‘புத்தாண்டு பகைமை’ – யாழில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இரு வாகனங்கள்…!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30 இற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்றும், ஆட்டோவொன்றும் இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்து என்ன? ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறும் மொட்டு கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அதேபோல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சி இரு அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என நாமல் உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டு கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: அதிகாரம் யார் வசம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக்கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவுசெய்யப்பட்டார். இக்கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.

இலங்கையில் அரசியல் களம் புகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்?

அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் ஊடாகவே இவர்கள் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

நடிகை ஒருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
அதேபோல தொழில்சார் நிபுணர்கள் சிலரும், முன்னாள் படை அதிகாரிகளும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். முன்னாள் இராணுவ தளபதி தயாரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளார். மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியிலும் பல பிரபல ங்கள் களமிறங்கவுள்ளன.

படகு கவிழ்ந்ததில் 96 பேர் பலி: கிழக்கு ஆபிரிகாவில் சோகம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர்.

தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு தப்பியோடுகையிலேயே இந்த பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

130 பேரை ஏற்றி கொண்டு படகொன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கியே குறித்த படகு நேற்றிரவு பயணித்தது.

மபுதோ,எரிவாயு வளம் அதிகம் கொண்ட மொசாம்பிக் நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக, 2017-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு தாக்குதல் நட த்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இதனால், ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முடியாமல் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். 10 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 96 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாட்டில் காலரா பரவுகிறது என தவறான தகவல் பரவிய நிலையில், மக்கள் அச்சமடைந்தனர். அது புரளி என தெரியாமல், அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் படகில் ஏறியுள்ளனர். ஆனால், படகில் போதிய இடவசதி இல்லாத சூழலில், கூட்ட நெருக்கடியால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்வு நலன்புரி நிலையங்களுக்கு பூட்டு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.

அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கையளிக்கும் நிகழ்வில் நேற்று (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கு 2025 இல் ஐ.நாவில் உயர் பதவி? – மஹிந்தவின் உறவினர் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2025 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரணிலுக்கு சர்வதேசத்தில் நல்லபெயர் வந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 2025 இல் ஐ.நாவில் ரணிலின் பெயர் இருக்கும். அந்த பதவிமூலம் எமது நாட்டுக்கும் கௌரவம் கிட்டும்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி அல்ல. அதற்கு அடுந்ந நிலையில் உள்ள பதவி. பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடலாம். இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது.” – என்றார்.

உதயங்கள் வீரதுங்க மஹிந்த ராஜபக்சவின் உறவினவாரார்.

பொதுவேட்பாளராக களமிறங்கும் சம்பிக்க?

அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது எனவும், அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பை எதிர்வரும்  ஜுலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்.” – என்றார்.

இலங்கையில் இரு பிரதான தேர்தல்கள் ஒரே நாளில்?

ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது சிறப்பாக அமையும். செலவுகளையும் கட்டுப்படுத்தலாம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற  ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறியவை வருமாறு,

“ இவ்வருடம் ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் என்பன நடத்தப்படும்.  இவ்விரு தேர்தல்களையும் முடிந்தால் ஒரே நாளில் நடத்துமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் கிட்டும்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது நல்லம். அதன்மூலம் செலவுகளையும் குறைத்துக்கொள்ளலாம்.  எந்தவொரு கட்சிக்கும் அநீதியும் ஏற்படாது.” – என்றார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (04.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையும் அரை மணி நேரம் முன்னாடியே தொடங்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பஸ் பிடிக்க அரை மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்புங்க. தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சின்ன சின்ன தாமதங்கள் ஏற்படும். அதன் மூலம் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பாத்து நடந்துக்கோங்க.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் செய்யும் இடத்தில் பார்ட்னரோடு சேர்ந்து நிறைய புதுப்புது யுக்திகளை அறிமுகப்படுத்துவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்‌ வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கப் போகின்றது. சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு கிடைக்கும். தொழிலில் நீங்கள் போட்ட முதலீடு பத்து மடங்க லாபத்தை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சந்தோஷமாக இந்த நாளை என்ஜாய் பண்ண போறீங்க. வாரா கடன் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் உயர தேவையான நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தவறவிடாமல் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை செய்யும் நேரத்தை கொஞ்சம் கூட்டிக் கொண்டால் போதும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். நேரத்தை வீணாக்காதீர்கள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷமாக இந்த நாளை தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எல்லா வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே முடிச்சிருவீங்க. பாஸ் கிட்ட நல்ல பெயர் வாங்குவீங்க. சில பேருக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கமிஷன் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளை சுறுசுறுப்பாக தொடங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்து நல்லபடியாக முடிக்க போறீங்க. சந்தோஷம் நிறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க. நீங்க எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டீங்க. அடம்பிடித்து சில விஷயங்களை சாதிக்க கூடிய நாள் தான் இன்று. உங்களுடைய மனசு உடம்பு எல்லாம் இரும்பு போல இருக்கும். தீர்க்கமான முடிவை எடுத்து திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு, நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பெருசாக பிரச்சனை வராது. உங்களுடைய வேலையை சரியா முடிச்சிடுங்க. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். கடனுக்கு நம்பி அடுத்தவர்களுக்கு பொருள் கொடுக்காதீங்க. கைக்கு காசு வந்த அப்புறம் பொருள் கொடுத்தால் போதும். நம்பிக்கையின் பேரில் எதுவும் இன்னைக்கு செய்யாதீங்க.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். நிறைய நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். குறிப்பாக பெண்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மாமியார் மருமகள் உறவு பலம் பெறும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் புதுசாக வேலைக்கு திட்டமிட வேண்டும். புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போட வேண்டும் என்றால் இன்னைக்கு அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பகையை சம்பாதிக்க கூடிய நிலை உண்டாகும். யாரிடமும் நீங்களே சண்டை போட போகாதீங்க. யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் நிற்காதீர்கள். நியாயத்தை கூட எடுத்து சொல்லாதீங்க. அமைதியாக இருங்க. வாயை மூடிக் கொள்ளவும். உங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும் நல்லது நடக்கும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலமை சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் எடையோடு இருப்பவர்கள் அதை குறைப்பதற்கான வழியை பாருங்கள்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எப்படிடா இந்த மாத செலவை சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வழியை ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான். செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் மாதக்கடைசியில் பிரச்சனை இருக்காது. மனைவி சொல்லே மந்திரம் என்று கேட்டு செயல்படும் மீன ராசிக்காரர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

33 வருடங்களுக்கு பிறகு முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் குடும்பத்தாருடன் சங்கமம்

இந்தியாவில் இருந்து இன்று தாயகம் திரும்பிய முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகிய மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர். மூவரும் முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்ப உறவினர்களும், அரசியல் பிரமுகர்களும் வரவேற்றனர். தற்போது தமது ஊர்களை நோக்கி புறப்படுகின்றனர்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (03.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் இன்று பாராட்டு மழையில் நனைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பு உங்களை விட்டு எங்கும் போகாது. எதிலும் குழப்பம் இல்லாமல், தெளிவான ஒரு மனநிலையில் சிந்தித்து செயல்படும் உங்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். இன்று உங்களுடைய நாள் ரொம்ப ரொம்ப சந்தோஷமான நகர்ந்து செல்ல போகின்றது. இன்று மாலை மனைவி குழந்தைகளோடு அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மனவேதனையோடு இருப்பீர்கள். எடுத்த காரியம் சரியாக முடியாது. எல்லா வேலையும் கொஞ்சம் இழுப்படியாக இருக்கும். இருந்தாலும் துவண்டு போகக்கூடாது. காலையில் எழுந்தவுடன் இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்யவும். கோவிலுக்கு போயிட்டு முக்கியமான வேலையை தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். கூடுமானவரை முக்கியமான முடிவு எடுப்பதாக இருந்தால் அதை நாளை தள்ளிப் போடுங்கள்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையை அனுசரித்து செல்ல வேண்டும். யாரைப் பார்த்தாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் சண்டை என்று போகக்கூடாது. புதிய எதிரிகள் உருவானால் பிறகு எதிர்காலத்தில் பிரச்சனை வந்துவிடும். உங்களுடைய முன்னேற்றத்தை தடுப்பதற்கும் அந்த எதிரிகள் கூட காரணமாக இருப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்க. குறிப்பாக மேலதிகாரிகள் டீம் லீடர் இப்படி உங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்களை அனுசரித்து நடந்துக்கோங்க.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத நல்லது நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். மேலிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். மன திருப்தியோடு இந்த நாளை தொடங்குவீர்கள். எதிர்காலகத்திற்கு தேவையான சேமிப்புகளையும் செய்வீர்கள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க போகிறீர்கள். ராஜ உபச்சாரம் உங்களுக்கு இருக்கும். ஆனால் உபச்சாரத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை சிந்தித்து செயல்படுவோம். கடவுள் நமக்கு அளவுக்கு மீறி ஒரு நல்லதை செய்கிறான் என்றால் அதற்குப் பின்னால் வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே யோசிப்பவன், பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வான். அப்படித்தான் இன்றும் உங்களுக்கு சில விஷயங்கள் நடக்கும். யார் உங்களை பாராட்டி புகழ்ந்து பேசினாலும் அவங்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நில்லுங்க.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கூடுதல் உழைப்பை முதலீடாக போடுவீர்கள். அயராது வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். அதற்கு ஏற்ற பலனும் நிச்சயம் கிடைக்கும். கவலைப்படாதீங்க கணவன் மனைவிக்கடையையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும் அனாவசியமாக வாக்குவாதம் செய்யக்கூடாது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்றைய நாள் சூப்பராக தொடங்கப் போகின்றது. எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களைப் பின் தொடர்ந்த பண கஷ்டம் நீங்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தாய் மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களை நம்பி சில புதிய பொறுப்புகளை ஒப்படைத்தால் அதை தட்டிக் கழிக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமையை நிரூபித்து காட்டுங்கள். நல்லது நடக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. பழைய நட்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். கட்டுமான தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கமிஷன் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்க போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போடுவது போன்ற வேலையை இன்று செய்தால் நல்லது நடக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சாப்பிட்டால் உடனடியாக ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். கூடுமானவரை அதிகமாக வெயிலடிக்கும் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு தலை சுற்றும் மயக்கம் வரும் என்றால் கையில் ஒரு சாக்லேட் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய மனதை உங்களை சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மன நிம்மதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அரசாங்கத்துக்கு புறமான காரியத்தில் ஈடுபட வேண்டாம் நல்லது நடக்கும்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்திற்கொண்டு இலங்கையுடன் கலந்துரையாடி இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவரான பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது இல்லை எனவும் இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகள் உள்ளிட்ட உடைமைகளை விடுவிக்கவும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு பணிக்குழுவின் 6 ஆவது கூட்டத்தை இந்தியா சார்பில் கூட்ட வேண்டும் என குறித்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

அதற்குள் தமிழக மீனவர்களின் அவல நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பணிக்குழு கூட்டத்தைக் கூட்டி, இலங்கையுடன் கலந்துரையாடி மிக விரைவாக பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மைத்திரிக்கு அடுத்த அடி!

“ ஏதேச்சதிகாரமாகவே நாம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். எனவே, கட்சி தலைவரின் முடிவை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.”

-இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து இவர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டாக ஊடக சந்திப்பொன்றை நடத்தி அது தொடர்பில் கருத்து வெளியிட்டனர்.

“ விசேட கூட்டம் என்றே கூறப்பட்டது. நிறைவேற்றுக்குழுவோ, மத்தியக்குழுவோ கூட்டப்படவில்லை. எனவே, நாம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை ஏற்புடையது அல்ல. கருத்துகளை முன்வைப்பதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நிமல் சிறிபாலடி சில்வா தொடர்பிலும் இவ்வாறு தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றார். நாமும் நீதிமன்றத்தை நாடுவோம்.

மைத்திரிபால சிறிசேன அண்மைய நாட்களில் மனக்கவலையில் இருப்பது புரிகின்றது. நாம் கட்சியில்தான் இருக்கின்றோம். உறுப்புரிமை நீக்கப்படவில்லை. சுதந்திரக்கட்சி என்பது தனி நபருக்குரிய சொத்து அல்ல.” – எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அரசியலில் பரபரப்பு: இறுதி அஸ்திரத்தை ஏவ தயாராகும் பஸில்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே இந்நடவடிக்கையில் அவர் இறங்குவார் எனத் தெரியவருகின்றது.

முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல்வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்ந்துவருகின்றது.

அவ்வாறானதொரு யோசனை நிறைவேறுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதுகூட 117 வாக்குகளே ஆளுங்கட்சிக்கு இருந்தது.

மொட்டு கட்சியில் சிலர் ரணில் பக்கம் நிற்கின்றனர். நிமல் லான்சா, அநுரயாப்பா உள்ளிட்ட குழுவினரும் ரணில் பக்கம் நிற்கின்றனர். சுதந்திரக்கட்சியினரும் ஜனாதிபதி பக்கமே உள்ளன.

எனவே, குறித்த பிரேரணைக்கு 113 பேரின் ஆதரவை பெறமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் இதொகா உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள்கூட ரணில் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளன.

இந்நிலையில் 113 ஐ பெறமுடியுமா என ஆராயப்பட்டுவருகின்றது, அதற்கான வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏப்ரல் இண்டாம்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13 மற்றும் புலிகள் குறித்து கனடாவில் அநுர கூறியது என்ன?

“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் மீண்டுமொரு போர் ஏற்படாது, புலிகள் மீண்டெழுவார்கள் என தெற்கில் மாயை உருவாக்கப்படுகின்றது, அதற்கான சாத்தியமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், 13 பிளஸ் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. மாகாணசபை முறைமை இதற்கு தீர்வு அல்ல என்றே நாம் கருதுகின்றோம். எனினும், மாகாணசபை முறைமை தற்போது அம்மக்களின் (தமிழ் மக்களின்) உரிமை. எனவே, அதனை தற்போது இல்லாது செய்ய முடியாது. அப்படியானால் தற்போது என்ன செய்ய வேண்டும்?

மாகாணசபை முறைமை தமது அரசியல் உரிமையென அம்மக்கள் (தமிழ்மக்கள்) ஏற்கின்றனர் எனில், அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதனை அம்மக்களின் உரிமையாக உறுதிப்படுத்த வேண்டும். நாம் அதைச் செய்வோம். இந்த முறைமை தீர்வா, இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.

தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கப்படும் வியூகம் மாகாணசபை முறைமையென மக்கள் கருதினால் அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

எமது நாட்டில் வடக்கில் மீண்டுமொருமுறை யுத்தம் ஏற்படவே ஏற்படாது. வடக்கில் உள்ள பெற்றோர், போருக்காகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்ற மாiயை தெற்கில் தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

அதன்காரணமாகவே புலிகள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றனர். அவ்வாறு நடக்காது.

வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்கு அனுப்ப முற்படவில்லை. தெற்கில் உள்ள பெற்றோர்போலவே கல்வி வழங்கவும், சிறந்த தொழிலை பெற்றுக்கொடுக்கவும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்வுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. தெற்கில்போன்று வடக்கிலும் பிரச்சினைகள் உள்ளன. 30 வருடகால போரால் வடக்குக்கான நிறைய வாய்ப்புகள் இல்லாமல்போயுள்ளன. எனவே, அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டம் அவசியம். ஏனெனில் 30 வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன.

அரசியல் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகள் என இரண்டுக்கும் தீர்வுகள் அவசியம். வடக்குக்கு சென்றாலும், தெற்கில் இருந்தாலும் இதையே நாம் கூறிவருகின்றோம். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயார்.” – என்றார்.

45 பேரை பலியெடுத்த கோர பஸ் விபத்து……..!

தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார்.

பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது என தெரியவருகின்றது.

யாத்திரிகள் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே இன்று (28) 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக விதித்த நீதிபதி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதம் விதித்தார்.

தேரர் என்ற வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தனது கைகளை பிடித்து சம்பந்தன் கூறியது என்ன? கனடாவில் அம்பலப்படுத்திய அநுர

இலங்கை பிரஜை என்றபோதிலும் இலங்கையில் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்வதற்கு தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னிடம் கூறினார். அந்த கருத்து நியாயமானது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கனடாவில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில்தான் சில காலம் அமர்ந்திருந்தார். அவரின் சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் எமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருநாள் எனது கைகளை பிடித்துக்கொண்டு சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

“அநுர நான் இலங்கையர் பிரஜை என உரத்தகுரலில் சர்வதேசத்திடம் கூற தயார். ஆனால் இலங்கையில் இரண்டாம் பிரஜையாக வாழத்தயாரில்லை.” – என்றார். இது நியாயமானது.
அதேபோல ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே என்னிடம் ஒருநாள், “ அநுர இந்த நாட்டில் என்னால் அமைச்சுபதவி மட்டுமேவர முடியும். அந்த இடத்துக்கு வந்துவிட்டேன்.” – எனக் கூறினார்.

தனது மொழி, மதம், இனத்தால் தன்னால் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என அவர் உணர்ந்திருந்தால் அவ்வாறானதொரு நிலை ஏற்புடையது அல்ல.

