இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாசமும் அன்பும் நிறைய கிடைக்கும். உங்க மேல நிறைய பேர் அக்கறை காட்டுவாங்க. இன்றைய நாளை சந்தோஷமாக தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுப்பீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். நல்லது நடக்கும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். மண்டை பாரம் குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். அலட்சியமாக இருக்க மாட்டீர்கள். இதனால் உங்களைப் பார்த்து நிறைய பேர் பொறாமைப் படுவார்கள். உங்கள் மீது கண் திருஷ்டி வைப்பார்கள். அதற்கெல்லாம் இன்று நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு போனதும் திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்ளவும். உங்களுடைய வேலை இன்று பெரிய அளவில் நல்லபடியாக நடக்கும் கவலைப்பட வேண்டாம்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. எல்லா வேலையும் முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். சின்ன சின்ன வியாபாரி பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று அமோகமாக கல்லா கட்டுவீர்கள். சந்தோஷம் நிறைவாக இருக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை மிகுந்த நாளாக இருக்கும். எப்போது இந்த பிரச்சனை எல்லாம் முடியும், எப்போது நிம்மதி அடையப் போகின்றோம் என்று கொஞ்சம் யோசிச்சு கொண்டே இருக்க போறீங்க. கவலைப்படாதீங்க உங்களுக்கு நல்ல காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. பக்கத்தில் தான் இருக்கிறது. இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள் நல்லது நடந்துவிடும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிம்மதியை அடைவீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் உங்களை தொடர்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நல்லது நடக்கும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். அடுத்தவர்கள் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்பாகவே அதை நடத்தி காட்டி நல்ல பெயர் வாங்குவீங்க. முன்னேற்றம் நிறைந்த நாள் இது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் எதிர்காலத்துக்கு தேவையான நன்மைகளை செய்யலாம். முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன எதிரிகள் சின்ன சின்ன பகைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை யாரையும் பகைத்துக் கொள்ள பார்க்காதீர்கள் நட்புறவு பழகுவது எதிர்காலத்திற்கு நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பகை வருவதை தடுக்க முடியாது. பொறுமையாக பேசுங்க இன்னைக்கு முன்கோபம் வேண்டாம்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நிதி நிலைமையை உயர்த்தி கொடுக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழுங்கள். நல்லது நடக்கக்கூடிய நாள். சுப காரிய பேச்சுகள் தொடங்கும் சுப செலவுகளும் உண்டாகும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக அமையப் போகின்றது. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். பார்ட்னரோடு சேர்ந்து நட்புறவோடு நிறைய நல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். பெற்றவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அடுத்தவர்கள் மனது நோகும் படி நடந்து கொள்ளாதீங்க. உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு வாய் தான் பிரச்சனை. உங்களுடைய வாயை சரி செய்து விட்டால் போதும். வாழ்க்கை சரியாகிவிடும். நடக்கப் போகும் நல்லதை யாரிடமும் சொல்லாதீங்க. நடந்த நல்லதை பெருமையாக பேசாதீங்க. அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணைக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை செய்து காக்கா பிடிச்சு வைத்து கொள்ளுங்கள். இன்றைக்கான பிரச்சனை தான சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *