எரிபொருள் விலை விரைவில் குறையும்!

எரிபொருள் விலைகளில் பாரிய விலைக் குறைப்புகள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பாவனையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பெற்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்துவருகிறது.

இதனாலேயே, இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த விலைச்சரிவின் பலனாக, தென்னாசிய நாடான பாகிஸ்தானில் பெற்றொல், டீசல், மண்எண்ணெய் விலைகளைக் குறைக்க அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது.

இதன் வரிசையில் அடுத்து இலங்கை, இந்திய நாடுகளிலும் அந்தத் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது யார்? பல்கலைக்கழகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல்யமான தனியார் பல்கலைக்கழகம் நடத்திய கணிப்பீட்டில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் 900 மாணவர்களை சம்பந்தப்படுத்தி இந்தக் கணிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி கோத்தபாய ராஜபக்சவுக்கு 59 சதவீத வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு 17.5 சதவீத சாத்தியமே இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இருக்கின்ற சதவீதமானது 2 ஆகும். ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 4.5 சதவீதத்தையே பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ் செல்லவிருந்த பெண்ணின் சேலையால் ஏற்பட்ட குழப்பம்! சுற்றிவளைத்த மக்கள்

திருகோலையில் பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் பகல் வேளை யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பேருந்திற்கு காத்திருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் சேலையில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வந்த நிலையில், புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவுஸ்திரேலியாவில் இருந்து இரகசியமாக நாடு கடத்தப்படும் இலங்கை தமிழ் குடும்பம்?

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் குடும்பத்தை இரவோடு இரவாக நாடு கடத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியா இன்று இரவு 7.30 மணியளவில் தனது கணவர் நடேசலிங்கம் மற்றும் அவர்களது அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு மகள்களிடமிருந்து பிரிக்கப்பட்டதாக குடும்ப நண்பர் Angela Fredericks தெரிவித்துள்ளார்.

இந்த குடும்பத்தினர் தனித் தனி வேன்களில் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் விமானங்களில் ஏற்றப்படவுள்ளார்கள் என்று கூறப்படுகின்றது.

கடந்த வருடம் Biloela உள்ள அவர்களது வீட்டிலிருந்து நடத்தப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்ட இந்த குடும்பத்தினர், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மெல்பேர்ன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த குடும்பத்தின் நாடு கடத்தலை தடுக்க கோரி அவர்களது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது விமான நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருப்பதாக கூறறப்படுகின்றது.

கொலை குற்றச்சாட்டில் சிக்கியவரை கடுமையாக எச்சரித்த நீதிபதி இளஞ்செழியன்!

திருகோணமலை-கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் (28) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவை பிறப்பித்தார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒருவருடைய கழுத்தை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் டேனியல் என்பவர் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டு குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்தபோது இது ஒரு திட்டமிட்ட பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார்.

இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இறுலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமான மற்ற கொலை எனவும் நீதிபதி குறித்த சந்தேக நபரின் தாயிடம் கூறி எச்சரிக்கை செய்து குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு படித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.

என்னவெனில் இறந்தவரின் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள் சந்தேகநபரை அந்த சந்தேக நபரை குறித்த யுவதி விட்டு பிரிந்து இறந்தவரை காதலிக்க தொடங்கியதன் காரணமாக சந்தேகநபரான வஞ்சம் தீர்க்கும் நோக்கில் குறித்த தினத்தில் இறந்தவர் ஆகிய தங்கதுரை தனுஷ் 20 வயது உடைய என்பவரை மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு கூறி சந்தேகநபர் கத்தி ஒன்றை தமது உடலில் மறைத்து வைத்து திட்டம் தீட்டி எடுத்துவந்து இறந்தவருடைய மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக அமர்ந்து சென்று விசேடமாக இறந்தவரை சந்தேக 40 கூட்டிவந்து இறந்தவர் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திருகோணமலை கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இறந்தவரை இறந்தவரின் கழுத்தை வெட்டியுள்ளார்.

விசேடமாக இறந்தவரை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிவந்து கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்கரவண்டி திரைப்படத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு புரியும் முச்சக்கரவண்டி சாரதி அதனையும் பொருட்படுத்தாது ஓடிவிட்டார் இது அந்த இடத்தில் காணப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது பொதுமக்களுடைய அபிப்பிராயம் குறித்த காயம்பட்டவரை முச்சக்கரவண்டி சாரதியின் ஆனால் அந்த நேரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரின் உயிரை பாதுகாத்து இருக்கலாம் என்பதாகும் எனவே தான் மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் அதன் கடுமையாக விமர்சித்தார் இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.

அப்துல்சலாம் யாசீம்

அழியும் அமேசன் – மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – வெளியாகிய எச்சரிக்கை

அமேசன் மழைக்காட்டில் தொடர்ந்து வரும் தீ பரவல் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் பரவியுள்ளது என நாசா எச்சரித்துள்ளது.

அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொலியா மற்றும் பிரேசில் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதை வளிமண்டல் அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை 18ஆயிரம் அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைடு எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளாக நாளாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கின்றது. இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் இது பரவியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க பகுதியிலுள்ள காடுகளும் தீப் பற்றி எரிந்துவருகிறது

எனினும் நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைடு நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டியிருக்கும். கார்பன் மோனாக்சைடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். அதேநேரம் அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது மரணிக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக தீப் பற்றி எரிந்துவருகின்றன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது மக்களை பெரும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தை பிரேசில் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாத நிலையில், உலக நாடுகளின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து தற்போது தீயை அணைப்பதற்கான முயற்சியை பிரேசில் மேற்கொண்டுள்ளது. ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசன் காடுகளின் தீயை அணைப்பதற்கு 22 மில்லியன் அமெரிக்கா டொலர் வழங்குதற்கு முடிவு செய்யப்பட்டது. எனினும் அந்த உதவியை பிரேசில் மறுத்துவிட்டதுடன் நிதியை ஏற்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

நாசா வெளியிட்டுள்ள ஒளிப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீவிரமடையும் முரண்பாடுகள்! திணறும் ரணில்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பங்காளி கட்சிகளுடன் ரணில் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அடுத்த மாதத்திற்கு அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றிருக்கிறது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களாகிய மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஜனநாயக தேசிய கூட்டணி என்ற அரசியல் சக்தியை உருவாக்குவதற்கான யாப்பு நிறைவு செய்யப்பட்டதாக பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

இந்த யாப்பில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் அண்மைய நாட்களாக கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை இணைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியிருக்கின்றார்.

அதேபோன்று அடுத்த சந்திப்பு எதிர்வரும் 31ஆம் திகதி நடத்தப்படும் என்றும் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பதற்றத்தையடுத்து மீண்டும் மட்டக்களப்பில் போராட்டம்! பாதுகாப்பு தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் மனித எச்சங்களை அகற்றுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வண்டிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சீயோன் தேவாலய தற்கொலைதாரியான முகம்மது அஸாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மட்டக்களப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடா பிரதமரை முத்தமிட்டு வரவேற்ற டிரம்ப் மனைவி! வைரலாகும் புகைப்படம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி முத்தமிட்டு வரவேற்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருவதை அடுத்து டிரம்ப்பை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் அனைத்து தலைவர்களும் தங்கள் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு வந்தது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தனது அருகில் அழைத்த டிரம்ப் மனைவி மெலானியா திடீரென அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.

இதை அங்கிருந்த ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வைத்து மெலானியா, கனடா பிரதமரை காதலிப்பதாகவும், விரைவில் அவர் கனடா சென்றுவிடுவார் என்றும் நெட்டிசன்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டிரம்ப்பின் ரியாக்சன் தான் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் காரணமாக இருக்கின்றது.

கொழும்பில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான இரண்டு ரயில்கள்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்குச் செல்லும் பிரதான ரயில் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் செல்லும் ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் எவரும் காயமடைய வில்லை என ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு விரைவில் குறித்த பாதையினூடாக சேவைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்.

அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது.

அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டலின் பாடும் திறனை உலகறியச் செய்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும்,

மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதிக்குத் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க தயாராகும் கட்சி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலினூடாக நியமிக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ளது.

அதற்கு முன்னதாக அவர்களுடன் பேச்சு நடத்தப்பட இருப்பதோடு அவர்களின் முடிவுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

சு.க ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்,

“எமது கட்சியில் ஒரு காலையும் வேறு கட்சியில் இன்னொரு காலையும் வைத்திருப்பவர்களுக்கு இனிமேல் கட்சியில் இடமில்லை. கட்சியைத் துப்புரவு செய்து பலமான கட்சியாக மேம்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.கவில் இணைந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து செயற்படாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குறித்த பட்டியல் மத்திய குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவர்களுடன் முதலில் கலந்துரையாட இருக்கிறோம். உடன்பாடு ஏற்படாவிட்டால், அவர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதிக்குத் துரோகம் செய்து வேறுகட்சியில் இணைந்த தேசிய பட்டியல் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் சு.க உறுப்பினர்களுக்குப் பதில் கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்!

ஸ்பெயினின் Costa del Solஇல் அசுத்தமான மருந்துகளை உட்கொண்ட பிறகு 16 சிறுவர்களுக்கு “ஓநாய் நோய்க்குறி” தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

மயிர்மிகைப்பு (Hypertrichosis) எனப்படும் உடம்பு முழுவதும் ரோமம் வளரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மருந்து, சூத்திரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த நோய் உடல் முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

நோயின் தீவிரத்தை அடுத்து, Farma-Química Sur SL என்ற மருந்தினை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என, கடந்த ஜூலை 11ஆம் திகதி மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்கான ஸ்பெயின் நிறுவனம் உத்தரவிட்டது.

குழந்தைகள் இந்த மருந்து உட்கொள்வதை நிறுத்தியபோது அவர்களின் முடி வளர்ச்சி குறைவடைந்ததனை அவதானிக்க முடிந்ததாக El Pais தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த மருந்தை வழங்கியிருந்தால், மருத்துவ உதவியை நாடவும் எனவும், இந்த மருந்தை சரிபார்க்கவும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்தினை உட்கொண்டமையினால் பாதிப்பு ஏற்பட்ட 13 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய மருந்தினை விற்பனை செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

An Indian schoolboy with hypertrichosis (file photo) A Mexican man with the condition (file photo)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“உத்தேச தேசிய ஜனநாயக முன்னணி அடுத்த சில நாட்களுக்குள் உருவாக்கப்படும். அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பும் வெளியாகும்.

எவ்வாறாயினும், புதிய கூட்டணி உருவாகும் தினம் குறித்து தன்னால் உறுதியாக கூறமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.

அதேபோல் பிளவுகளும் கிடையாது. இந்நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தொடரும் பதற்றம்: பொலிஸ்-அதிரடிப்படை தடியடி! பலர் காயம்!!

மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தொடர்ந்து அப்பிரதேசம் பதற்றத்துடன் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு – காத்தான்குடியில் பயங்கரவாதி ஒருவரின் உடல் பாகத்தை, அங்குள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள், நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மட்டக்களப்பு – கல்லடிப் பாலத்தை மறித்தபோதே, அங்கு வந்த பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதல்களில், ஆண், பெண் என இருபாலாரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அப்பகுதி மக்கள், பயங்கரவாதியின் உடற்பாகங்கள் அகற்றப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுகிறது.

அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய அதிஷ்டத்தை வென்ற நபர்!

சிட்னியில் அதிஷ்ட இலாப சீட்டில் நபர் ஒருவர் இரண்டாவது மிகப்பெரிய பணப் பரிசை வென்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளார்.

96 மில்லியன் டொலர் வென்ற அவர் ஒரு தொழில்முறை அலுவலக ஊழியராக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அந்த நபர் மெகா ஜாக்பாட் குழுக்களில் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசை வென்று திடீர் கோடீஸ்வரர் அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

தனது அலுவலக பணியில் இருந்த குறித்த நபருக்கு திடீரென வாழ்க்கையை மாற்றும் அந்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. அந்த தொலைபேசி அழைப்பினால் தான் ஒரு கோடீஸ்வரரர் என அறிந்த ஒரு கணம் திகைத்துப்போன அவர் அமைதியாகினார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சிட்னி பெண் ஒருவர் 107.5 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளார்.

அத்தகைய பிரத்தியேக மில்லியனர் குழுவில் இணைவது எப்படி இருக்கின்றது என குறித்த நபரிடம் கேட்டபோது, “நான் திகைத்துப் போனேன. நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க என்னிடம் உள்ள ஒரே வார்த்தை அது மாத்திரமே. என் மனைவியை அழைத்து நான் வென்ற விடயத்தை கூறும் வரை என்னால் காத்திருக்க முடியாது. நான் கூறுவதனை அவர் நம்புவது கடினம் தான். இந்த பணத்தை கொண்டு எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பேன். எனக்கான சிறப்பான சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன்..” என குறித்த பணத்தை வென்ற நபர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளால் திணறிய இராணுவ தளபதி!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் முறையான ஒத்துழைப்பை வழங்கத் தவறி வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இராணுவ தளதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

எந்தவொரு ஆவணத்தையும் இராணுவத்திடம் நீதிமன்றம் கோரும் பட்சத்தில் அவற்றை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராணுவ தளபதி இதனைத் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு செய்வதில்லை என்ற புலனாய்வு பிரிவின் குற்றச்சாட்டு தொடர்பாக இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து நேரடி பதிலை அளிப்பதிலிருந்து இராணுவத் தளபதி நழுவிக்கொண்டார்.

‘நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் குறைத்து மதிப்பீடு செய்து செயற்படமாட்டோம். இராணுவம் எப்படியாயினும் ஸ்ரீலங்கா பிரஜை என்ற வகையில் எமது நீதிமன்றத்திற்கு நாங்கள் மிகவும் கௌரவத்தை அளிக்கின்றோம். எமது தரப்பில் ஏதாவது கோரினால் வழங்க முடியுமான அல்லது எம்மிடத்தில் இருப்பதை நீதிமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்.

இராணுவத்தில் இருக்கும் புலனாய்வுக் கட்டமைப்பை விரைவில் மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ளோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக புலனாய்வுப் பிரிவு செயற்பட்டு வருகிறது. புலனாய்வுப் பிரிவை மறுசீரமைப்பு செய்து பலப்படுத்தினால் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி தேர்தல் வரையில் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் ஏப்ரல் மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்பதற்கு ஜனாதிபதி தரப்பினர் முயற்சித்து வருவதாகவும்,

இதன்படி நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் ஆலய வளாகத்தில் 9 பேருக்கு நேர்ந்த கதி!

நல்லுாா் கந்தசுவாமி ஆலய சூழலில் பிச்சை எடுத்த 9 பேர் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர்.

யாசகர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமையில் இருந்த பணம், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளை சான்றுப்பொருள்களாக பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர். 9 பேரும் யாசகம் பெற்ற போதே கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொருவரும் பதுளை, ஹட்டன் என மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஆலயத்தில் கூடும் அடியவர்களிடம் திருட்டில் ஈடுபடவே வந்துள்ளனர் என்று சந்தேகம் உள்ளது என்று பொலிஸார் மன்றுரைத்தனர். 9 பேரும் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். 9 பேரையும் கடுமையாக எச்சரித்த நீதிவான், அவர்களை அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், அவர்களது உடமையிலிருந்து மீட்கப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை மீள வழங்குமாறும் நீதிவான் அறிவுறுத்தினார்.

பளை வைத்தியரின் தகவலில் சிக்கிய பாரிய அளவிலான ஆயுதங்கள்!

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன்,

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.