பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த பிரதமர்!

ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கிருந்த ஹோட்டலில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களின் செயற்பாட்டை பிரதமர் Anthony Albanese வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சிலர் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர். ஆளும் மற்றும் எதிரணி அரசியல் உறுப்பினர்களை அவர்கள் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மெல்பேர்ணில் தங்கி இருந்த ஹோட்டலுக்குள் சுமார் 20 பாலஸ்தீன ஆதரவாளர்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை இஸ்ரேல் தூதுரகமும் கண்டித்துள்ளது.

அத்துடன், விக்டோரியா மாநில premier, Jacinta Allanவும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

நயினாதீவில் வழிபாட்டில் ஈடுபட்டார் இந்திய தூதுவர்

யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே, இன்று நயினா தீவுக்கு சென்றார்.

நயினா தீவுக்கு விஜயம் செய்த அவர், நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்திய தூதுவருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

குடிவரவு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்து!

குடிவரவு அமைச்சர் Andrew Giles உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton.

காலவரையற்ற குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை, ‘பேரழிவை’ ஏற்படுத்தும் வகையில் அரசு கையாண்டுள்ளதாலேயே துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் குற்றவாளிகளும் உள்ளனர், எனவே, வலுவான தடுப்புச் சட்டங்களை முன்வைக்கும் பொறுப்பை அமைச்சர் தவறவிட்டுள்ளார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ள விவகாரம் ஆஸ்திரேலிய அரசியலில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் அரசியல் போரை ஏற்படுத்தியுள்ளது.

 

‘போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு – காசாவில் இருந்து வெளியேற 67 ஆஸ்திரேலியர்கள் முயற்சி”

இஸ்ரேல்  – ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், காசாவில் இருந்து வெளியேறுவதற்கு மேலும் 67 ஆஸ்திரேலியர்கள் முயற்சித்துவருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான தூதரக உதவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்கிவருகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான 4 நாட்கள் போர் நிறுத்தம் கடந்த 27 ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைய நேற்று முன்தினம் 9 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 10 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இஸ்ரேலில் இருந்து 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாட்கள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தன.

2 நாட்கள் போர் நிறுத்தம் இன்று முடிவுக்குவரும் நிலையில், அது மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரையடுத்து காசாவில் இருந்து இதுவரை 138 பேர் வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ஸிங்கர்(Henry Kissinger) தனது 100 ஆவது வயதில் காலமானார்.

அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1923ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர், 1938 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார்.

ஹென்ரி கிஸ்ஸிங்கர் 3 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளரின் இழப்பை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

தெற்கு ஆஸ்திரேலியாவில் நாஜி வணக்கம் செலுத்தினால் அபராதம் – சிறை தண்டனை!

நாஜி வணக்கம் மற்றும் நாஜி சின்னங்களுக்கு தடை விதித்துள்ள ஆஸ்திரேலிய மாநிலங்களின் பட்டியலில் தெற்கு ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

தடைவிதிப்பு தொடர்பான புதிய சட்டம் மாநில நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாஜி வணக்கம் செலுத்தினாலோ அல்லது நாஜி சின்னங்களை காட்சிபடுத்தினோலோ 20 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். இல்லையே 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

எனினும், கல்வி மற்றும் கலை நோக்கங்களுக்காக நாஜி சின்னங்களை பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, நாஜி வணக்கம் செலுத்துவதை தடைசெய்வதற்கு ஆஸ்திரேலியா மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நாஜி வணக்கம் செலுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

யூத எதிர்ப்பு மற்றும் இன வெறி செயற்பாடுகள் அதிகரித்துவரும் பின்னணியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே நாஜி வணக்கத்துக்கு தடை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

நாஜி சின்னங்களை விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கும் சட்ட ஏற்பாடு இவ்வருட ஆரம்பத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் திருத்தப்பட்டு அதில் நாஜி வணக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கிளர்ந்தெழுவார்கள்….! செல்வம் எச்சரிக்கை…!!

இறந்தவர்களை நினைவுகூருவதை தடுக்ககூட அடக்குமுறை கையாளப்படுகின்றது. இந்நிலைமை தொடருமானால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டாம் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் செல்வம் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” மன்னார் மாவட்டத்தில் நகரசபையை மாநகர சபையாக தரமுயர்த்த வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மடு பிரதேச சபையை தனி பிரதேச சபையாக தரமுயர்த்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் ஊடாகவும் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. இனியும் தாமதிக்காது எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மன்னார் அரச அதிபர் ஓய்வுபெற்றுள்ளார். புதிய அரச அதிபர் நியமனம் இன்னும் இடம்பெறவில்லை. அதற்கான நியமனமும் விரைவில் இடம்பெறவேண்டும்.

வன்னி மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு அரசியல் தலையீடும் காணப்படுகின்றது. அவர்கள் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும். அங்குள்ள அரச அதிகாரிகள் சிறப்பாக செயற்பட்டுவருகின்றனர்.

எமது மக்களின் காணிகளை பல பேர் அபகரிக்கும் சூழல் காணப்படுகின்றது. இராணுவமும் காணி கோருகின்றது. காணி உறுதி இல்லாமலும் மக்கள் வாழ்கின்றனர். எனவே, காணி கச்சேரி நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அதேவேளை, நில அபகரிப்பு, கடல் வள அபகிரிப்பு என எமது மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தொடர்கின்றன. இறந்தவர்களை நினைவுகூரும் விடயத்திலும் அடக்குமுறை கையாளப்படுகின்றது. இவ்வாறு அடக்குமுறை தொடர்ந்தால மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டாம்.” – என்றார்.

 

ஆஸியில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கான அறிவித்தல்….!

” இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துபவர்கள் (பாலஸ்தீன ஆதரவாளர்கள்) கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனையோரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்.”

இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் Penny Wong.

நாடாளுமன்றத்தில் இன்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் David Van இனால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவரின் குடும்பம் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நேற்றிரவு செல்வதற்கு முற்பட்டனர். இதனையடுத்து அந்த குடும்பம் மெல்பேர்ண் பொலிஸில் தஞ்சமடைந்தது.

இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கோரியுள்ளார்.

யாழில் சிறார்களுக்கு போராளிகளின் ஆடை? அறுவரிடம் வாக்குமூலம்!

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இதுவரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.11.2023)

மேஷம் – மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியானதாக இருக்கும். சந்திரன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு மன சந்தோசம் உண்டு. பல நாட்களுக்கு பிறகு சந்திக்க கூடிய நண்பர்கள், சொந்தங்கள் மூலம் மன நிறைவும், மகிழ்ச்சி உண்டாகும்.குழந்தைகளின் செயல் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இன்று குரு பகவான் வழிபாடு செய்யவும். வியாபாரிகளுக்கு இன்று சற்று பணத்தட்டுப்பாடு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் விவாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

ரிஷபம் – ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இன்று மாலை நேரத்தில் நீங்கள் சந்திக்கக்கூடிய நபர்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.கொடுக்கல் வாங்கலிலும், கடன் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் இருக்கக்கூடிய சஞ்சலங்கள், பய உணர்வுகள் நீங்கும். இன்று எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். உங்களின் பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தைக் கவனம் தேவை. இன்று ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது.

மிதுனம் – மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் மிதுன ராசியில் இருப்பதால் மனக்குழப்பங்கள் தீரும். இன்று குடும்ப உறவினர்கள், நண்பர்களே சந்திக்க உங்களின் குறைகள் தீரும். இன்று குடும்ப பிரச்சனை, திருமண தடை போன்ற விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.அரசியலில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.

கடகம் – கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிவபெருமான் வழிபாடு சிறந்தது. இன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். நீங்கள் கொடுத்த பணத்தை வசூல் செய்ய சாதக சூழல் உருவாகும். 12ஆம் இடத்தில் சந்திர பகவான் இருப்பதால் சற்று தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று மன நிம்மதி அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

சிம்மம் – சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொலைதூர பயணம் செய்பவர்கள், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று பிரயாணங்கள் செய்வோம் போது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கக்கூடிய முக்கிய நபர்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று நாள் முழுவதும் மனதிலும், உடல் நிலையிலும் தைரியம், தெம்பு உண்டாகும்.

கன்னி – கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றி செய்திகள் காத்திருக்கிறது. சகோதரன், சகோதரிகளின் உறவுகள் பலப்படும்.குடும்பத்தில் இருக்கக்கூடிய சொத்து தகராறுகளிலிருந்து ஒரு விடுபடலாம். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் மனநிறைவும், உற்சாகமும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

துலாம் – துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிம்மதியும், உற்சாகமும், தெளிவும் நிறைந்ததாக இருக்கும். இன்று காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு குறைகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம் – விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். என்று உங்கள் ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனமாக செயல்படவும்.நீங்கள் என்ன இருக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனமாக செயல்படவும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றியை சம்பாதிக்க முடியும்.
இன்று விநாயகர் வழிபாடு செய்வது அவசியம்.

தனுசு – தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.இன்று ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இருப்பதால் காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், சிலருக்கு திருமணம் கைகூட கூடிய நாளாகவும் அமைகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளான என்று விநாயகர் வழிபாடு செய்ய நன்மை உண்டாகும். இன்று விநாயகருக்கு தீபம் ஏற்றி, சிதறு தேங்காய் உடைக்க நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

மகரம் – மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிம்மதியும், சந்தோசங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் செய்வீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். பெண்களுக்கு பிறந்த வீட்டால் லாபங்கள் உண்டாகும்.இன்று உங்களின் மனக்குழப்பங்கள் தீரும்.

கும்பம் – கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு புதுவிதமான அனுபவங்களை தரக்கூடியதாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.இன்று காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. இன்று நாள் முழுவதும் மனதில் நிம்மதியும், சந்தோசமும் உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். குலதெய்வ பிரார்த்தனை செய்யவும்

மீனம் – மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று நாள் முழுவதும் மனக்குறைகள் இல்லாத நாளாக அமையும். சகோதர சகோதரிகளின் நல்ல ஆதரவு கிடைக்கும்.குடும்ப சொத்துக்கள், பணம் சார்ந்த விஷயங்களில் இருந்த குழப்பங்கள் சேர்ந்து நல்ல முடிவுகள் உண்டாகும். நல்ல முடிவுகள் உண்டாகும் நண்பர்களின் உதவி மன நிம்மதியை தரும். இன்று விநாயகர் வழிபாடு செய்யவும்.

 

 

 

 

 

 

புலிகள் அமைப்பின் சின்னத்துடன் மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞனுக்கு மறியல்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் அவ்வமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி,

” குறித்த நபர் குற்ற மனப்பான்மையுடன் குறித்த செயலை செய்யவில்லை விநோதமான முறையில் இதனை செய்துள்ளார், இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் செய்யவில்லை, குற்ற மனப்பான்மையுடன் செய்யாத குறித்த செயலுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வது நீதவானுக்கே பிணை வழங்க முடியாது போகலாம்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள அவகாசம் தேவை எனில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து குறித்த செயலில் தீய எண்ணம் இல்லை என்ற உண்மையை அறியலாம். – என்று வாதிட்டார்.

இந்நிலையில் சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மேலும் கால அவகாசம் கோரிய நிலையில் , சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு முழுமையான விசாரணை அறிக்கையை வழக்கின் அடுத்த தவணையின்போது சமர்பிக்க பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் , சந்தேக நபரை டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

“பீஜிங் – கன்பரா உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு”

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த இராஜதந்திரியும், சர்வதேச விவகாரப் பிரிவுக்கான தலைவருமான Liu Jianchao, வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஐ இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல், பிராந்திய அமைதி மற்றும் சர்வதேச சட்ட, திட்டங்கள் பற்றி இதன்போது வெளிப்படையாக என்று வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Liu Jianchao, எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton, நிழல் வெளிவிவகார அமைச்சர் Simon Birmingham ஆகியோருடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. பிரதமர் ஒருவர் பீஜிங் சென்றதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என சீன தரப்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 30 பாலஸ்தீனர்களும், 12 பணயக் கைதிகளும் விடுவிப்பு!

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது.

இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு , ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. 240 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலால், இஸ்ரேலில் ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர்.

இந்த சூழலில், எகிப்து, அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன.

இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பணய கைதிகள் அடுத்தடுத்த நாட்களில் விடுவிக்கப்பட்டனர். 4-வது நாளில் 11 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், கட்டார் நாட்டின் மத்தியஸ்த பேச்சின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதனால், பணய கைதிகள் விடுவிப்புக்கான சாத்தியமும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5-வது நாளான நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள், இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் ஆவர். அத்துடன், இரு வெளிநாட்டவர்கள், 10 இஸ்ரேலியர்கள் உட்பட 12 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

விரிவடைகிறது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி – அகழ்வு பணி நிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று  முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ   தெரிவித்தார்.

புதைகுழியானது கொக்கிளாய்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது.
இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார்.

இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.  நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும்  நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

ஆஸியில் ஆஸ்துமா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமா நோயினால் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 30 வீதமாக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் ஆண்டு ஆஸ்துமாவால் 355 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2022 இல் மரண எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய ஆஸ்துமா சபையால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 இறப்புகளில் 299 பெண்களும் 168 ஆண்களும் அடங்குவர். NSW மாநிலத்திலேயே அதிகமாக 147 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஆஸ்திரேலியாவில் மரண வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது.

” பெரும்பாலான ஆஸ்துமா இறப்புகள் தடுக்கக்கூடியவை. முறையான சிகிச்சை, மருந்து பயன்பாடு இன்மையால் சிலர் உயிரிழக்கின்றனர்.” – என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயணக் கைதிகள் குறித்து ஆஸி. எடுத்துள்ள முடிவு….!

ஹமாஸ் அமைப்பினரால் பயணக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினோம் –  என்று வெளிவிவகார அமைச்சர்  Penny Wong தெரிவித்தார்.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர் .

அத்துடன், பணயக் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு ஆஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்துகின்றது எனவும் வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 பேரையும் மீட்க பங்களிப்பு வழங்கிய ஆஸி. பேராசிரியருக்கு குவியும் பாராட்டுகள்!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முக்கிய தொழில்நுட்ப பங்களிப்பை – ஆதரவை வழங்கிய ஆஸ்திரேலி பேராசிரியருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

பேராசிரியர் Arnold Dix வை ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட பிரமுகர்களும் பாராட்டியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

கடந்த 12 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து நேற்று 17 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், நேற்று மாலை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அம்பியுலன்ஸ் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பட்டுள்ளனர்.

” இது ஒரு மகத்தான சாதனை. சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டுகள். அதேபோல முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய ஆஸ்திரேலியாவின் பேராசிரியருக்கும் சிறப்பு பாராட்டு.” – என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சமரில் களமிறங்க தயாராகிறது ராஜபக்ச அணி!

தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான ‘தேர்தல் பிரச்சார’ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் டிசம்பர் 15 ஆம் திகதி கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் வரவுள்ளன. புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன .

2024 வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் டிசம்பரில் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஜனவரிவரை ஒத்திவைக்கப்பட்டு, ஒருமாத கால விடுமுறை வழங்கப்படும்.

அந்த காலப்பகுதியிலேயே வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களில் ஈடுபடுவார்கள். எனவேதான் ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரசாரத்தில் இறங்குவதற்கு மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அடுத்தவருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் குறித்து வெளியாகியுள்ள தகவல் – வட்டி விகிதம் எகிறுமா?

ஆஸ்திரேலியாவின் பணவீக்க விகிதம் ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்ததைவிடவும் குறைவடைந்துள்ளது. இதனால் ரொக்க வட்டி விகிதத்தில் மத்திய வங்கி இம்முறை கை வைக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

செப்டம்பர் மாதம் நுகர்வோர் விலைச்சுட்டெண் 5.6 வீதமாக இருந்த நிலையில் ஒக்டோபர் மாதம் அது 4.9 வீதமாக பதிவாகியுள்ளது. எனினும், 5.2 விகிதமாக அமையும் என்றே பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.

மத்திய வங்கியின் இவ்வருடத்துக்கான இறுதிக் கூட்டம் அடுத்த செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளதால் வட்டி விகித அதிகரிப்பு இடம்பெறாது என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29.11.2023)

மேஷம் – மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானால் உங்களுக்கு மனநிறைவும், சந்தோஷமும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். முழுவதும் மன அமைதி கிடைக்கும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பு புதிய உறவு அல்லது நல்ல யோசனைகள் கிடைக்க கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் லாபத்திற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.

ரிஷபம் – மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானால் உங்களுக்கு மனநிறைவும், சந்தோஷமும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். முழுவதும் மன அமைதி கிடைக்கும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பு புதிய உறவு அல்லது நல்ல யோசனைகள் கிடைக்க கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் லாபத்திற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.

மிதுனம் – மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாப வாய்ப்புகள் கிடைக்கும். சந்திர பகவான் இன்று உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார். இதனால் மன அமைதி கிடைக்கும். இன்று விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை சந்தோஷத்தைத் தரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நேரம் அமையும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

கடகம் – கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலையில் வெற்றிகள் கிடைக்கும். சந்திர பகவான் 12ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் உங்களின் மன அமைதி குறையலாம். பல நாட்களாக இருந்து வரும். குடும்ப போராட்டங்களில் இருந்து விடுபட முடியும். இன்று நாள் முழுவதும் மன ஆரோக்கியமும், மன திருப்தியும் கிடைக்கும். கல்வியில் எதிர்பார்த்து வெற்றியை பெறுவீர்கள். புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம் – சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றிகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எடுத்த காரியத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்களுக்கு வழக்கு, விசாரணைகளில் இதுவரை இருந்த மனக்கவலைகள் தீரும். இன்று உங்கள் பணியிடத்தில் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். வியாபாரிகள் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நீங்கள் செய்யக்கூடிய வேலையில் முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் பெறுவீர்கள். புதன்கிழமை ஆன இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

கன்னி – கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்தோஷமும், நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய குடும்ப பாரமும் தீரும். இன்று நாள் முழுவதும் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள், செயல்கள் குடும்பத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். உறவினர்களின் வருகை சந்தோசத்தை தரும். குடும்ப விவகாரங்கள் வெற்றி பெறுவோம், பிரிந்து உறவுகள் ஒன்று சேரும். நண்பர்களின் உதவி மனதிற்கு திருப்தி தரக் கூடியதாக இருக்கும். எங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். கோபத்தை கட்டுப்படுத்தவும். இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் குறித்து விவாதிப்பீர்கள். மாலை நேரத்தில் திடீர் என பண பலன்கள் பெறுவீர்கள்.

துலாம் – துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் மனக்குறைகள் தீரும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. அதனால் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உங்களின் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று புதிய மனிதர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும். அவற்றை ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளவும். பிள்ளைகளின் தொடர்பான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று உங்கள் ராசியில் உள்ள விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கூடுதல் கவனமாக செயல்படவும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. புதிய விஷயங்களை தள்ளிப் போடலாம். இன்று நீங்கள் உங்கள் வேலைக்கான சரியான திட்டமிடலுடன் தொடங்க வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிவாலயத்தில் பச்சரிசி தானம் செய்வது நல்லது. புதிய வண்டி வாகனங்கள், சொத்துக்களை வாங்குவதை ஒத்தி வைக்கலாம். பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

தனுசு – தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய நாளில் சந்திர பகவான் ஏழாம் இடத்தில் இருப்பதால், காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் காதல் வாழ்க்கையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

மகரம் – மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு மனதில் சந்தோசமும், திருப்தியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசம் உண்டாகும். நண்பர்களை சந்திப்பதும், கிழக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, விருந்துகளில் பங்கேற்பது என மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் புதிய வருமானம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் பிசியாக இருப்பீர்கள்.

கும்பம் – கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குதூகாலமான நாளாக அமைகிறது. குடும்ப பாரங்கள் தீரும்.சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக அமைகிறது. எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் உண்டாகும். மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

மீனம் – மீன ராசி அன்பர்களுக்கு இன்று சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சொத்து தகராறுகள், நீண்ட காலமாக இருக்கும் வழக்குகள் போன்றவற்றில் இருந்து மூன்றாவது மனிதரின் தலையிட்டால் நல்ல செய்திகள் கிடைக்கும். பல மாதங்களாக இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் உங்களின் குடும்ப நண்பர்கள் மூலமாக கடன் தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பாக சில பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.