இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (03.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் இன்று பாராட்டு மழையில் நனைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பு உங்களை விட்டு எங்கும் போகாது. எதிலும் குழப்பம் இல்லாமல், தெளிவான ஒரு மனநிலையில் சிந்தித்து செயல்படும் உங்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். இன்று உங்களுடைய நாள் ரொம்ப ரொம்ப சந்தோஷமான நகர்ந்து செல்ல போகின்றது. இன்று மாலை மனைவி குழந்தைகளோடு அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மனவேதனையோடு இருப்பீர்கள். எடுத்த காரியம் சரியாக முடியாது. எல்லா வேலையும் கொஞ்சம் இழுப்படியாக இருக்கும். இருந்தாலும் துவண்டு போகக்கூடாது. காலையில் எழுந்தவுடன் இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்யவும். கோவிலுக்கு போயிட்டு முக்கியமான வேலையை தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். கூடுமானவரை முக்கியமான முடிவு எடுப்பதாக இருந்தால் அதை நாளை தள்ளிப் போடுங்கள்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையை அனுசரித்து செல்ல வேண்டும். யாரைப் பார்த்தாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் சண்டை என்று போகக்கூடாது. புதிய எதிரிகள் உருவானால் பிறகு எதிர்காலத்தில் பிரச்சனை வந்துவிடும். உங்களுடைய முன்னேற்றத்தை தடுப்பதற்கும் அந்த எதிரிகள் கூட காரணமாக இருப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்க. குறிப்பாக மேலதிகாரிகள் டீம் லீடர் இப்படி உங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்களை அனுசரித்து நடந்துக்கோங்க.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத நல்லது நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். மேலிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். மன திருப்தியோடு இந்த நாளை தொடங்குவீர்கள். எதிர்காலகத்திற்கு தேவையான சேமிப்புகளையும் செய்வீர்கள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க போகிறீர்கள். ராஜ உபச்சாரம் உங்களுக்கு இருக்கும். ஆனால் உபச்சாரத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை சிந்தித்து செயல்படுவோம். கடவுள் நமக்கு அளவுக்கு மீறி ஒரு நல்லதை செய்கிறான் என்றால் அதற்குப் பின்னால் வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே யோசிப்பவன், பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வான். அப்படித்தான் இன்றும் உங்களுக்கு சில விஷயங்கள் நடக்கும். யார் உங்களை பாராட்டி புகழ்ந்து பேசினாலும் அவங்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நில்லுங்க.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கூடுதல் உழைப்பை முதலீடாக போடுவீர்கள். அயராது வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். அதற்கு ஏற்ற பலனும் நிச்சயம் கிடைக்கும். கவலைப்படாதீங்க கணவன் மனைவிக்கடையையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும் அனாவசியமாக வாக்குவாதம் செய்யக்கூடாது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்றைய நாள் சூப்பராக தொடங்கப் போகின்றது. எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களைப் பின் தொடர்ந்த பண கஷ்டம் நீங்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தாய் மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களை நம்பி சில புதிய பொறுப்புகளை ஒப்படைத்தால் அதை தட்டிக் கழிக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமையை நிரூபித்து காட்டுங்கள். நல்லது நடக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. பழைய நட்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். கட்டுமான தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கமிஷன் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்க போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போடுவது போன்ற வேலையை இன்று செய்தால் நல்லது நடக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சாப்பிட்டால் உடனடியாக ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். கூடுமானவரை அதிகமாக வெயிலடிக்கும் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு தலை சுற்றும் மயக்கம் வரும் என்றால் கையில் ஒரு சாக்லேட் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய மனதை உங்களை சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மன நிம்மதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அரசாங்கத்துக்கு புறமான காரியத்தில் ஈடுபட வேண்டாம் நல்லது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *