அழுகிய நிலையில் தேங்கிக்கிடக்கின்றன. அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இலங்கையை சுற்றி இந்து சமுத்திரம் இருந்தபோதிலும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் இன்றும் இறக்குமதியாகிறது. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவினால், அவையும் கொள்கலன்களில் தனிமைப்படுத்தப்பட்டு எவருக்கும் பயனற்றதாகிவிட்டன.

சிறிமாவோ காலத்தில்,அரிசித்தட்டுப்பாடு வந்தவேளையில்,“சந்திரனிலிருந்தாவது அரிசி தருவிப்போம்” – என்று பேச்சுக்குச்சொன்னாலும், உள்நாட்டில் விவசாய செய்கையை ஊக்குவித்தார்.

கிழங்கு நட்டு பயிர் செய்யுமாறு அவர் சொன்போது,யூ.என்.பி.யை சேர்ந்த பௌத்த பிக்கு, தேவமொட்டாவ அமரவண்ஸ தேரோ “அம்மையார் கிழங்கு நடு… கிழங்கு நடு…என்கிறாரே,  எங்கே நடுவது” – என்று இரட்டை அர்த்தத்தில் மேடைகள் தோறும் கேவலப்படுத்திப் பேசித்திரிந்தார்.எழுத்தில் பதியமுடியாத மிக மோசமான மேலும் பல வார்த்தைப் பிரயோகங்களை அந்த பிக்கு  உச்சரித்தார்.

சிறிமாவின் காலத்தில்தான், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தோன்றியது. அதே காலப்பகுதியில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வந்தது, இந்தியாவின் தரமற்ற வணிக சஞ்சிகைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் பல நன்மைகள் உள்நாட்டில் மலர்ந்தன.

ஆனால், அதன் தற்காலிக சுமைகளை தேசத்தின் நலன் கருதாமல், தமது அரசியல் நலன்கருதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஆர்.பிரேமதாசம் விஷமப்பிரசாரம் செய்து அந்த ஆட்சியை தோற்கடித்து, 1977 இல் பதவிக்கு வந்து,திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினர்.

மீண்டும் சிறிலங்கா வெளிநாடுகளை கையேந்தத் தொடங்கியது. இன்று தோன்றியிருக்கும் வைரஸ் அனைத்து நாடுகளையும் பரஸ்பரம் கையேந்த வைத்துள்ளது.

ஒரு காலத்தில் கொடிய வைரஸினால் கியூபா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது,அமெரிக்கா அந்த சின்னஞ்சிறிய நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடையை ஏனைய சில ஐரோப்பிய நாடுகளும் ஆமோதித்தன. அமெரிக்க வல்லரசை மீறமுடியாமல் கியூபாவை புறக்கணித்தன.
நோயினால் பாதிப்புற்ற தனது மக்களை மீட்டெடுக்கவேண்டுமாயின், முதலில் மருத்துவத்துறையை வளர்த்து மேம்படுத்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார் கியூபா அதிபர் பிடல் காஷ்ரோ. அந்த கர்மவீரனின் தீர்க்கதரிசனம்தான் சமகாலத்தில், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கும் மக்களின் உயிர்காக்க கியூபா மருத்துவர்களும் தாதியரும் விரைந்து எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்!

அணுவாயுதங்களுக்கும் ஆயுத உற்பத்திக்கும் வல்லரசுகள் செலவிட்ட காலம் மறைந்து மருத்துவமனைகளுக்கும் வெண்டிலேட்டர்களின் உற்பத்திகளுக்கும் அதிகம் செலவிடவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

ஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்


பொன்ராஜ் தங்கமணி

கொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித குலத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அத்தகையது.

உணவுச் சங்கிலியின்  உயரத்துக்குச் சென்ற மனிதன் மிகக் கம்பீரத்துடனும் கர்வத்துடனும் மட்டுமல்லாமல் அடக்கு முறை எண்ணத்தோடும் இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் வளங்கள் மீதும் தனது ஆளுமையை – வெவ்வேறு வகைகளில் – ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செலுத்திவருகிறான்.

சூழலியல் சார்ந்த வாழ்க்கையை விட்டு மனிதன் அகந்தை சார்ந்த வாழ்க்கைக்கு மாறி சில நூறு வருடங்கள் ஆகிவிட்டன. மனித குலவரலாற்றில் அவ்வப்போதுவரும் பரந்துபட்ட பஞ்சம்,பட்டினி,போர் போன்ற காரணிகளைத் தவிர்த்து பெரும்பாலும் பெரிய இன்னலேதும் இல்லாமல் மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து வருகிறது.  

இருந்தாலும், அவ்வப்போது வைரஸ் என்னும் நுண்ணிய நோய்க்கிருமி தன் வலிமையை மனிதனிடம் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. எபோலா,எச்ஐவி, சார்ஸ், டெங்கு, மெர்ஸ் என மனிதனை அச்சுறுத்திய வைரஸ்களில் தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த நூறாண்டுகளில்,மனிதனின் செயல்பாடுகளை உலகளாவிய வகையில் முடக்கிய வைரஸ் என்று பார்த்தால் அது கொரோனாதான்.  

மனிதச் செயல்பாடுகளினால் இந்தப் புவியில் ‘கார்பன்’ வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும் அதன் விளைவாக புவி வெப்பமயமாதல் நடைபெறுவதும் நாம் அறிந்ததே. இதைக் குறைப்பதற்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் சார்ந்த அமைப்புகளும் வெவ்வேறு வகைகளில் முயன்று வருகின்றன. இவ்வாறனதொரு நிலையில்,மனிதன் பூமியில் ஏற்படுத்துகின்ற வலிந்த மாற்றங்களையும் தாக்கங்களையும் கொரோனா குறைத்திருக்கிறது. அல்லது கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நாம் நம் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சாரத்திலிருந்து போக்குவரத்து, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் கரிம வெளியீடு நிறைந்துள்ளது. தற்போது இவை அனைத்தும் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ள காரணத்தால் கரிமத்தின் வெளியீடு இயல்பான நிலையைவிட 5.5-5.7 சதவீதம் வரைகுறைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலர் பீட்டரிடல்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் செய்தி நமக்கு தற்காலிகமாக கிடைக்கும் நல்லசெய்திதானே தவிர இதனால் வானிலை மாற்றத்தை உடனடியாக மாற்றும் அளவுக்கு பங்களிக்க முடியாது எனவும் அவர் சேர்த்தே கூறுகிறார். இதேக் கருத்தை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையமும் எதிரொலிக்கிறது.

இப்பொழுது குறைந்திருக்கும் கரிம வெளியீட்டின் அளவு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெருந் தொகையாகும் என உலகளாவிய கரிம செயல்திட்ட குழு தெரிவிக்கிறது.

ஆகவே,கொரோனாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் தற்காலிகமானது எனப் பார்க்கப்பட்டாலும் இந்த மாற்றத்தால் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் பெருநகரங்களில் சில நாட்களாக நல்ல காற்றை சுவாசிக்க 

முடிகிறது.  இதற்கு முக்கிய காரணம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலக்கரி சார்ந்த உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் குறைவான புகையும்,சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையும் குறைந்ததுதான்.  

சுத்தமான காற்று மட்டுமன்றி,தண்ணீரின் மாசுபடும் அளவும் குறைந்து வருகிறது.  இந்தியாவின் கங்கை நதியிலிருந்து வெனிஸ் நகரத்தின் புகழ்பெற்ற கால்வாய் வரைதண்ணீர் சுத்தமாகும் புகைப்படங்கள் கடந்தசிலநாட்களாகவெளிவந்தவண்ணம் உள்ளன.  

இன்னொருபுறம் –

மனிதனின் செயற்பாட்டு வேகம் குறைந்ததினால் மிருகங்கள் சற்றே இலகுவாக நடமாட ஆரம்பித்திருக்கிறன. கேரளாவில் மலபார் புனுகுப்பூனையும், ஜப்பானில் மான்களும்,சிங்கப்பூரில் நீர் நாய்களும் தங்கள் முகங்களை இப்போதுவெளியேகாட்டியுள்ளன. இந்தியாவின் கரித்துவாரின் தெருக்களைகூட்டம் கூட்டமாக மான்கள் கடந்து செல்கின்றன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின் மையப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாடுகின்றன. வேல்ஸ் நகரத்தில் மலை ஆடுகள் உலாவருகின்றன.  ரோண்டாவின் தெருக்களில் மயில்களும்,சான்டியாகோவில் பூமாவகைப் பூனைகளும் காட்சியளிக்கின்றன. இவற்றைப்பார்க்கும்,மக்களுக்கு இவை இத்தனைவருடங்கள் எங்கே இருந்தன என்ற ஆச்சரியமும் ஐயமும் எழுகிறது.

இவை அனைத்தும் இயற்கையை விரும்பும் மனிதர்களுக்கு ஒருவிதமன மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த மகிழ்ச்சிதொடர வேண்டுமாயின்,இயற்கை மீதான மனிதனின் தாக்கம் குறையவேண்டும். நம்முடைய தேவைகள் என்ன,அந்தத் தேவைகள் ஆடம்பரமானதா அத்தியாவசியமானதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள சரியான தருணம் இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது. நம் தேவைகளைக் குறைத்து நாம் நுகரும் பொருட்களைக் குறைக்கும்போது இயல்பாகவே அதை உற்பத்திசெய்யும் தேவை குறைந்து இயற்கைமீதான நம் தாக்கம் குறையும்.

இதற்கு மாறாக கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என்கிற பெயரில் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அதிக நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் உட்புகாமல் இருப்பதற்கு முயற்சிகள் எடுப்போம்.

இதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் தனிநபர் கரிம வெளியீட்டு தொகைமிகவும் அதிகம். உலக அளவில் ஒருசராசரி ஆஸ்திரேலியரின் கரிம வெளியீட்டு தொகை ஒரு இந்தியரைவிட ஒன்பது மடங்கும்,ஒருஉகாண்டாநாட்டவரைவிட 154 மடங்கும் அதிகமாகும். ஆஸ்திரேலியாபோன்றபணக்காரநாட்டில் வாழும் மக்களின் நுகர்பொருள் கலாச்சாரம் என்பதுபூமிக்குஒருபுற்றுநோய் போன்றதுஎன்பது இதன் மூலம் புரிந்து இருக்கும்.  

இயற்கை மீதான நம்முடைய தாக்கம் குறையும்போது,இந்தப்புவி இயல்பாகவே மனிதனுக்கு மட்டுமன்றிமற்ற உயிரினங்களும் வாழ்வதற்குஏ துவாக அமையும்.  இருப்பதை பகிர்ந்து உண்டு,பல உயிர்களைக் காத்து வாழ்தல் அறத்தில் சிறந்த அறம் என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள் 322

கொரோனாகாலத்தில் நாம் படிக்கும் சிறந்தபாடமாக இது அமையட்டும். 

கொரோனா சாவு ஒன்றரை லட்சம்; கட்டுக்கடங்காமல் போகும் அமெரிக்க நிலவரம்! மீண்டும் ஆட்டம் காணும் சீனா!!

கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக வல்லரசுகள் முதல் சிறிய நாடுகள் வரை பதறவைத்துள்ள கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் பெரும் உயிர்ச்சேதத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதுவரை (இலங்கை நேரம் இரவு 10.30 – 17.04.2020) 22 இலட்சத்து 27 ஆயிரத்து 622 ஆக உள்ளது.

அதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்து 623 பேராக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இலட்சமாக இருந்த இப்பலியெடுப்பு ஒரு சில நாட்களில் ஒன்றரை இலட்சமாக மாறியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் இதன் பாதிப்பு பாரியளவில் உள்ளது.

அங்கு இதுவரை 6 இலட்சத்து 85 ஆயிரத்து 641 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் தொகையோ 35 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெய்னில் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு இலட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 478 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டும், 22 ஆயிரத்து 745 பேர் பலியாகியும் உள்ளனர்.

