இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (02.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லா சுக போகங்களும் உங்களை தேடி வரும். நீங்கள் கேட்காமலேயே அடுத்தவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். இதனால் ஒரு ராஜாவைப் போல வாழக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு ராணியைப் போல வாழக்கூடிய பாக்கியமும் கிடைக்கும். எதிரிகளை எல்லாம் உங்கள் வசப்படுத்த இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முழுவதும் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். உங்களோடு சண்டை போட்டு வந்தவர்கள் கூட நட்புறவோடு பழகுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய முதலீட்டை தொழிலில் முதலீடும் செய்யலாம்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய தொழில் தொடங்குவது, புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போடுவது, போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான முன்னேற்றம் தரும் முயற்சிகளை இன்று மேற் கொள்ளுங்கள். புதுசாக ஏதாவது வகுப்புக்கு சேர்வதாக இருந்தால் இன்று சேரலாம். நல்லது நடக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக உங்களுடைய வேலை எல்லாம் முடித்து விடுவீர்கள். பொறுமையோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்வீர்கள். அலுவலக வேலையில் டென்ஷன் இருக்காது. தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை சமாளிக்க கொஞ்சம் தந்திரத்தோடு சிந்திக்கணும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளை நிம்மதியாக தொடங்குவீர்கள். வேலையில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள்ளே இருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு உங்களுடைய நாளை தொடங்கப் போகிறீர்கள். எந்த ஒரு வேலையையும் சுமையாக நினைக்க மாட்டீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்கும். மனது சந்தோஷம் அடையும். சுப செலவுகள் உண்டாக்கும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இன்றைய நாள் நகர்ந்து செல்லும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தகுதிக்கு ஏற்ற சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். ஆரோக்கியத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம் – விருச்சக ராசி காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்லது இன்று நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புதுசாக திருமணமானவர்களுக்கு சுப செய்திகள் உண்டு. அம்மா என்ற உயர்வை நீங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. சந்தோஷம் நிறைந்த மன மகிழ்ச்சி நிறைந்த நாள் இது.

தனுசு – தனுசு ராசிக்காரர்கள் இன்று குழப்பத்திலிருந்து உங்களுடைய மனதை தெளிய வைத்துக் கொள்வீர்கள். எந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவரலாம் என்று சிந்தித்து செயல்படுவீர்கள். இதனால் நிறைய வெற்றியை அடையலாம். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகளை நிலை வாசலுக்கு வெளியே விட்டு விட்டு வரவும். வேலையை டென்ஷனை கொண்டு வந்து வீட்டில் காட்டாதீங்க.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலை எதுவும் சுறுசுறுப்பாக நடக்காது. எல்லா வேலைகளையும் நாளை தள்ளி வைக்கக்கூடிய மனநிலை இருக்கும். ஆனால் நாளைய வேலை இரட்டிப்பாகும் அதை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை இன்றைக்கான வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி முடிப்பது உங்களுக்கு நல்லது.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று இளகிய மனதோடு சில விஷயங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களிடம் வந்து கஷ்டம் என்று சொன்னால், உங்களிடம் இருக்கும் பணத்தை சுலபமாக, அடுத்தவர்கள் ஏமாற்றி செல்வார்கள். அந்த அளவுக்கு நீங்க ஏமாளியா இருக்காதீங்க. அடுத்தவர்களுக்கு உதவி செய்யலாம் ஆனால் நாம் செய்யும் உதவி, நமக்கே பின்னாலில் பாதிப்பை கொடுத்து விடக்கூடாது உஷாரா இருக்கணும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்கள் கஷ்ட நஷ்டங்களை மனைவி பகிர்ந்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேல்ஸ்மேன் வேலையில் இருப்பவர்களுக்கு டார்கெட்டை முடிக்க நல்ல வாய்ப்புகள் வரும். நிதிநிலைமை சீராகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *