இன்றைய நாள் (01.10.2019) உங்களுக்கு எப்படி?

மேஷம்
எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம்.தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்
எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம்காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்
இன்று விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்
இன்று எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். நண்பர்கள் திடீர் டென்ஷனை உண்டாக்குவார்கள். அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்
தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி
வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் நிதானம் தேவை.சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்
இன்று வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்
இன்று எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும்.முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்
இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்,
நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஆட்டம்: வென்றது பாகிஸ்தான்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி, பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது-20 போட்டிகளைக் கொண்ட தொடர்கள் நடைபெற்றுவருகின்றன.

இதில், முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் முதலாவது ஆட்டம் மழை காரணமாகத் தடைப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ஓட்டங்களைச் சேர்த்தது.

அந்த அணி சார்பாக பாபர் அஸாம் சதமடித்து (115) அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தார்.

பின்னர், 306 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணி, 8 ஓவர்களில் 28 ஓட்டங்களுள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில், ஷெகான் ஜெயசூரிய – ஷானக ஜோடி அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்டு, ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்தியது.

இந்த ஜோடியின் ஆட்டம் இலங்கை அணியை உத்வேகப்படுத்தியது.

எனினும் இவர்களால் கடைசிக்கட்டம் வரை நிலைக்க முடியவில்லை. ஷெகான் ஜெயசூரிய 96 ஓட்டங்களுடனும் ஷானக 68 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இலங்கையின் வெற்றிப் பயணம் இடை நடுவே பாதை மாறியது.

பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ஓட்டங்களுள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால், பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தின் நாயகனாக பாகிஸ்தானின் பாபர் அஸாம் தெரிவானார்.

இந்த வெற்றி மூலம், மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1:0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலைபெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது ஆட்டம் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.

சஜித்துக்கு தமிழரின் ஆதரவு: அவரது தேர்தல் விஞ்ஞாபனமே தீர்மானிக்கும்! ரணிலிடம் அலரிமாளிகையில் வைத்து சம்பந்தன் இடித்துரைப்பு!!

“சஜித்தின் தேர்தல் வாக்குறுதிகளில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கியிருந்தால் மாத்திரமே எமது ஆதரவு அவருக்குக் கிடைக்கும் என்பதை நாம் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தித் தெரிவித்துள்ளோம் ” என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ‘எதிரொலி’க்குத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐக்கிய தேசிய முன்னணியினர் உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் ரணிலின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அலரிமாளிகைக்கு இன்று மாலை சென்றனர்.

இதன்போதே சம்பந்தன் மேற்படி கருத்தைத் வெளிப்படுத்தினார் என எதிரொலிக்குத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“சஜித் வெளியிடுகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு இருந்தால் மாத்திரமே அவருக்கு ஆதரவளிப்போம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம்.

சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே அதிகமாகக் கலந்துரையாடப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான அதிகபட்ச அதிகாரப் பரவலுடனான தீர்வு, காணி விடுவிப்பு, கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம், தமிழர் நிலத்தில் பிக்குகளின் அடாவடித்தனம் என்பன குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.” என்றார்.

யாழ். சிறுவன் அடித்த இரட்டைச் சதம்!

பாடசாலைகளுக்கிடையிலான சிங்கர் கிண்ண உள்ளக கிரிக்கெட் போட்டி ஒன்றில், யாழ். மத்திய கல்லூரி மாணவன், இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பாடசாலை மட்ட 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி ஒன்றில் யாழ். மத்திய கல்லூரி, கேகலு வித்தியாலத்தை எதிர்கொண்டது.

இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 440 ஓட்டங்களைச் சேர்த்தது.

மத்தியின் வீரரான சத்யன் கெவின்ரெக்‌ஷன், 139 பந்துகளை எதிர்கொண்டு கடைசிவரை ஆட்டமிழக்காமல் 287 ஓட்டங்களைச் சேர்த்தார். அவருடன் மறுமுனையில் நின்ற ஜகோப் ஜபேசன் 124 ஓட்டங்களைச் சேர்த்தார்.

பின்னர் தனது ஆட்டத்தை ஆடிய கேகலு வித்தியாலயம், வெறும் 8 ஓட்டங்களுள் சுருண்டது.

இந்த ஆட்டத்தில் இரட்டைச் சதத்தை அடித்த கெவின்ரெக்‌ஷன், அணியின் வெற்றிக்கும் பாரிய பங்களிப்பை ஆற்றி, சிறிய வயதிலேயே இரட்டைச் சதத்தை அடித்துச் சாதனை படைத்துள்ளார்.

கோத்தா இலங்கைப் பிரஜை இல்லை: வழக்கு ஒக். 3இல்!

கோத்தாபய ராஜபக்‌ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனைத் தடுக்கக்கோரியும் முன்வைக்கப்பட்ட மனு, எதிர்வரும் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான யசந்த கோகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், குறித்த மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதே சரியாக அமையும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து குறித்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் மூன்றாம் திகதி நடத்துவதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 64இல் விஜய்சேதுபதி: உறுதிப்படுத்தியது தயாரிப்பு நிறுவனம்!

இளையதளபதி விஜயின் 64ஆவது படத்தில் விஜய்சேபதி இணையவுள்ளார். இதை தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி. பிலிம் கிரியேசன் இன்று மாலை 5 மணியளவில் அறிவித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர், மாநகரம் படக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இதில், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பார் என செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் குறித்த படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் இன்று அதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்!

“எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்புள்ளது ” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையத்தைத் திறந்து வைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு –

“நாடாளுமன்ற அமர்வுகளை நாட்டு மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக ஒலி-ஒளிபரப்புவதற்குத் தீர்மானித்தோம். அது தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள நாடாளுமன்றங்களில் இலங்கை நாடாளுமன்றம் சிறப்பான நாடாளுமன்றமாகத் திகழ்கிறது.

அதேவேளை, தற்போதைய நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஆறு மாதங்களில் கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன ” என்றார்.

பாடசாலைகள் வழமைக்குத் திரும்பின!

பாடசாலைகள் இன்று முதல் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், குறித்த இரு நாட்களும் பாடசாலைகள் முடங்கின.

இந்நிலையில், சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அரசால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழு, தொழிற்சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுகளை நடத்தவுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் பாடசாலைகள் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்பியுள்ளன.

‘புதிய இலங்கைக்கு சஜித்’: முல்லையில் வரவேற்பு!

‘புதிய இலங்கைக்கு சஜித்’ என எழுதப்பட்ட சுவரொட்டிகள் முல்லைத்தீவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, நிலையில் நாடு பூராகவும் அவருக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், அவரை வரவேற்கும் முகமாக முல்லைத்தீவு நகர், புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத் தீவின் ஏனைய பகுதிகள் என பல பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், ‘புதிய இலங்கைக்கு சஜித்’ என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நீதிமன்றில் இருவருக்கு தூக்கு; ஒருவருக்கு இரண்டாவது தடவை!

புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றனர் என குற்றச்சாட்டப்பட்ட இருவருக்கு, யாழ். உயர் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்துள்ளது. இவர்களுள் ஒருவர் மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ஏற்கனவே தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் செர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2011ஆம் ஆண்டு சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு டிசம்பரில் சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காக முதலாவது குற்றச்சாட்டும், சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையிலிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்தமைக்காக இரண்டாவது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தொடர் விளக்கமாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.

இந்நிலையில், வழக்கு இன்று (30) திங்கட்கிழமை தீர்ப்புக்காக அழைக்கப்பட்டது. வழக்கில் எதிரிகள் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இவர்களுள் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ஏற்கனவே தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவிலாற்றில் இளைஞர் மாயம்; குளிக்கச் சென்றவேளை விபரீதம்!

திருகோணமலை – மாவிலாறு குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இச்சம்பவம் நேற்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர், திருகோணமலை-திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த மனோகரகாந்தன் சஜீவன் (22 வயது) எனத் தெரியவந்துள்ளது.

திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவிலாறு பகுதிக்கு குளிப்பதற்காகச் சென்றவேளை, ஒருவரை காணாமல் போயுள்ளார். அவரை முதலை இழுத்துச் சென்றதா அல்லது நீரில் மூழ்கினாரா என்பது குறித்து எதுவும தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

மொட்டைக்கூட விடமுடியாதவர்களுடன் எதற்கு சகவாசம்?

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்காக நாம் எவ்வளவோ செய்துள்ளோம். ஆனால், அவர்கள் எமக்காக சின்னத்தை மாற்றுவதற்கே யோசிக்கிறார்கள். எனவே, அவர்களுடன் எதற்காக நாம் கூட்டுச் சேரவேண்டும் ” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்விகேட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு குருணாகல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால்தான், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்காக நாம் நிறையவே செய்திருக்கிறோம். ஆனால், அவர்கள் எமக்காக ஒரு சின்னத்தைக் கூட மாற்ற விரும்புகிறார்கள் இல்லை.

கோத்தாவுக்கு எமது வாக்கைப் போட நாம் தயார். ஆனால், சின்னத்தையே விட முடியாதவர்களுக்கு நாம் எப்படி வாக்களிப்பது?

“மகிந்த தரப்பினருடன் கூட்டணி வைப்பதாயின் மொட்டுச் சின்னத்தை மாற்ற வேண்டும் என்பதே
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மட்ட உறுப்பினர்களதும் விருப்பம் ” என்றார்.

பல்கலை ஊழியர்களுக்கு நாளை தீர்வு?

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு கிடைக்கும் என உயர்கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை ஆவணம் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, தீர்வு குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு –

ஜனாதிபதி நியமித்த துணைக்குழு, பல்கலைக்கழக கல்வி சேவைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான, பேச்சுகள் நாளை (இன்று) நடைபெறவுள்ளன. இதற்கமைய, செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்” என்றார்.