பிரான்ஸில் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட அதேவேளை, 17 ஆயிரத்து 920 பேர் பலியாகியுள்ளர்.

அதேபோல ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டும் 4 ஆயிரத்து 193 பேர் பலியாகியும் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டும் 14 ஆயிரத்து 576 பேர் பலியாகியும் உள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவில் முதலில் நூறுகள் – ஆயிரங்கள் எனக் கடந்து அண்மைய சில வாரங்களாக ஒற்றையெண்ணில் பலியெடுப்பு நிகழ்ந்தது.

இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது எனக் கருதப்பட்ட அதேவேளை, ஏனைய நாடுகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், இன்று சீனாவில் சாவு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதனால் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு இன்றுமாத்திரம் இதுவரை ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர் எனப் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தமாக இதுவரை காலமும் நான்காயிரத்து 632 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிடியிலிருந்து மீண்ட 5 லட்சம் பேர்!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நோயிலிருந்து சுகம்பெற்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ( இலங்கை நேரப்படி மு.ப.9.30 – 16/04/2020) கொரோனா வைரஸால் 20 லட்சத்துத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 616 பேர் பலியாகியுள்ளனர்.

14 லட்சத்து 38 ஆயிரத்து 360 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 லட்சத்து 10 ஆயிரத்து 350 பேர் வரை சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நோயின் உக்கிரம் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இங்கிலாந்தில்தான் தற்போதைய நிலவரப்படி அதிகமாகவுள்ளது.

கொரோனா தொற்று 20 இலட்சத்தைத் தாண்டியது! நேற்று மாத்திரம் 7 ஆயிரத்தை நெருங்கிய பலியெடுப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர்.

உலகத்தையே தனது காலடியில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ்.

இது சீனாவில் ஆரம்பித்தபோதும், தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையே தற்போது கொலைக்களமாக மாற்றியுள்ளது.

இலங்கை நேரப்படி தற்போதைய (15.04.2020 – பி.பகல் ஒரு மணி) நிலவரப்படி உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்து 943 ஆக உள்ளது.

இது அமெரிக்காவில் மாத்திரம் 6 இலட்சத்து 14 ஆயிரத்து 246 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, இதனால் இறந்தோரின் எண்ணிக்கையும் அங்குதான் கூடுதலாக உள்ளது.

அங்கு இதுவரை 26 ஆயிரத்து 64 பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்து இத்தாலியில் 21 ஆயிரத்து 67 பேரும், ஸ்பெய்னில் 18 ஆயிரத்து 255 பேரும், பிரான்ஸில் 15 ஆயிரத்து 729 பேரும், இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 107 பேரும் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மூவாயிரத்து 342 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர்.

ஏனைய நாடுகளில் நூறுகள் – ஆயிரங்கள் தாண்டி பலியெடுப்பு நடந்து வருகின்றபோதும், ஆரம்பித்த சீனாவில் ஓரிருவரே பலியாகின்றனர்.

அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது என்பதை இது காட்டி நிற்கின்றது.

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சத்தைத் தாண்டியது கொரோனா பலியெடுப்பு!

(10.04.2018 இரவு 11 மணி வரையானது – இலங்கை நேரம்)

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதன்படி உலகளவில் தற்போதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 469 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் அதிகப்படியாக 18 ஆயிரத்து 849 பேரும், அமெரிக்காவில் 17 ஆயிரத்து 995 பேரும், ஸ்பெய்னில் 15 ஆயிரத்து 970 பேரும், பிரான்ஸில் 13 ஆயிரத்து 197 பேரும், இங்கிலாந்தில் 8 ஆயிரத்து 958 பேரும் இதுவரை அதிகப்படியாக பலியாகியுள்ளனர்.

அதேவேளை, கடந்த 18 மணி நேரத்துக்குள் மாத்திரம், 5 ஆயிரத்து 777 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், அமெரிக்காவில் மாததிரம் ஆயிரத்து 304 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதுவரை 16 இலட்சத்து 74 ஆயிரத்து 854 ஆக உள்ளது.

இவர்களில் அமெரிக்காவில் மாத்திரம் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.