உக்ரைனில் போர்: அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு என்ன?


உக்ரைனில் போர் மூண்டால் தனது படைகளை அனுப்ப மாட்டாது என அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் Simon Birminghamதெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது கிழக்கு எல்லைக்கு தரைப்படை, விமானப்படை,கடற்படை என்பவற்றை அனுப்ப உள்ளது. அமெரிக்காவும் சிறிய எண்ணிக்கையிலான படையை அனுப்புவதாக உத்தரவாதமளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படையை மீளப் பெற்று விட்டு இராஜதந்திரரீதியிலான பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐப்ரோப்பிய நாடுகளுடனும் உக்ரைனுடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவர் மேற்கு நாடுகள் உக்ரைனை ஆக்கிரமிக்கப்பார்க்கினறன என கூறியிருந்ததற்கு உக்ரைன் இராஜதந்திரி இந்தக்கூற்று பொய்யானது என கூறியிருந்தார்; இவர்களுடைய கருத்துக்கள் தொடர்பாக நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதே வேளை உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது துருப்புகளை வாபஸ் பெற வேண்டுமெனவும் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையிட்டு தாங்கள் வெட்கப்படப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே 2014,15ம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக சில தடைகளை விதித்திருந்தது இவற்றை விரிவு படுத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரஷ்யா 100,000 துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

‘பொருளாதாரத்தை மீட்க ரணிலின் இரும்புக் கொள்கைத் திட்டம்’

நாடு நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் பெத்தானி 101 பங்களாவில் சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடனான கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

மேலும்,புத்தளம் ‘பெத்தானி பங்களா’ இதற்கு முன்னர் எஸ் .சி. டபிள்யூ.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆட்சியை பிடிக்கும் முதல் உள்ளகக் கலந்துரையாடலை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.

அசைக்க முடியாத இரும்புக் கொள்கை திட்டத்தை தான் தயாரித்துள்ளதாகவும் இதுவே இலங்கையை மீட்டெடுக்க ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மக்கள் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கான நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

குறிப்பாக டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு பதிலாக நெருக்கடிக்கு மாற்று ஏதும் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என ரணில் அண்மையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

“நல்லாட்சியின் போது இலங்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றோம்.. கடினமான காலங்களில் அந்த நிதியத்திற்கு சென்றோம் ஆனால் அது நாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டின் நிதி ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

‘முகநூலில் அநுரவே ஜனாதிபதி’ – பதவி வழங்கிய அமைச்சர்

” அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால், முகநூலில் அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி. மறுபுறத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித்தும் கதைக்கின்றார். கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டை சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும். கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயகம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்.” – என்றார்.

அடங்க மறுக்கும் வடகொரியா! ஒரே மாதத்தில் 7ஆவது முறையாக ஏவுகணை சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக தெரிகிறது.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியது. அதை அமெரிக்கா ஏற்கவில்லை.

இந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை.

இந்தநிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் வடகொரியா நடத்தும் 7-வது சோதனை இதுவாகும். 800 கி.மீட்டர் தொலைவு இந்த ஏவுகணை பறந்து கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என சொல்லப்படுகிறது.

‘மாஸ்’க்குகளால் சுழலுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து…

உலக வங்கி புள்ளி விவரங்களின்படி ஒரு நொடிக்கு 50 ஆயிரம் மாஸ்க்குகள் (முகக்கவசம்) உலகம் முழுவதும் தூக்கி எறியப்படுவதாக சூழலியலாளர் சுபுன் லஹிரு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உலகவங்கியின் புள்ளிவிவரங்களின்படி ஒரு நிமிடத்திற்கு சுமார் 30 இலட்சம் பாவித்த மாஸ்க்குகள் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுச்சூழலில் எறியப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறையற்ற வகையில் வீதிகளில் மற்றும் சுற்றாடலில் எறியப்படும் 1.56 பில்லியன் மாஸ்க்குகள் வருடாந்தம் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன.

உலகில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்தவுடன் கடலில் கலக்கும் வைத்திய இரசாயனக் கழிவுகள் 87% அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் மாஸ்க் பாவிக்கும் அனேகமானோர் முறையாக மாஸ்க்குகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதில்லை எனவும் உலக வங்கி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்

எதிரணிக்குள் பிளவு – தகவல் வெளியிட்ட அமைச்சர்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் ஆரம்பித்துவிட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
 
” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது கடும் சீற்றத்துடனேயே மேடையேறிவருகின்றார். சிலர் ஜனாதிபதி ஆடையை தற்போதே தைத்துள்ளனர் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார். சம்பிக்க ரணவக்கவை இலக்கு வைத்தே சஜித் இவ்வாறு உரையாற்றியுள்ளார். இதன்மூலம் எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவேதும் இல்லை எனவும், எதிரணியை பலவீனப்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் பங்கேற்புடன் ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

‘தடுப்பூசி ஏற்றாதோர் சொந்த குழுந்தைகளைக்கூட பார்வையிடமுடியாது’

கொவிட் – 19 வைரசுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத பெற்றோர், நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ள தமது குழந்தைகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்கும் விதத்தில் புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கு மேற்கு ஆஸ்திரேலிய பிரிமீயர், நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

அத்துடன், ஜனவரி 31 ஆம் திகதி – அதாவது நாளை முதல் தடுப்பூசி சட்ட விதிகள் தனது மாநிலத்தில் கடுமையாக இருக்கும் என்று மேற்கு ஆஸ்திரேலியா பிரிமீயர் அறிவித்துள்ளார்.

இதன்படி தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டுமே வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் – அவ்வாறு விதிவிலக்கில்லாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் சொந்தக் குழந்தைகளைப் பார்ப்பதற்குகூட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகும்பட்சத்தில் அவர்கள் சிகிச்சைபெறுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

இளைஞரை காப்பாற்ற முற்பட்ட நான்கு யுவதிகள் பலி! பதுளையில் சோகம்!!

பதுளை, அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து (பெஸ்ட் டிவிசன்) கெரண்டியல்ல பகுதியில் ஓடும் உமாஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி பிற்பகல் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

குறித்த பிரிவில் வசித்து கடந்த வருடம் இறந்த ஜெயராம் என்பவரது ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கடந்த 28ஆம் திகதி கலந்து கொண்ட உறவினர்களில் 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்.

ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவரும் 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக யுவதிகள் ஒவ்வொருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் தோட்ட இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டு உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயராம் காஞ்சனப்பரியா (வயது21), செல்வகுமார் பரிமளாதேவி (வயது19), அட்டன், திம்புலப்பத்தனயைச் சேர்ந்த அடையப்பன் பவானி சந்திரா (வயது24), அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவைச் சேர்ந்த வனராஜா டேவிட்குமார் (வயது 23) ஆகியோர் அடங்குவர். ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் சசிப்பிரியா (வயது20) என்ற யுவதியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்களை மீட்கும் பணிக்கு தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. உயிரிழந்த எஸ்.சசிப்பிரியா, எஸ்.பரிமளாதேவி (திரிஷா) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் இப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணமல் போன யுவதியின் சடலத்தை மீட்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

‘மனைவியை சிறையில் அடைப்பேன்’

” ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குவதே எமது இலக்கு. எனவே, எனது மனைவி ஊழல் செய்தால்கூட நிச்சயம் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இராணுவக் கட்டமைப்பு உட்பட எல்லா துறைகளிலும் முன்னர் ஒழுக்கம் இருந்தது. ஊழல் என்பதற்கு இடமே இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஊழல் தலைவிரித்தாடுகின்றது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். விரைவில் எமது ஆட்சி உருவாகும். அப்போது ஊழல் அற்ற ஆட்சி மற்றும் நிர்வாகம் முன்னெடுக்கப்படும். சட்டம் என்பது பொதுவாக செயற்படும். எனது மனைவி களவாடினால்கூட சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

“நியோ-கோவ்” என்ற புதிய வைரஸ் கோவிட்டின் மற்றொரு திரிபு அல்ல

வௌவால்களில் தோன்றுகின்ற கொரோனா வைரஸ் வகைகளில் புதிய ஒரு பிறழ்வைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவகை வௌவால் இனங்களில் இருந்து சில காலத்துக்கு முன்னர் கண்டுபிடித்த இந்த திரிபுக்கு “நியோ-கோவ்” (NeoCoV) என்று அவர்கள் பெயரிட்டிருக்கின்றனர்.

இன்னமும் பூரணமாக மதிப்பாய்வு செய்யப்படாத நிலையில் புதிய திரிபு பற்றிய தகவல் இந்த வாரம் சீன மருத்துவ ஆய்வு சஞ்சி
கையாகிய biorxiv இல் கட்டுரை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

உடனடியாகவே இத்தகவல் இணையத்தில் பரவியது. ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் ஒன்று தோன்றியுள்ளது என்றவாறு செய்திகள் பரவி மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒமெக்ரோ னுக்குப் பிந்திய அடுத்த திரிபு இது என்று திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் இந்தியாவில் பரவின.

சீன நிபுணர்கள் அறிவித்த “நியோ – கோவ்” என்ற இந்தத் திரிபு கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான். ஆனால் தற்சமயம் உலகெங்கும் பரவும் தொற்று நோயாகிய ‘கோவிட் -19’ இன் ஒரு திரிபு அல்ல. அது இன்னமும் மனிதர்களில் தொற்றவில்லை. மரணங்களும் ஏற்படவில்லை – என்று நோயியல் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி அது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உட்பட சில நாடுகளில் பரவிய
“மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி” (Middle East respiratory syndrome)என்னும் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய புதிய திரிபு ஆகும்.

“மேர்ஸ்” (MERS-CoV) என்று அழைக்கப்படும் தொற்று நோய்க் குடும்ப வைரஸின் அடுத்த பிறழ்வுகளில் ஒன்றுதான் இந்த “நியோ-கோவ்” என்று விளக்கமளிக்கப்படுகிறது.

” நியோ கோவ் “குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
பலர் தங்கள் ருவீற்றர் பதிவுகளில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆனால் மனித குலம் அடுத்து எதிர்கொள்ளக்கூடிய பெரும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று நோயாக இந்த”நியோ-கோவ்” மாறிவிடக் கூடும் என்ற எச்சரிக்கையையே சீன நிபு
ணர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

வௌவால்களில் காணப்படும் இக் கிருமி மேலும் பிறழ்வுகளை எடுத்தால் அதன் அடுத்த ஒரு திரிபு மனித உடல் அணுக்களில் நுழையும் வல்லமையைப் பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

“நியோரோமிசியா” (Neoromicia) என்ற வௌவால் இனங்களில் கண்டறியப் பட்ட வைரஸ் என்பதாலேயே அதற்கு
நியோ-கோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘இனி பூஸ்டரை புறக்கணித்தால் அபராதம்’

கொவிட்டுக்கு எதிராக மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு எதிராக எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து சுகாதார அமைச்சுக்கு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் அபராதம் விதிக்கும் யோசனை முக்கியமானதாகும். அபராதம் விதிப்பதற்கு சட்டத் திருத்தம் தேவையா?யார் அபராதம் அறவிடுவது? போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

உலகில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பல நாடுகளில் அமுலில் உள்ளது. இத்தாலியில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 100 யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது.

இலங்கையில் பஞ்சம் ஏற்படுமா?

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் பஞ்சம் ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். ஆனால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது. அறுவடையில் சற்று குறைவு ஏற்பட்டாலும், உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

கடந்த போகத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அறுவடையே, இன்றும் நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும். நாம் விவசாயிகளை பாதுகாப்போம்.” – என்றார்.

மிக முக்கிய நியமனம் குறித்த தகவல் வெளியானது

கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜனாதிபதி இடைநிறுத்தியதால் கோப் உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளதால் மேற்படி குழுக்களுக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும். அந்தவகையில் கோப் குழுவின் தலைமைப்பதவியை சரித ஹேரத்துக்கே மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

‘போராடுவதில் பயன் இல்லை – வாருங்கள் பேச்சு நடத்துவோம்’

போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக அரசுடன் பேச்சு நடத்த வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நீதி அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரால், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பேசிய அமைச்சர், கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு என்ன கிடைத்தது என கேள்வியெழுப்பினார்.

மேலும் போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை என்றாலும் அதனால் எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் கூறினார்.

ஆகவே பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

“நியோ-கோவ்” என்ற புதிய வைரஸ் கோவிட்டின் மற்றொரு திரிபு அல்ல

 வைரஸ் திரிபு பற்றிய செய்திகளில்

“திரிபு” என்று நிபுணர்கள் விளக்கம்

வெளவால்களில் தோன்றுகின்ற கொரோனா வைரஸ் வகைகளில் புதிய ஒரு பிறழ்வைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவகை வெளவால் இனங்களில் இருந்து சில காலத்துக்கு முன்னர் கண்டுபிடித்த இந்ததிரிபுக்கு “நியோ-கோவ்” (NeoCoV) என்று அவர்கள் பெயரிட்டிருக்கின்றனர். இன்னமும் பூரணமாக மதிப்பாய்வு செய்யப்படாதநிலையில் புதிய திரிபு பற்றிய தகவல் இந்த வாரம் சீன மருத்துவ ஆய்வு சஞ்சிகையாகிய biorxiv இல் கட்டுரை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

உடனடியாகவே இத்தகவல் இணையத்தில் பரவியது. ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் ஒன்று தோன்றியுள்ளது என்றவாறு செய்திகள் பரவி மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒமெக்ரோனுக்குப் பிந்திய அடுத்த திரிபு இது என்று திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் இந்தியாவில் பரவின. சீன நிபுணர்கள் அறிவித்த “நியோ – கோவ்” என்ற இந்தத் திரிபு கொரோனாவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான்.ஆனால் தற்சமயம் உலகெங்கும் பரவும் தொற்று நோயாகிய ‘கோவிட் -19’ இன் ஒரு திரிபு அல்ல. அது இன்னமும் மனிதர்களில் தொற்றவில்லை. மரணங்களும் ஏற்படவில்லை – என்று நோயியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி அது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உட்பட சில நாடுகளில் பரவிய”மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி” (Middle East respiratory syndrome ) என்னும் கொரோனா வைரஸூடன் தொடர்புடைய புதிய திரிபு ஆகும். “மேர்ஸ்” (MERS-CoV) என்று அழைக்கப்படும் தொற்று நோய்க்குடும்ப வைரஸின் அடுத்த பிறழ்வுகளில் ஒன்றுதான் இந்த “நியோ-கோவ்” என்று விளக்கமளிக்கப்படுகிறது.

” நியோ கோவ் “குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் ருவீற்றர் பதிவுகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் மனித குலம் அடுத்து எதிர்கொள்ளக்கூடிய பெரும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று நோயாக இந்த”நியோ-கோவ்” மாறிவிடக் கூடும் என்ற எச்சரிக்கையையே சீன நிபுணர்கள் வெளியிட்டிருக்கின்றனர். வெளவால்களில் காணப்படும் இக் கிருமி மேலும் பிறழ்வுகளை எடுத்தால் அதன் அடுத்த ஒரு திரிபு மனித உடல்அணுக்களில் நுழையும் வல்லமையைப் பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. “நியோரோமிசியா” (Neoromicia) என்ற வெளவால் இனங்களில் கண்டறியப்பட்ட வைரஸ் என்பதாலேயே அதற்கு நியோ-கோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

(குமாரதாஸன் -பாரிஸ்.)

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த இந்தியரின் படுக்கையறை உடைதெறிந்த கார்! சிட்னியில் நடந்த சம்பவம்


சிட்னி, கிலன்மோர் பார்க் பிரேதேசத்தில் மதுபோதையில் காரை ஒட்டிச்சென்ற பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையை இடித்துதள்ளிய சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“இந்தியாவில் எனது மனைவியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது – நான் பார்த்தேன் எனக்கருகில் கார் ஒன்று நின்றது. எனக்கும் காருக்கும் இடையில் சிறிய இடைவெளிகளே இருந்தன. இச்சம்பவம் இன்னொரு 10 நிமிடங்களுக்குப் பின்னர் நடந்திருந்தால், நான் தூங்கிக்கொண்டிருப்பேன், நிச்சயமாக கார் என் உடலுக்கு மேலாக இருந்திருக்கும்.”- என்று படுக்கறையிலிருந்து உயிர் தப்பிய இந்திய இளைஞர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரிடம் பொலிஸாருடன் பேச முயன்றபோது அவர் அதிகாரிகளுடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது – பொலிஸ் அதிகாரியை எதிர்த்தது உள்ளிட்ட ஐந்து குற்றங்கள் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டதேவேளை அவருக்கு எதிரான வழக்கு அடுத்தமாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (29), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவு இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றின் படி, மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ நிபுணர் பி. குமரேந்திரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.கெங்காதரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், நிதி முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. லிங்கேசியா நிதி முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர்.ஸ்ரீகரன் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்! தெற்கு ஆஸ்திரேலியாவில் சம்பவம்

தெற்கு ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ள  Huntingdale பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிலிருந்து இலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்;.

இச்சம்பவத்தில் இந்திக குணதிலக்க (வயது 40) மற்றும் அவரது மகன் கோஹன், 6, மற்றும் மகள் லில்லி, 4, ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.35 மணியளவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இச் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க தந்தையொருவரும் 4 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இரண்டு பிள்ளைகளினது சடலங்களும் வீட்டின் உட்புறத்திலும் தந்தையின் சடலம் வீட்டின் பிற்பகுதியிலும் காணப்பட்டன என பொலிஸ்தரப்பில் கூறப்பட்டது.

தனது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்காக அவர்களுடைய தாயார் குறித்த வீட்டிற்கு வந்துள்ளார். தனது பிள்ளைகளை அழைத்த போது அவர்கள் வரவில்லை. இதன்பின்னர் சந்தேகமடைந்த அவர் உறவினர் ஒருவரின் உதவியை கோரியநிலையிலேயே குறித்த உறவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த குணதிலகா, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன்  பேர்த்தில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமாவார்.

 இதேவேளை குணதிலக, ஆறு வாரங்களுக்கு முன்பு தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் தனது மனநிலை குறித்து வீடியோ பதிவொன்றை பேஸ்புக்கில்  வெளியிட்டிருந்தார். அதில், “தனிப்பட்ட விடயங்கள் சார்ந்தும் மனநிலை சார்ந்தும் நான் பேஸ்புக்கில் முன்னரும் பதிவேற்றியிருந்தேன். அதனை பார்த்து என்னை தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள். புதிலளிக்காதோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள், மனச்சோர்வினால் பதிக்கப்பட்டவர் அல்லது மனச்சோர்வடைந்த ஒருவராக என்னை நினைத்திருக்கமாட்டார்கள். உண்மையில் நான் மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியாக உணர்கிறேன்  அதற்கான நான் மருந்தை உட்கொண்டிருக்கிறேன், இது உதவக்கூடியது என்று நான் நினைக்கிறேன். மனநோய் என்பது என்னை சுத்தியிருப்போரையும் பாதிக்கும் அதேநேரம் தற்கொலை என்பது அதற்கான தீர்வாகது. மாறாக நண்பர்களையும் மற்றவர்களையும் நாடி அவர்களின் உதவியையும் ஆலோசனைகளை பெறுவது பாரதூரமான முடிவிகளிலிருந்து தப்பிக்க வழிகோலும்” – இவ்வாறு அவர் பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ மனநிலை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் 131114 என்ற இலக்கத்தையும் உடனடி உதவிகளுக்கு 1300224636,1300555788,1800552002,1300659467 போன்ற இலக்கத்துடன் தொடர்புகள் கொள்ளவும்.

‘சந்திக்குவந்த சஜித் – சம்பிக்க மோதல்’

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் மூண்டிருந்த பனிப்போர் தற்போது உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இருவருக்குமிடையில் போட்டி நிலவிவந்த நிலையில், இருவரும் தற்போது வெளிப்படையாக மோத ஆரம்பித்துள்ளனர்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சம்பிக்க ரணவக்க, அதன்பின்னர் 43 ஆம் படையணி எனும் பெயரில் அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தார்.

அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை சம்பிக்க ரணவக்க துரிதப்படுத்தியுள்ளார். மாநாட்டையும் நடத்தி தெற்கு அரசியலில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறு செயற்படுகின்றார் என்பது சஜித்துக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது சம்பிக்கவை சஜித் பொதுவெளியில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

” சிலர் ஜனாதிபதி கனவில் இருக்கின்றனர். தற்போதே ஆடையையும் தைத்துவிட்டனர். பரவாயில்லை, முடிந்தால் சஜித்துக்கு போட்டியாக மக்கள் சேவையை செய்யட்டும்.” – என மறைமுகமாக சொற்கணை தொடுத்துள்ளார் சஜித்.