எனவே, இனம், மத, மொழி, கலாசாரம் சுதந்திரம்போல அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை நாம் ஏற்கின்றோம்.” – என்றார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (27.03.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் கொஞ்சம் பயம் இருக்கும். ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பீங்க. ஆனால் யோசித்த பிறகும் அதை தொடங்குவதற்கு தைரியம் இல்லாமல் அப்படியே முயற்சிகளை கைவிட்டு விடுவீர்கள். உங்களுடைய மடியில் கனம் இல்லாத போது, வழியில் பயம் இருக்க தேவையில்லை. நேர்மையாக இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளுக்காக உங்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்போதும் போல உங்களுடைய வேலையை பார்க்கவும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகள் கொஞ்சம் மனதில் இருக்கும். குடும்பத்தை எப்படி சமாளிப்பது. வரக்கூடிய வருமானத்தை வைத்து செலவை எப்படி பிளான் செய்வது என்ற சிந்தனைகள் நிறைய ஓடிக் கொண்டே இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு இன்றைய தினம் கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். எதை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், மட்டும் நல்லது நடந்து விடாது. உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள் வருமானம் தானாக உயரும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வருமானத்தில் பிரச்சனை இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் சில பேர் கடன் வாங்குவீங்க. எதிர்பாராத செலவு கழுத்தை நெறிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க. அடுத்த மாதம் இந்த பிரச்சனை சரியாகிவிடும். குறைந்த வட்டியில் தேவையான அளவு மட்டும் பணத்தை கடன் வாங்கினால் பிரச்சனை இல்லை.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலையிலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். புதிய முதலீட்டின் மூலம் லாபத்தை காண்பீர்கள். அது மட்டும் இல்லாமல் புதுப்புது யோசனைகளை தொழிலில் அறிமுகப்படுத்தி முன்னேறுவதற்கான வழியை தேடுவீர்கள்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை சமாளிக்க முடியாமல் குழப்ப நிலையில் இருக்கும்போது உங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் வருவார்கள். நண்பர்களின் அருமை பெருமைகளையும் உறவுகளின் அருமை பெருமைகளையும் புரிந்து கொள்வீர்கள். எதிரிகளாக நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நல்லது செய்வாங்க. இன்றைய நாள் இறுதியில் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுபமானநாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுபகாரிய தடை விலகும் சுப செலவுகள் ஏற்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய நல்ல ஆரம்பங்களுக்கு இன்று பிள்ளையார் சுழி போடலாம். வேலையில் உங்களோடு எதிர்த்துப் போட்டி போட்டு வந்தவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகிவிடும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் இருக்கும். இதனால் மனம் சோர்ந்து போவீர்கள். நம்மால் எதையுமே செய்ய முடியவில்லை என்று சில பேர் வாழ்க்கையை வெறுத்து பேசுவீர்கள். அப்படியெல்லாம் கிடையாது. எல்லா நாளும் வெற்றி நம்மிடம் இருந்தால் அதற்கான மதிப்பை நாம் இழந்து விடுவோம். வெற்றியோடு சேர்ந்த தோல்விகளும் நமக்கு நிறைய அனுபவ படங்களை சொல்லித் தரும் கவலைப்படாதீங்க.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களோடு இன்று நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்க போகின்றது. நீங்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியெல்லாம் உங்களுடைய வாழ்க்கை மாறும். அதற்கான முயற்சிகளை இன்று செய்வீர்கள். ராஜாவைப் போல வாழ வேண்டும் என்று நினைத்தால் வாழலாம். ராணியை போல வாழ வேண்டும் என்று நினைத்தால் வாழலாம். ஆனால் இதற்கு எல்லாம் கூடுதல் முயற்சி தேவை சும்மாவே இருந்தா நிச்சயம் எதுவும் நடக்காது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் உழைத்த கஷ்டத்திற்கு இன்று பலன் கிடைக்கும். நீங்க என்னதான் நல்லது செய்தாலும் அடுத்தவர்களிடம் கெட்ட பெயர் தான் எடுப்பீங்க. அதேதான் இன்னைக்கும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை பற்றி கவலைப்படாதீங்க. குறிக்கோளில் மாற்றம் வேண்டாம். வாழ்க்கை பயணத்தை ஏறு முகத்தில் அப்படியே ஏற்றி விடுங்கள். நிச்சயம் கடவுள் உங்கள் பக்கம் துணை இருப்பான்.