Alice Springs பகுதிக்கான ஊரடங்கு ஏப்ரல் 15 வரை நீடிப்பு?

NT மாநிலத்தில் பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதிக்கான இருவாரகால ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

Alice Springs இல் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவுக்குவருகின்றது.

எனினும், பாடசாலை விடுமுறை காலம் இன்னும் முடிவடையாததால் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 15 ஆம் திகதிவரை நீடிப்பது பற்றி ஆராயப்படுகின்றது.

இளைஞர் ஒருவரின் மரணத்தை அடிப்படையாகக்கொண்டு வன்முறை வெடித்ததால் இருவாரகாலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுமார் 30 ஆயிரம் பேர் வாழும் Alice Springs பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை இளைஞர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை மையப்படுத்தியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவைமீறிய சில இளைஞர்களை பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *