இலங்கையரையும் பணயக் கைதியாக பிடித்துவைத்துள்ள ஹமாஸ்!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவித்துள்ளது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

வென்னப்புவவை சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஹமாஸின் தாக்குதலில் இலங்கை பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘2034’ உலகக்கிண்ணம் – கைவிட்டது ஆஸி.! வாய்ப்பை கோருகிறது சவூதி!!

2034 உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவது தொடர்பான ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலியா பின்வாங்கியுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதில் சவூதி அரேபியா தீவிரம் காட்டிவருகின்றது.

ஏலத்தை பெறுவது தொடர்பான வாய்ப்பை உறுதிப்படுத்த இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் சாதகமாக ஆராயப்படவில்லை என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதேபோல 2026 ஆசிய மகளிர் உலகக்கிண்ணம் மற்றும் 2029 கிளப் உலகக்கிண்ணம் ஆகியவற்றை நடத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளது

இந்நிலையிலேயே 2034 உலகக்கிண்ணத்தை நடத்தும் பொறுப்பை ஏற்பதற்கு சவூதி முன்வந்துள்ளது.

அம்பிட்டிய தேரர் குறித்து பிள்ளையானிடம் மனோ விடுத்துள்ள அவசர கோரிக்கை…!

” மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். சுமனரத்தின தேரர், அவர் தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

எனவே, அடுத்து நடைபெற உள்ள உங்களது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு அதிகாரபூர்வமாக, அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள்.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தவிசாளர், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தாம் இன்று நேரடியாக உரையாடியதாகவும் மனோ கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு,

” ஐசிசிபிஆர் என்ற சிவில் மற்றும் அர­சியல் உரிமைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வாய சட்டத்தின் 3 (1) உறுப்­பு­ரையில், எந்­த­வொரு நப­ராலும் யுத்­தத்தைத் தூண்­டவோ, வேறு­ப­டுத்தும் விதத்தில் எதிர்­வாதம் புரி­யவோ, அல்­லது வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதோ, ஒன்று திர­ளு­வதோ, இன, மத குரோ­தங்­களை முன்­னெ­டுப்­பதோ கூடாது என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு சிறைவாசங்களுக்கும், வழக்குகளுக்கும் முகம் கொடுக்கின்றனர்.

ஆனால், பல்லாண்டுகளாக மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளை கூறியும், வன்முறைளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது இச்சட்டம் இன்னமும் பாயவில்லை.

இச்சட்டத்திலிருந்து இவருக்கு இனிமேல் விலக்கு வழங்க முடியாது. இனி இது முடிவுக்கு வர வேண்டும். இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முதல்நாள் என்னிடம் உரையாடி உள்ளார். அதேபோல், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடன் நான் உரையாடினேன். தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, தேரர் பகிரங்கமாக கூறியுள்ளமை தொடர்பாக உண்மையை கண்டறியுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுவே முறைப்படி செய்யப்பட வேண்டிய காரியம் என நினைக்கிறேன்.

தனது இனவாத கருத்துகள் தொடர்பில் தேரர் மீது ஐசிசிபிஆர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வேறு விஷயம். அது சட்டம், ஒழுங்கு அமைச்சரின் பொறுப்பாகும்.

தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால் அனுமதிக்க முடியாது. தான் ஏதும் பிரச்சினையை எதிர்கொண்டால், அதற்கு தீர்வை தேட, முறைப்படியான மாற்று வழி இருப்பது தேரருக்கு விளங்க வேண்டும்.” – என்றார்.

” கருணை அடிப்படையிலாவது நிரந்தர விசா தாருங்கள்” – நடை பயணம் மேற்கொண்டுள்ள அகதி பெண்கள் கோரிக்கை!

ஆஸ்திரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் இன்று காலை ஆரம்பமானது.

சிட்னியில் இருந்து கன்பராவரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடை பயணத்தில் 17 பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

” ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும், நிரந்தர விசா வழங்கப்படாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக விசாவில் இருப்பதால் அவர்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ பல்கலைக்கழகம் நுழைவு உட்பட தமது எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.” – என்று நடை பயணத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தமது கோரிக்கையை ஏற்று நிரந்தர விசா வழங்குவதற்கு லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். கருணை அடிப்படையிலாவது அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஐ.நாவின் போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது இஸ்ரேல்!

” போர் நிறுத்தத்திற்கு தற்போது வழி இல்லை. ஹமாஸிற்கு எதிரான தாக்குதல் தொடரும்.” என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

“ போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரண் அடைவதற்கு ஒப்பானது. பயங்கரவாதத்திற்கு அடிபணிவது போலாகும். பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது.

அதே போல் இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் சண்டை நிறுத்தம் என்பதற்கு ஒப்புக்கொள்ள இயலாது” என்றார்.

அதேவேளை, மனிதாபிமான போர்நிறுத்தம்கோரி ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

‘போர்’ – முன்னாள் பிரதமர்களின் கூட்டறிக்கையை வரவேற்கிறது லிபரல் கட்சி!

இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையை பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வரவேற்றுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை Albanese அரசு அறிவிக்க வேண்டும் என்று நிழல் வெளிவிவகார அமைச்சரான Simon Birmingham வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல்மீதான ஹமாஸின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள், தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தனர். இரு நாட்டு தீர்வு யோசனையையும் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி அறிக்கை சக்தி வாய்ந்தது எனவும், எனவே, Albanese அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் நிழல் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேர்த்தில் ஹோட்டல் அறையில் இருந்து பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன?

பேர்த் கசினோ வளாகத்தில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணொருவர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

30 வயதுடைய பெண்ணொருவரே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அத்துடன், 40 வயதுடைய ஆணொருவரும் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த அறையில் இருந்துள்ளார் என WA பொலிஸார் தெரிவித்தனர்.

காயம் அடைந்திருந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்தான் இப்பெண்ணை கொலை செய்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

முதலில் பொதுத்தேர்தல்? சூடு பிடிக்கிறது இலங்கை அரசியல்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.

” எமது கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு நிமல் லான்சா பதில் வழங்கியுள்ளார். நெத்திலி மீன்களுக்கு நாம் பதிலடி கொடுக்கபோவதில்லை. அப்படியானவர்கள் சவால் விடுப்பதால் நாம் எதிரணியில் அமர வேண்டியதும் இல்லை. எதிரணிக்கு சென்று ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை.” -எனவும் அவர் கூறினார்.

முதுகெலும்பிருந்தால் எதிரணிக்கு சென்று பாதீட்டை எதிர்த்துகாட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.10.2023)

மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் இன்று நினைத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பீர்கள். நினைத்ததை சாதிக்காமல் விட மாட்டீர்கள். இன்றைய நாள் வெற்றிக்காகவே உங்களுக்கு பிறந்தநாள் போல செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி கடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சேமிப்பை உயர்த்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும்., வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும், இரண்டையும் சகஜமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். மேலதிகாரிகளே உங்களை ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் எதுவும் சரியாக நடக்காது. அதனால் மன உளைச்சல் ஏற்படும். கொஞ்சம் சோகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் பணம் நகைகள் இவற்றை பாதுகாப்பாக வைக்கவும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் சில பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பிக்கல் பிடுங்கள் பிரச்சினை எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு விட்டு, நிம்மதியாக தூங்குவீங்க. நல்ல சாப்பாடு இருக்கும். மற்றது எதைப் பற்றியும் மனது யோசிக்காது. குடும்ப விஷயங்களை மட்டும் மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் வரக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் இருக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் அந்தஸ்து உயரும். சொந்த தொழிலில் எதிர்பாராத வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணத்தின் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக நீங்கள் செய்யும் சின்ன தவறு பெரிய அளவில் பின் விளைவுகளை கொடுத்து விடும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை தடுக்கவும் வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியம் கெடும் படி கண்விழித்து ரொம்பவும் உடம்பை அலட்டிக்கொண்டு எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொலைபேசியின் மூலம் வரும் நல்ல செய்தி மணமகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் நல்ல பெயர் வாங்குவீங்க. தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வும் காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சனை தானாக வீடு தேடி வரும். அது உறவுகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாழ்க்கை துணை மூலமாகவும் கூட வரலாம். பிள்ளைகள் மூலமாகவும் இருக்கலாம். கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்து நிதானத்தோடு யோசித்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

மகரம்  -மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். தலைக்கு வேலை இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். பெரிதாக பிரச்சனை வர வாய்ப்புகள் இல்லை. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செய்திகள் சந்தோஷத்தை கொடுக்கும்‌. கொஞ்சம் கையில் இருக்கும் பணம் வீணாக செலவாகும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் மட்டும் சின்ன பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் எதையும் யோசிக்காமல் முடிவு எடுக்காதீங்க. அடம்பிடித்து சாதிக்க வேண்டாம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் சாதிக்க முடியாத விஷயங்களை இன்று சாதித்துக் கொள்வீர்கள். பேச்சாளர்கள், ஆசிரியர்கள், இவர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது, அடுப்பில் நின்று சமைக்கும் போது கவனம் தேவை.

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

NT மாநில அமைச்சரவை மறுசீரமைப்பு! இருவர் ‘அவுட்’!!

Northern Territory முதல்வர் Natasha Fyles தனது அமைச்சரவையை மறுசீரமைத்துள்ளார். இதன்படி அமைச்சரவையில் இருந்து இருவர் நீக்கப்பட்டுள்ளனர். புதிய இரு முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 தேர்தல் இலக்குவைத்தே இந்த மறுசீரமைப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சராக செயற்பட்ட Lauren Moss மற்றும் சிறு வணிகங்களுக்கான அமைச்சராக பதவி வகித்த Paul Kirby ஆகியோரே அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Joel Bowden, Brent Potte ஆகியோரே அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் நிலம் விழுங்கும் ஆஸி. நிறுவனம்! சிவில் அமைப்புகள் பரபரப்பு குற்றச்சாட்டு!!

” மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமொன்று அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம் மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான சாக்குப் போக்குகளின் கீழ் நிலத்தை கொள்வனவு செய்துவருகின்றது.”

இவ்வாறு மன்னார் பிரஜைகள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழு, விசேட ஊடக சந்திப்பை நடத்தியது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் குழுவின் பிரதிநிதி ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறியவை வருமாறு,

” மன்னாரில் மின்சார தேவைக்காக சோலார் பேனல்களை நிறுவுவதாக கூறி, குறைந்த விலையில் குடியிருப்பாளர்களின் காணிகளை நன்கு அறியப்பட்ட உள்ளூர்வாசிகள் கொள்வனவு செய்கின்றனர்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிட்டெட்டுக்கு தாது மணல் அகழ்வுக்காக விற்பதே உண்மையான காரணம்.

சுரங்கத் தொழில் தொடங்கினால், வரலாற்று, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் தீவின் அழிவை இது உணர்த்தும் என்பதை உள்ளூர்வாசிகள் உணர்ந்து வருகின்றனர்.

40 அடி வரையிலான சுரங்கங்களில் கணிசமான கடல் நீர் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்தும். இது மக்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் விவசாயத்துக்கு பொருந்தாது.

டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் மன்னாரின் கரையோர பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பவில்லை என ஆஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு பகிரங்கமாக அறிவித்தது. இதற்கும் காரணம் உள்ளது.

ஏனெனில் இலங்கையின் சட்டங்களில் அண்மைய மாற்றங்கள் காணி உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களில் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதிப்பதும் இதற்கு முன்னர் ஆய்வு உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.” – என்றனர்.

பிரதமர் பீஜிங்கில் களமிறங்க முன் சீனாவிடமிருந்து ஆஸி. எதிர்பார்ப்பது….?

பிரதமர் Anthony Albanese பீஜிங்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி பொருட்கள்மீதான எஞ்சிய கட்டுப்பாடுகளையும் சீனா தளர்த்தக்கூடும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

” இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டுவருவதால் எஞ்சியுள்ள அனைத்து வர்த்தக தடைகளையும் சீனா நீக்கும் என நம்புகின்றோம்.” – என்று விவசாய அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

சுமார் 1.2. பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான ஆஸ்திரேலியாவின் வயின் ஏற்றுமதிமீதான தடைகளை சீனா மீள்பரிசீலனை செய்துவருகின்றது, இது அமுலுக்குவர ஐந்து மாதங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலிய பிரதமர் எதிர்வரும் 4 ஆம் திகதி சீனா செல்ல திட்டமிட்டுள்ளார்.

“மக்கள் கொல்லப்படுவதை உலகம் ஏற்காது” – இஸ்ரேலிடம் ஆஸி விடுத்துள்ள கோரிக்கை…!

காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்குமாறு இஸ்ரேலிடம் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை உலகம் ஏற்காது – என்று வெளிவிவகார அமைச்சர் Penny Wong தெரிவித்தார்.

ஹமாஸ் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

முல்லைத்தீவு நீதிபதி பதவியைத் துறந்தாரா? பதவியைத் துறக்கச்செய்யப்பட்டாரா?

அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார். 

“இலங்கையில் மூன்று தரப்பிலான நீதிபதிகள் இருக்கிறார்கள். முதல்தரப்பினர் அழுத்தம் வந்தால் வரட்டும் நான் செய்வதைச்செய்வேன் எனத் துணிந்து செயற்பட்டு தொடர்ந்து பதவியில் இருக்கின்றவர்கள். இரண்டாவது தரப்பினர் யாரென்றால், பிழையானதைச் செய்ய விருப்பமில்லை – அழுத்தத்திற்கு இடங்கொடுக்க விருப்பமில்லை, ஆனால் அழுத்தத்திற்கு முகங்கொடுக்கவும் திராணியில்லை. ஆகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகிறவர்கள். மூன்றாவது தரப்பினர் மிகமோசமானவர்கள்.

அழுத்தத்திற்கு இடங்கொடுத்து அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கின்ற தரப்பினர். சிலவேளைகளில் இத்தரப்பிற்கு அழுத்தமே தேவையில்லை. எள்ளென்று கேட்டாலே எண்ணெயைக் கொண்டு சென்று கொடுக்கும் நீதிபதிகள் இருக்கிறார்கள்”.

இங்கே  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வகைப்படுத்தும் மூவகையறாக்களிலும், இரண்டாவது வகையறாவுக்குள் வருகிறார் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா. அதாவது பின்வரும் விடயங்களைக் குறித்துத் தான் நேசித்த பதவியைத் துறந்தார் அவர். தன் பதவி துறப்பு குறித்துப் பின்வருமாறு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். ”குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னை கண்காணித்துவந்தனர். சட்டமா அதிபர் (சஞ்சய் இராசரத்தினம்), என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023) ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார். குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீடு நீதிமன்றில் (Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.”

எனவே சட்டமா அதிபரினது அழுத்தத்தினாலும், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினாலும் தொடர்ந்தும் இங்கு வாழமுடியாத நிலையில் தன் பதவியைத் துறந்து புலம்பெயர்ந்தவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜா. இவ்வாறு அரச தரப்பின் அழுத்தங்கள் அவர் மீது அதிகரிக்க நீதித்துறை சார்ந்து அவர் சுயாதீனமாக – சட்டத்தின்படி செயற்பட்டமையே பிரதான காரணமாக இருக்கின்றது. அதன்படி அவருக்கு ஏற்பட்ட அதிக அழுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அவரால் வழங்கப்பட்ட இறுதித்தீர்ப்பே அமைந்திருக்க வேண்டும்.

பதவி துறப்பிற்கு முன்பாக அவர் வழங்கிய தீர்ப்பு

”…இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அவரது புகைப்படம் மற்றும் வர்ணக்கொடிகளைக் கொண்ட வாகனம் பேரணியாகச் செல்வதால் பொதுமக்களின் நல்லிணக்கத்திற்கு எவ்வாறு இடையூறு ஏற்படுகின்றது என்பதனை பொலிஸார் மன்றில் விளக்கமளிக்கத் தவறியுள்ளனர். மரணமடைந்த இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவரை நினைவுகூருவதென்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமையாகும். அதனைத் தடுப்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.  உண்மையில் இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒரு தியாக தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரை நினைவுகூருவதை தடை செய்வதாலேயே பொதுமக்களின் மத்தியில் அமைதியின்மை ஏற்படும் என மன்று கருதுகின்றது..”

என்றுமில்லாத வகையில் இந்த வருட தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த அரசதரப்புக் கடுமையாக முயற்சித்தது. திருகோணமலையில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக்கூட தடுக்க நடவடிக்கை எடுத்தது. அதுவும் சாத்தியப்படாத காரணத்தினால், இயலுமானவரைக்கும் நீதிமன்றங்களின் ஊடாக நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை போடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடும்பிரயத்தனம் எடுத்தது. அதற்கு உதாரணமாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முதல்நாள் பொலிஸார் மேற்கொண்ட தடையுத்தரவிற்கான வழக்கினை நீதிமன்றம் நிராகரி்க்க, இரண்டாம் நாள் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிறப்பு உலங்குவானூர்தியில் யாழ்ப்பாணம் வருகைதந்து, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினைத் தடுக்கப் போராடினர். அதுவும் பலனளிக்கவில்லை. வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு என எங்கேயும் நீதிமன்ற தீர்ப்புகள் அரசுக்கு சாதகமாக அமையவில்லை. ஒரு நீதிமன்றத்தை அவதானித்து மற்றைய நீதிமன்றங்கள் தமிழர்களுக்கு இருக்கும் நினைவேந்தல் உரிமை விடயத்தில் சரியாகச் செயற்பட்டன. எனவேதான் நீதிமன்றங்கள் ஊடாகத் தமிழர்களுக்கு அதிக நியாயத்தை வழங்கிய நீதிபதியொருவர் இலக்குவைக்கப்பட்டார். அச்சுறுத்தப்பட்டார். அந்த அச்சுறுத்தலோடு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.  

நீதிபதியின் பதவித்துறப்பிற்கும், நாட்டை விட்டு வெளியேற்றத்திற்கும் இதனைவிட இன்னொரு காரணமும் உண்டு. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்தான் அது. நீர்ப்பாசனக் கால்வாய் அமைப்பிற்கான பணிகளின்போது, எதேச்சையாக அகப்பட்ட மனித எச்சங்கள், அப்பகுதியில் முறைப்படியான அகழ்வாய்வை மேற்கொள்வதற்கான திறவுகோலாக அமைந்தன. அதற்காக துறைசார் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, ஒரு குழுவை அமைத்து, செலவினத்தைக் கணிப்பிட்டு, அதனையும் அரசிடமிருந்தே பெற்று அகழ்வு வேலைகள் தொடங்குவதற்கு முழுமூச்சாகச் செயற்பட்டது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றமே ஆகும். புலனாய்வாளர்களின் அதிகளவு கண்காணிப்பும், அச்சுறுத்தலும் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில், இத்தகையதொரு அகழ்வுப் பணியை சுயாதீனமானதொரு அமைப்போ அல்லது அரசின் வேறு ஏதாவது கட்டமைப்போ பொறுப்பேற்றிருப்பின் இவ்வகழ்வு வேலைகளுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைத் தமிழர்கள் அனைவருமே அறிவர்.

எனவே இதுவிடயத்தில் தமக்கிருக்கும் பொறுப்பை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றமும், அதன் நீதிபதி ரீ.சரவணராஜாவும் சரிவரச் செய்தனர். அகழ்வுப் பணிகள் இடம்பெற்று, அறிக்கை வந்தால் போதுமானது என நீதிபதி தன் கடமைகளோடு நின்றுவிடாது, நேரடியாக அகழ்வாய்வுப் பகுதிக்கு சென்று கண்காணிப்பிலும் ஈடுபட்டிருந்தார். ஆகவேதான் குறுகியதொரு காலப்பகுதிக்குள், 17 வரையான மனித எச்சங்கள் அகழப்பட்டன. இந்த மனித எச்சங்கள் இறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளினது என்பதற்கான அதிகளவு சான்றுகள் காணப்படுகின்றன. எனவே இலங்கை இராணுவம் இறுதிப்போரின்போது மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகின்றது – என்கிற வாதங்கள் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை முன்வைத்து எழுந்துவரும் நிலையில், அகழ்வுக் குழு தற்காலிகமாகத் தனது பணிகளை நிறுத்தி, அதன் முதற்கட்ட அறிக்கையை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவானிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்தது.

ஏற்கனவே குருந்தூர்மலை சட்டவிரோத பௌத்த விகாரை அமைப்பு தொடர்பான தீர்ப்புகள், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான தீர்ப்புகள் போன்றவற்றில் அரசுக்கு அதிரடி காட்டும் நீதிபதியிடம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரமும் சென்றுவிட்டது. முதல் இரண்டு விடயங்களுக்கும் அவர் வழங்கிய தீர்ப்புக்களில் இருந்து, மூன்றாவதான கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி விவகாரத்தில் எத்தகைய அறிவிப்பினை வெளியிடுவார் என்பதனை ஊகிக்க முடியும்.  எனவே இந்த அகழ்வுப் பணியின் அறிக்கை வெளிவரமுன்பே நீதிபதி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை.

எழுத்து – கோபி

 

‘இரு நாட்டு தீர்வை ஏற்கவும்’ – ஆஸி.யின் முன்னாள் பிரதமர்கள் கூட்டு அறிக்கை!

இஸ்ரேல் – பாஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக ‘இரு நாடுகள்’ என்ற முன்மொழிவு ஏற்கப்பட  வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல்மீது ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை கூட்டு அறிக்கை ஊடாக முன்னாள் பிரதமர்கள் கண்டித்துள்ளனர். அத்துடன், ஹமாஸால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

” ஹமாஸிற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அதேவேளை காசாவில் பொத மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று இஸ்ரேல் உறுதியளிக்கிறது, இதனை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம்.” – எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆஸி., ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்த முயற்சி தோல்வி!

ஆஸ்திரேலியாவுக்கும்,  ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் தோல்வியில் முடிந்துள்ளன என்று தெரியவருகின்றது. குறித்த உடன்படிக்கை இந்த காலப்பகுதியில் சாத்தியப்படாது என்று Albanese அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் G7 அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் Don Farrell, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.

எனினும், பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானதாக இருந்தால்தான் கைச்சாத்திடப்படும் என அரசு கூறியுள்ளது.

அதேவேளை, ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் முர்ரே வாட், மாட்டிறைச்சி, செம்மறி ஆடுகள், பால் மற்றும் சர்க்கரை ஏற்றுமதியாளர்களுக்கு போதுமான அணுகலை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தமது தரப்பில் இருந்து முன்வைத்த நிபந்தனைகளை தளர்திக்கொள்வதில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.10.2023)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். பொறுப்புடன் சில வேலைகளை எடுத்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் நீங்கள் போடும் முதலீடு இரண்டு மடங்கு லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. பண விஷயத்தில் உஷாரா இருங்க.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை நீங்களே செய்து முடித்து பாராட்டையும் பெறுவீர்கள். கூலி தொழிலாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாள் இது. தினசரி வருவாய் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். பெண்களின் மனது சந்தோஷப்படும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கப் போகின்றது. சிலபேருடைய பாராட்டுக்கள் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது நல்லது. கூர்மையான ஆயுதங்களை கவனமாக பயன்படுத்துவோம்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப குடைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது ஒருவர் உங்களை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன நல்லது செய்தாலும் அதற்கு கெட்ட பெயர் வாங்கி தர ஒரு கும்பல் இருக்கும். அதை பற்றி கவலைப்படாதீங்க. உங்களுடைய வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள். உங்கள் மனதிற்கு திருப்தி தரும்படி வேலைகளை செய்யும் போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவர்களை பற்றி இன்று நீங்கள் ஒரு துளி கூட கவலைப்பட கூடாது.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யக்கூடாது. இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கவனங்கள் சிதறும். எந்த ஒரு வேலையிலும் கான்சென்ட்ரேஷன் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். ஆகவே வேலைகளில் சின்ன சின்ன பிழையின் மூலம் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கலாம். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகளை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். சோர்ந்து போகக்கூடாது. துவண்டு போகக் கூடாது.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விவகரங்களில் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். பெரியவர்கள் சொல்படி கேளுங்கள். வியாபாரத்தில் முன்பின் தெரியாதவர்களுடைய ஆலோசனையை காதில் வாங்கிக் கொள்ளாதீங்க.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் முயற்சியை போட்டால் தான் வெற்றி கிடைக்கும். புது மனிதர்களை நம்ப வேண்டாம். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் இன்று காலை வைக்கக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாரா இருக்கணும். ஜாமின் கையெழுத்தும் போடக்கூடாது. குறிப்பாக முன்பின் தெரியாதவர்கள் உதவி என்று வந்து கேட்டால் செய்யாதீங்க. உங்களை ஏமாத்திட்டு போயிடுவாங்க.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் இருக்கும். மனசு ஏதோ கஷ்டத்திலேயே மூழ்கி இருக்கும். முகத்தில் சிரிப்பு இருக்காது. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஏதோ இன்றைய நாளை கடந்து செல்ல வேண்டுமே என்ற கவலையோடு இருப்பீங்க. மன உளைச்சலில் இருந்து வெளிவர குழந்தைகளோடு நேரத்தை செலவிடலாம். கோவிலுக்கு செல்லலாம். மனசுக்கு பிடிச்ச பாடல் கேட்கலாம். மனைவியுடன் மனம் விட்டு பேசலாம். நிச்சயம் மனது தெளிவு பெறும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அடுத்தவர்களை உதாசீனப்படுத்த கூடாது. சுயநலமாக எதையும் யோசிக்க கூடாது. அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டால், இன்று நன்மை நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலைகளில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடக்கம் மிக மிக அற்புதமாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.

 

‘போர் உக்கிரம்’ – அமெரிக்கா, ஆஸி. வெளிவிவகார அமைச்சர்கள் அவசர மந்திராலோசனை!

காசா நிலைவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் Antony Blinken உடன் ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் Penny Wong தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

காசாவுக்கான மனிதாபிமான உதவி திட்டங்கள், ஆஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இருவரும் உரையாடியுள்ளனர்.

” அமெரிக்கா, இஸ்ரேல் , எகிப்து மற்றும் பிராந்தியத்தில் செல்வாக்குமிக்க நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் பேச்சுகளை நடத்திவருகின்றது.” – என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

” லெபனானில் விமான நிலையம் மூடப்படலாம் – உடன் வெளியேறவும்” – ஆஸ்திரேலியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பிராந்தியத்தில் மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் Beirut விமான நிலையம் மூடப்படக்கூடும். எனவே , லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் உடன் வெளியேற வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் Penny Wong அறிவுறுத்தியுள்ளார்.

” மோதல் அதிகரித்தால் அது லெபனானை பெரிதும் பாதிக்கக்கூடும். விமான நிலையம் மூடப்படலாம். எனவே, தற்போதுள்ள வாய்ப்பை பயன்படுத்தி உடன் வெளியேறவும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய அரசால் உதவ முடியாத நிலை ஏற்படலாம்.” – எனவும் அவர் எச்சரித்துள்ளார்.