புலமைப் பரிசில் பெறும் மாணவர் தொகை அதிகரிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் நிதியுதவி பெறும் மாணவர்களின் தொகை, மேலும் 5 ஆயிரம் மாணவர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளைப் பெற்ற 5 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 5 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சஜித்தைப் பலப்படுத்த அழைக்கிறார் மனோ!

” ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிப் பெற வைக்கும் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து சிறுபான்மை கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ” அமைச்சர் மனோகணேசன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு-

” சஜித் வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும், எல்லாம் கிடைத்து விடுமென நான் கூறவில்லை. ஆனால், மீண்டும் “பேரழிவு” வராமல் தடுத்திட இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கான இன்றைய கேடயம்தான், சஜித்!

நிதானமாகச் சிந்திக்கும் எவரும் இதை விளங்கிக் கொள்ளவேண்டும். நாம் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளவும் வேண்டும்.

எந்தவொரு கட்சியையும் எமது ஜனாதிபதித் தேர்தல் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாமென, எமது அரசாங்கத்துக்கு உள்ளே எந்தவித நிபந்தனையும் தமிழ் முற்போக்கு கூட்டணி விதிக்கவில்லை. எல்லோரையும் இணைந்துகொள்வோம் எனத்தான் கூறுகிறோம்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிப் பெற வைக்கும் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து சிறுபான்மை கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கிறோம் ” என்றார்.

https://www.facebook.com/ManoGanesanDPF/photos/a.1749501618599229/2382717328610985/?type=3&theater

இன்றைய நாள் (30.09.2019) உங்களுக்கு எப்படி?

மேஷம்

எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம்.தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்
எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம்காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்
விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்
எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். நண்பர்கள் திடீர் டென்ஷனை உண்டாக்குவார்கள். அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்
தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி
வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் நிதானம் தேவை.சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்
வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்
எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும்.முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்
தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்
தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

யாருக்கு ஆதரவு?: முதலில் பேச்சு; பிறகு முடிவு!

“ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எடுக்கவில்லை. வேட்பாளர்களுடனும் பேசிய பின்னரே தீர்மானத்தை எடுக்கமுடியும் ” என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில் இன்று (29) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டபோதே சுமந்திரன் இதைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“நாம் பங்கெடுக்கின்ற நிழ்வுகளுக்கு அமைச்சர்கள் வருகின்றபோது அவர்களுக்கு நன்றி செலுத்திப் பேசுவது வழக்கம். வேறொரு நிகழ்வுக்கு ஓர் அமைச்சர் வந்தால், அவரையும் நன்றி செலுத்திப் பேசுவது வழக்கம்.

அந்த விதத்தில், சில பொதுவான நல்ல கருத்துக்கள் சிலவேளைகளில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரையாவது ஆதரிக்கவேண்டும் என்றோ, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் எல்லா வேட்பாளர்களுடனும், அவர்கள் விரும்பினால் பேச்சு நடத்துவதெனத் தீர்மானித்திருக்கின்றோம்.

எனவே, இத்தகைய பேச்சுகள் முடிந்த பின்பு, அவர்களது பகிரங்கமான நிலைப்பாடுகளை அவதானித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம். இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்தத் தீர்மானங்களும் எட்டப்படவில்லை.” என்றார்.

சவுதிமன்னரின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை ; பதிலுக்கு கொலையாளியைச் சுட்டுக்கொன்ற பொலிஸ்!

சவுதி மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர், அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உடனடியாகவே, சம்பவ இடத்தில் வைத்து கொலையாளியையும் பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல் ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 2015ஆம் ஆண்டு இறந்தபின்னர், அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல் பக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்றுமாலை ஜெத்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்க, அப்துல் அஜிஸ் அல்- பக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்துல் அஜிஸ் அல் பக்மை நோக்கி அவரது நண்பர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல் பக்ம் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸார், கொலையாளியை சம்பவ இடத்திலேயே வைத்து சுட்டுக் கொன்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளனர் என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுதந்திரபுரத்தில் கிளைமோர்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரப் பகுதியில் கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சுதந்திரபுரம் பகுதியில், நேற்று (28) தனியார் ஒருவரின் நிலத்தை உழுதபோது புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொகுதி வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர், சம்பவம் குறித்து அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அங்கு சென்று எட்டு கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் அடையாளம் கண்டனர்.

பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவற்றை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு கடிதம் வரைந்தார் சம்பந்தன்!

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற பிக்குகளின் அடாவடி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைரான இரா சம்பந்தன், கடிதம் ஒன்றை வரைந்து அனுப்பியுள்ளார்.

அதில்,
நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த பொலிஸார், நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.

எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றத் தவறிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை மீறிய நபர்கள் முறையாகக் கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என்றுள்ளது.

கடிதத்தின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.